Latest Updates
-
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும்
'குவாரண்டைன் மலச்சிக்கல்' என்றால் என்ன? இதிலிருந்து விடுபடுவது எப்படி?
மலச்சிக்கல் என்பது வயிறு தொடர்பான ஒரு பிரச்சைனை, அதாவது ஒருவருக்கு மலம் கழிப்பதில் ஏற்படும் சிக்கலே மலச்சிக்கல் எனப்படுகிறது. ஆரோக்கியமற்ற சூழ்நிலை காரணமாக சாப்பிடும் சாப்பாடு சரியாக ஜீரணமாவதில் சிரமம
கொரோனா வைரஸ் நமது பரப்பரப்பான வாழ்க்கைக்கு மட்டுமல்ல, நமது ஆரோக்கியம் மற்றும் உடல் ஃபிட்னெஸிற்கும் தடை போட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கிட்டதட்ட வீட்டுக் காவலில் இருப்பது போலவே நம்மை மாற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுதல், சுத்தமாக இருத்தல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால், பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். வீட்டிலிருந்து வேலை செய்வதால் என்ன நடக்கும் என்பது நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். காலையில் தாமதமாக எழுந்திருப்பது, பிற்பகலில் குட்டித் தூக்கம் போடுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, சோம்பேறித்தனம் ஆகியவை இவற்றுள் சில.
இவற்றுக்கு இடையில் குவாரண்டைன் மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில், மலச்சிக்கல் மற்றும் ஜீரணப் பிரச்சனைகளால் பெரும்பாலான மக்கள் கஷ்டப்படுகின்றனர். குவாரண்டைன் மலச்சிக்கல் என்றால் என்ன? இதிலிருந்து விடுபடுவது எப்படி? இதற்கெல்லாம் பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லாக்டவுனும்.. மலச்சிக்கலும்..
மலச்சிக்கல் என்பது வயிறு தொடர்பான ஒரு பிரச்சைனை, அதாவது ஒருவருக்கு மலம் கழிப்பதில் ஏற்படும் சிக்கலே மலச்சிக்கல் எனப்படுகிறது. ஆரோக்கியமற்ற சூழ்நிலை காரணமாக சாப்பிடும் சாப்பாடு சரியாக ஜீரணமாவதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு சாப்பாட்டை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. முறையற்ற தூக்கம், சரியான உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம் ஆகியவையும் இதற்கு காரணங்களாகும்

மலச்சிக்கலுக்கு என்ன காரணம்?
* நமது உடலின் சர்க்கேடியன் இசைவில் (circadian rhythm) தொந்தரவு ஏற்படும் போது இந்தப் பிரச்சனை உருவாகிறது. நமது உடலின் இயற்கை கடிகாரம் (Natural Clock) அல்லது உயிரியல் கடிகாரம் என்பது தூக்கம்- எழுந்திருத்தல் சுழற்சியை முறைப்படுத்துகிறது.
* உங்கள் வயிற்றுக்கு ஒரு முறையான சுழற்சி உள்ளது. உங்கள் ஷெட்டியூல் (schedule) காரணமாக இது பாதிக்கப்படுகிறது. லாக்டவுன் காலங்களில், பொரும்பாலான மக்கள் இந்தப் பிரச்சனையால் துன்பப்படுகின்றனர்.
* குவாரண்டைன் காரணாமாக வெளியில் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளதால், கொரோனா நோய் வருவதற்கு முன்னர், நாம் வழக்கமாக பின்பற்றிய ஷெட்யூலை பின்பற்ற முடிவதில்லை என்பது இதற்குக் காரணமாகும்.
மலச்சிக்கலுக்கு என்ன காரணம் என்பது இப்போது நமக்குத் தெரியும். இதில் இருந்து விடுபட என்ன வழிகள் என்பதைப் பார்ப்போம்.

மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட வழிகள்:
தேவையான அளவு தண்ணீர் குடித்தல்
* வீட்டில் இருப்பதாலும், வியர்ப்பது இல்லை என்பதாலும், உங்கள் உடலில் தேவையான நீர் மூலக்கூறுகள் (hydrates) இருக்கும், அதனால் தண்ணீர் குடிக்கத் தேவையில்லை என்பது அர்த்தம் இல்லை.
* நாள் முழுவதும் உங்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம். பல உடல் பிரச்சனைகளுக்கு, அதிலும் முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைக்கு தண்ணீர் ஒரு சிறந்த தீர்வாகும்.
* சாதாரண தண்ணீர், எலுமிச்சை ஜூஸ் (லெமொனேட்), இளநீர் அல்லது பழ ஜூஸ் ஆகியவற்றைக் குடிக்கலாம். சோடா, மதுபானம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் உணவுப் பழக்கத்தைக் கவனித்தல்
* வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, நாம் அதிகமாக தின்பண்டகளும் (snacks), உணவுகளும் சாப்பிடுகிறோம். ஆனால், சுறுசுறுப்பாக இருப்பது குறைவு.
* நம்மில் பலர் மளிகைப் பொருட்கள் வாங்கும் போது, திண்பண்டங்களையும் (snacks), உடனடியாக சமைக்கக்கூடிய உணவுப் பொருட்களையும் அதிகமாக வாங்குகிறோம்.
* மேலும் இரண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பசி எடுப்பதால், சமையலைறைக்குச் சென்று எதையாவது எடுத்துக் கொறித்துக் கொண்டே இருக்கிறோம். இவைதான் மலச்சிக்கலைத் தூண்டுகிறது.

நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுதல்
* மலச்சிக்கல் வராமல் தடுக்க, அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* குடலில் இருந்து மலம் எளிதாக வெளியேறுவதற்கு நார்ச்சத்துள்ள உணவுகள் உதவுகின்றன.
* தானிய வகைகள், பயறு வகைகள், பருப்பு வகைகள், கீரை மற்றும் பழங்கள் ஆகியவற்றை சாப்பிடுவது சிறந்தது.

உங்களை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்து கொள்ளுங்கள்
* உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் மூன்றாவதாக செய்ய வேண்டிய முக்கியமான மாற்றம் உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது.
* நீங்கள் சாப்பிடும் அளவிற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். வீட்டில் எளிதான உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
* சாப்பிட்ட பின்னர், மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ அல்லது புல்வெளியிலோ நடப்பது சிறந்தது.
* தினமும் 30 நிமிடங்கள் நடனம் ஆடுங்கள். யோகா பயிற்சிகள் செய்வதும் நல்லது. சோம்பலைத் தவிர்ப்பதற்கு அலுவலக வேலைக்கு இடையில் வீட்டு வேலைகளையும் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications