Latest Updates
-
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம்
குணப்படுத்த முடியாத 'அரிவாள் செல் நோய்' பற்றிய சில முக்கிய தகவல்கள்!
நமக்கு இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் என்றால் இரத்த சோகை, இரத்த புற்றுநோய் மட்டும் தான் தெரியும். ஆனால் இரத்தம் சம்பந்தப்பட்ட மற்றொரு முக்கியமான ஒரு நோய் உள்ளது. அது தான் அரிவாள் செல் நோய்.
உலகில் எத்தனையோ புது புது நோய்கள் உள்ளன. நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பது பாதி தான். தெரியாதது தான் ஏராளம். ஆம், நமக்கு இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் என்றால் இரத்த சோகை, இரத்த புற்றுநோய் மட்டும் தான் தெரியும். ஆனால் இரத்தம் சம்பந்தப்பட்ட மற்றொரு முக்கியமான, அதே சமயம் இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத ஆபத்தான ஒரு நோய் உள்ளது. அது தான் அரிவாள் செல் நோய் எனப்படும் அரிவாள் செல் சோகை.

இந்த கட்டுரையில் அரிவாள் செல் நோய் என்றால் என்ன? அவற்றின் அறிகுறிகள் என்ன? அவற்றை எந்த உணவுகளின் மூலம் கையாளலாம் என்பன போன்ற முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அரிவாள் செல் நோய்
அரிவாள் செல் சோகை அல்லது அரிவாள் செல் நோய் என்பது இரத்த சிவப்பணுக்களின் மரபணு நோயாகும். சாதாரணமாக இரத்த சிவப்பணுக்கள் வட்ட வடிவில் தட்டையாக, சிறிய இரத்தக் குழாய்களிலும் எளிதில் பயணிக்கும் வண்ணம் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும். ஆனால் அரிவாள் செல் நோயின் தாக்கம் இருந்தால், இரத்த சிவப்பு அணுக்கள் அசாதாரணமான அரிவாள் வடிவில் இருக்கும். மேலும் இது பிசுபிசுப்புடன், இரத்தக்குழாய்களின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு, உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக வலி மற்றும் திசு பாதிப்பை ஏற்படும்.

அரிவாள் செல் நோயின் அறிகுறிகள்
அரிவாள் செல் சோகையின் அறிகுறிகள் பொதுவாக இளம் வயதிலேயே தெரிய ஆரம்பிக்கும். இந்நோயின் தாக்கம் இருந்தால், 4 மாத குழந்தையாக இருக்கும் போதே தெரியும். அரிவாள் செல் நோயில் பல வகைகள் உள்ளன. அனைத்துமே ஒரே மாதிரியான அறிகுறிகளையே கொண்டிருக்கும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து வேறுபடும்.
* இரத்த சோகையினால் அதிகளவு சோர்வு அல்லது எரிச்சலுணர்வு
* சிறுநீரக பிரச்சனையினால் படுக்கையை நனைப்பது
* மஞ்சள் காமாலையினால் மஞ்சள் நிற கண்கள் மற்றும் சருமம்
* கைகள் மற்றும் கால்களில் வீக்கம் மற்றும் வலி
* அடிக்கடி நோய்த்தொற்று
* மார்பு, முதுகு, கைகள் அல்லது கால்களில் வலி
அரிவாள் செல் நோயை முழுமையாக குணப்படுத்த எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவர்கள் வேண்டுமானால், நோயின் அறிகுறிகளைக் கொண்டு மருந்துகளைப் பரிந்துரைப்பார். ஆனால் டயட்டில் ஒருசில மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த கோளாறைக் கையாளலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்
பல்வேறு வகையான நற்பதமான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள், கேரட், காளான்கள், அஸ்பாரகஸ், ஆப்பிள், தக்காளி மற்றும் குடைமிளகாய் போன்றவற்றை உண்பது மிகவும் நல்லது.

புரோட்டீனுக்கு 'நோ' சொல்லாதீர்கள்
புரோட்டீன் செரிமானமாவதற்கு கடினமாக இருக்கலாம். அதற்காக அதனை முழுமையாக தவிர்க்கக்கூடாது. புரோட்டீன் நிறைந்த உணவுகளான முட்டை, சால்மன் அல்லது மத்தி, கல்லீரல் அல்லது உறுப்பு இறைச்சிகள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.

ஆரோக்கியமான கொழுப்புக்கள்
ஆரோக்கியமான கொழுப்புக்கள் இரத்த சோகையினால் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனத்தைக் குறைக்க உதவும். இத்தகைய கொழுப்புக்கள் தேங்காய் எண்ணெய், ஆவில் ஆயில், பால், அவகேடோ, நட்ஸ், விதைகள், ஆர்கானிக் வெண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

ஃபோலேட் நிறைந்த உணவுகள்
ஃபோலேட் உணவுகள் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும். இத்தகைய ஃபோலேட் கொண்டைக்கடலை, பீன்ஸ், பருப்பு வகைகள், பசலைக்கீரை, கல்லீரல் மற்றும் உறுப்பு இறைச்சிகளில் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அவகேடோ, பீட்ரூட், ப்ராக்கோலி மற்றும் அஸ்பாரகஸ் போன்றவற்றிலும் உள்ளது. ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமில சப்ளிமெண்ட்டுகளும் உதவி புரியும்.

நீரைப் பருகவும்
உடல் வறட்சி நிலைமையை மோசமாக்கும். சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம். எனவே தினமும் போதுமான அளவு நீரைப் பருகுங்கள். இதனால் உடல் வறட்சி மற்றும் எலக்ட்ரோலைட்டு ஏற்றத்தாழ்வுகளும் தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications