For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க டீ அதிகமா குடிக்கிறீங்களா? அப்ப உங்க உயிருக்கு ஆபத்தான இந்த நோய் வர வாய்பிருக்காம்...!

தேநீர் மற்றும் காஃபின் உங்கள் மனநிலையை மேம்படுத்தும் மருந்து, அதனால்தான் ஒரு கோப்பை சூடான தேநீருக்குப் பிறகு நாம் நிம்மதியாக உணர்கிறோம்.

|

குளிர்காலத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம், அனைத்து சூடான பானங்களையே நாம் அதிகம் விரும்புகிறோம். இந்தியாவில், ஒரு கப் சூடான தேநீருடன் சில தின்பண்டங்களைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. சிலர் டீயையே தங்கள் உணவாகவே கொண்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் டீ முக்கியமானதாக இருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து டீயை தனியாக பிரிக்க முடியாது. டீயின் மீதுள்ள அன்பு சில சமயங்களில் குளிர்காலத்தில் ஒரு நாளில் எவ்வளவு கப் சாப்பிடுகிறோம் என்பதை நாம் மறந்துவிடுவோம். இருப்பினும், இவ்வளவு கப் தேநீரைக் குடித்தால், உங்கள் உடலுக்குள் எவ்வளவு காஃபின் செல்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?

many cups of Chai can do to your body in winter in tamil

இல்லை. எனில், அது நிச்சயமாக உங்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையான முறையில் பாதிக்கிறது. பொதுவாக தேநீர் வகைகள் ஆரோக்கியத்திற்கு நல்லது ஆனால் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். ஒரு நாளில் சாப்பிடும் டீ எண்ணிக்கையை ஏன் குறைக்க வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கல்

மலச்சிக்கல்

உங்களில் பலர் இதை உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் 2-3 கப் தேநீர் குடிப்பதால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தேநீரில் தியோபிலின் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது செரிமானத்தின் போது நீரிழப்பு விளைவை ஏற்படுத்தும். இது உங்கள் உடலில் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இது முற்றிலும் எதிர்மாறான குடல் இயக்கத்தை தூண்டுகிறது. மேலும், இது உங்களுக்கு வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

தூக்கக் கோளாறு

தூக்கக் கோளாறு

தேநீர் மற்றும் காபியில் காஃபின் உள்ளது. மேலும் அதிகப்படியான உட்கொள்ளல் உங்கள் மூளைக்கு தூங்குவதற்கான சமிக்ஞையை அனுப்பும் மெலடோனின் ஹார்மோனில் நேரடியாக தலையிடுகிறது. அதிகப்படியான காஃபின் மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியைத் தடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக உங்களுக்கு தூக்க கோளாறு பிரச்சனை ஏற்படலாம்.

கவலை மற்றும் அமைதியின்மை

கவலை மற்றும் அமைதியின்மை

தேநீர் மற்றும் காஃபின் உங்கள் மனநிலையை மேம்படுத்தும் மருந்து, அதனால்தான் ஒரு கோப்பை சூடான தேநீருக்குப் பிறகு நாம் நிம்மதியாக உணர்கிறோம். இருப்பினும், நாம் அதிகமாக காஃபின் உட்கொள்ளும் போது, அது இதயத் துடிப்பு, அமைதியின்மை மற்றும் தூக்கமின்மை தொந்தரவுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் ஒரு நபருக்கு கவலையையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும்.

ஆசிட் ரிஃப்ளக்ஸ்

ஆசிட் ரிஃப்ளக்ஸ்

காலையில் டீயை முதலில் உட்கொள்ளக் கூடாது என்று பலமுறை வாதிடப்படுகிறது, அது உடலில் ஒரு பெரிய அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். நீங்கள் ஒரு நாள் முழுவதும் 2-3 கப் தேநீர் அருந்தும்போதும் இதுவே நடக்கும். பகலில் அதிகப்படியான காஃபின் வயிற்றில் அமிலத்தை உருவாக்கும், இது உங்களுக்கு மோசமான கனவுகளை ஏற்படுத்தும்.

புற்றுநோயை உண்டாக்கும்

புற்றுநோயை உண்டாக்கும்

இது குறிப்பாக ஆண்களுக்கானது, ஏனெனில் அதிகமாக தேநீர் அருந்தும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து அதிகம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆதலால், தேநீரை அளவோடு அருந்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

many cups of Chai can do to your body in winter in tamil

Here’s what too many cups of Chai can do to your body in winter in tamil.
Desktop Bottom Promotion