For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா?

சிறுநீரகங்களில் ஏற்படும் ஒரு வகையான நோய்த்தொற்று தான் பைலோனெப்ரிடிஸ் எனப்படும் சிறுநீரக நுண்குழலழற்சி. இந்த வகை அழற்சி பொதுவாக சிறுநீர்ப்பையில் தொடங்கி, இரண்டு சிறுநீரகங்களுக்கும் பயணிக்கும்.

|

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் சிறுநீரகங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஏனெனல் இவை தான் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முக்கிய பணியைச் செய்பவை. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதாலோ என்னவோ சிறுநீரகங்களில் எளிதில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறுநீரகங்களில் ஏற்படும் ஒரு வகையான நோய்த்தொற்று தான் பைலோனெப்ரிடிஸ் எனப்படும் சிறுநீரக நுண்குழலழற்சி. இந்த வகை அழற்சி பொதுவாக சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர் வடிகுழாயில் தொடங்கி, இரண்டு சிறுநீரகங்களுக்கும் பயணிக்கும்.

Pyelonephritis: Symptoms, Causes, Risk Factors And Preventions

இந்த வகை சிறுநீரக தொற்றுக்களுக்கு ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பின் இந்த சிறுநீரக தொற்று நிரந்தரமாக சிறுநீரகங்களை பாதிக்கும் அல்லது தொற்றை உண்டாக்கிய பாக்டீரியாக்கள் இரத்த நாளங்களின் மூலம் உடல் முழுவதும் பரவி, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும்.

இந்த வகை சிறுநீரக தொற்றுக்கு ஆன்டிபயாடிக்குகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பெரும்பாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும்.

முதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

இப்படிப்பட்ட சிறுநீரக நுண்குழலற்சியைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தமிழ் போல்ட்ஸ்கை சிறுநீரக நுண்குழலற்சியின் அறிகுறிகள், காரணங்கள், ஆபத்து காரணிகள் போன்றவற்றைக் கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்:

அறிகுறிகள்:

சிறுநீரக நுண்குழலற்சியின் அறிகுறிகளாவன:

* காய்ச்சல்

* குளிர்

* முதுகு, பக்கவாட்டு அல்லது இடுப்பு வலி

* அடிவயிற்று வலி

* அடிக்கடி சிறுநீர் கழிப்பது

* கடுமையான துர்நாற்றத்துடனான சிறுநீர் வெளியேற்றம்

* சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் அல்லது வலி

* குமட்டல் மற்றும் வாந்தி

* இரத்தம் அல்லது சீழ் கலந்த சிறுநீர்

* மங்கலான சிறுநீர்

எப்போது மருத்துவரைக் காண வேண்டும்?

எப்போது மருத்துவரைக் காண வேண்டும்?

உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் பல நாட்களாக தெரிந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். ஒருவேளை மருத்துவர் சிறுநீரக பாதை தொற்றிற்கான ஆரம்ப கால சிகிச்சை அளித்தும், எவ்வித பலனும் தெரியாவிட்டால், உடனே மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும்.

கடுமையான சிறுநீரக தொற்று உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். அதிலும் சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் கலந்திருந்தாலோ, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தெரிந்தாலோ, உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

காரணங்கள்

காரணங்கள்

உடலில் இருந்து சிறுநீரை கொண்டு செல்லும் குழாய் வழியாக சிறுநீரக பாதையில் நுழையும் பாக்டீரியாக்கள், அப்படியே பெருக்கமடைந்து சிறுநீரகங்களுக்கு பயணிக்கலாம். இதன் விளைவாக சிறுநீரக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் ஈ.கோலை என்னும் பாக்டீரியா தான் தொற்றுக்களை உண்டாக்கும். இருப்பினும் எந்த ஒரு தீவிரமான பாக்டீரியாக்கள் இரத்தநாளங்களில் நுழைந்தாலும், அது சிறுநீரகங்களுக்குப் பரவி, அதன் விளைவாக கடுமையான சிறுநீரக நுண்குழலற்சி உண்டாகலாம்.

யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது?

யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது?

பெண்களுக்கு...

