For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகளை கண்டு கொள்ளாமல் விடாதீர்கள்... இது ஒரு மோசமான கோளாறாக கூட இருக்கலாம்...

|

நமது உடலில் பல சமயங்களில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன அல்லது அனுபவிக்கப்படுகின்றன. இப்படி தோன்றும் சில உடல் அறிகுறிகளை நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறோம். இவை ஒரு நோயின் தீவிர அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

அதிலும் மன அழுத்தம் என்று வரும் போது ஒவ்வொருவரும் பாதிக்கப்படும் விஷயமாக உள்ளது. ஆனால் எரிச்சலுடன் கூடிய மன அழுத்தம் உடல் உபாதைகளை உண்டாக்க நேரிடும். எனவே சில அறிகுறிகளை நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டால் பின்னாளில் அனிஸிட்டி/அதீத பதட்டம் கோளாறு (Anxiety Disorder) ஏற்பட வாய்ப்புள்ளது.

MOST READ: ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...

இந்த அனிஸிட்டி மற்றும் மன அழுத்தம் தற்போதைய வாழ்க்கையில் ஒரு பெரிய பங்காக இருந்து வருகிறது. இது நமக்கு ஏகப்பட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்தி ஆபத்தைக் கூட விளைவித்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனிஸிட்டி கோளாறுக்கான காரணங்கள்

அனிஸிட்டி கோளாறுக்கான காரணங்கள்

ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் இது போன்ற அனிஸிட்டி பிரச்சனைகள் உள்ளன. அவை நமக்கு பதட்டத்தை ஏற்படுத்தும். மன அழுத்தம் நமக்கு முன்னால் சில நம்பிக்கையற்ற சூழ்நிலைகளை உண்டாக்குகின்றன. இந்த சூழ்நிலையில் நீங்கள் எடுக்கும் முடிவு தவறானதாக மட்டுமே இருக்கும்.

இயற்கை வழியில் எப்படி தீர்ப்பது?

இயற்கை வழியில் எப்படி தீர்ப்பது?

* தினசரி பழக்கங்களை வழக்கப்படுத்திக் கொண்டு நன்றாக தூங்க முயலுங்கள்

* யோகா மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வாருங்கள்

* சமூக செயல்பாட்டில் ஈடுபடுங்கள்

* தினசரி 1/2 மணி நேரம் உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்யுங்கள்.

* இப்படி இருந்த போதிலும் உங்களுக்கு முன்னேற்றங்கள் தென்படா விட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

மன அழுத்தம் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான சிகிச்சைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். கீழ்க்கண்ட சிகிச்சை நிலைகள் உதவியாக இருக்கும்

* சைக்கோதெரபி

* பேமிலி தெரபி

* போதை மருந்துகள் தெரபி

உங்களுடைய மனநிலையை பொருத்து இதில் எதாவது ஒரு தெரபியை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இந்த மூன்று முறைகளிலும் சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. மன அழுத்தத்திலிருந்து ஒருவரை மீட்க எவ்வளவு காலம் ஆகும் என்பது அவர்களின் ஒத்துழைப்பு, நோயாளியின் ஆளுமை மற்றும் குடும்ப சூழ்நிலையை பொறுத்தது. எனவே மன அழுத்தத்தை வலுவான மன நிலையுடன் எதிர் கொண்டால் சரிசெய்து விடலாம்.

வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்

வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்

உதாரணமாக ரீமா மற்றும் சீமா என்ற இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இருவரும் பஸ்ஸை பிடிக்க வேகமாக ஓடி வருகிறார்கள். ஆனால் பஸ் அவர்களுக்கு முன்னால் புறப்பட்டு விடுகிறது. ஆனால் சீமா உடனே தனது மேலாளருக்கு தான் வருவது தாமதமாகும் அடுத்த பஸ்ஸிற்காக காத்திருக்கிறேன் என்று மெசேஜ் அனுப்பி விடுகிறார். இதே சமயம் ரீமா பதட்டப்பட்டு ரோட்டை கடந்து அங்குள்ள ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி டென்ஷனுடன் ஆபிஸ்க்கு செல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் இந்த சந்தர்ப்பத்தை ரீமா எதிர்கொண்ட விதம் முற்றிலும் தவறானது. ஏகப்பட்ட டென்ஷனுடன் இதை அணுகுகிறார். நாம் எல்லாரும் இந்த மாதிரியான விஷயங்களில் தான் ஈடுபடுகிறோம். ஒரு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண நினைத்து மன அழுத்தத்தில் மூழ்கி போய் விடுகிறோம்.

இந்த வேறுபாடு மனிதரின் ஆளுமை மற்றும் வளர்ப்பை பொறுத்து மாறுபடுகிறது. மகிழ்ச்சியான குடும்ப சூழ்நிலையை பெற்றிருப்பவர்கள், அதிலிருந்து வந்தவர்கள் எந்தவொரு செயலையும் நம்பிக்கையுடன் அணுகுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Never Ignore These Signs Of Generalized Anxiety Disorder

Being stressed and irritated for a long time may be a sign of Generalized Anxiety Disorder. Read on to know more about this health condition...