ஆண்களை விட பெண்களின் சிறுநீர்க்குழாய் சிறியது என்பதால், பாக்டீரியாக்கள் எளிதில் வெளியே இருந்து சிறுநீர்ப்பைக்கு பயணிக்கிறது. சிறுநீர்க்குழாய் பெண்ணின் யோனிக்கு மிகவும் அருகில் இருப்பதாலும் பாக்டீரியாக்கள் எளிதில் நுழைகிறது.

ஒருமுறை சிறுநீர்ப்பையில் தொற்றுக்கள் ஏற்பட்டுவிட்டால், சிறுநீரகங்களில் எளிதில் பாக்டீரியாக்கள் பரவிவிடும். பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு தான் இந்த அபாயம் அதிகம் உள்ளது.

சிறுநீரக பாதையில் அடைப்பு

சிறுநீரக பாதையில் அடைப்பு

சிறுநீர் வெளியேறுவதில் தாமதம் அல்லது சிறுநீர்ப்பையால் சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாமல் போகும் நிலைகளான சிறுநீரக கற்கள் இருந்தாலோ, அசாதாரண சிறுநீரக பாதை வடிவம் அல்லது ஆண்களுக்கு விரைவீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், சிறுநீரக நுண்குழலற்சிக்கான அபாயம் அதிகம் உள்ளது.

பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்

பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்

சர்க்கரை நோய் மற்றும் எச்.ஐ.வி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும். இத்தகையவர்களுக்கு சிறுநீரக நுண்குழலற்சிக்கான அபாயம் அதிகம் உள்ளது.

சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள நரம்பு பாதிப்பு

சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள நரம்பு பாதிப்பு

நரம்பு அல்லது முதுகெலும்பு சேதம் உள்ளவர்களுக்கு சிறுநீர்ப்பை தொற்றின் உணர்ச்சிகளே தெரியாது. இதனால் அவர்களுக்கு சிறுநீர்ப்பை தொற்று ஏற்பட்டிருப்பதே தெரியாமல் போகக்கூடும்.

சிக்கல்கள்

சிக்கல்கள்

சிறுநீரக நுண்குழலற்சிக்கு சிகிக்கை மேற்கொள்ளாமல் இருந்தால், நோய்த்தொற்று தீவிரமாகி, பின் எதிர்பார்க்காத சில சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும். அவையாவன:

சிறுநீரக வடு

சிறுநீரக வடு

இது நீண்டகால சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

இரத்த விஷம் (செப்டிசீமியா)

இரத்த விஷம் (செப்டிசீமியா)

சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து கழிவுகளை வடிகட்டி, வடிகட்டிய இரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்குத் திருப்பி விடுகின்றன. சிறுநீரக நோய்த்தொற்று இருந்தால், இரத்த ஓட்டத்தில் பாக்டீரியா உடல் முழுவதும் பரவிவிடும்.

கர்ப்ப சிக்கல்கள்

கர்ப்ப சிக்கல்கள்

கர்ப்ப காலத்தில் சிறுநீரக நோய்த்தொற்று இருக்கும் பெண்களுக்கு குறைந்த எடை கொண்ட குழந்தைகளை பிரசவிக்கும் ஆபத்து அதிகமாக இருக்கும்.

தடுக்கும் வழிகள்:

தடுக்கும் வழிகள்:

சிறுநீரக நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், அதற்கு ஒருசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். குறிப்பாக பெண்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

#1

#1

அதிகளவு நீர் அல்லது திரவங்களைப் பருக வேண்டும். இதனால் உடலில் இருந்து பாக்டீரியாக்களானது சிறுநீரின் வழியே வெளியேறிவிடும்.

#2

#2

சிறுநீரை அடக்குவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி அடக்காமல் உடனே வெளியேற்றினால், சிறுநீர்ப்பையில் இருந்து பாக்டீரியாக்கள் பரவாமல் இருக்கும்.

#3

#3

உடலுறவு கொண்ட பின், உடனே சிறுநீரைக் கழிக்க வேண்டும். இதனால் சிறுநீர்ப் பாதையில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேற்றப்பட்டு, நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pyelonephritis: Symptoms, Causes, Risk Factors And Preventions

Kidney infections or pyelonephritis are varieties and types of infections that involve the urinary tract. Learn about symptoms, causes, risk factors and prevention of Pyelonephritis. Read on...
Story first published: Wednesday, September 18, 2019, 16:00 [IST]
Desktop Bottom Promotion