For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லைசோசோம் சேமிப்பக நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

லைசோசோம் சேமிப்பக நோய்கள் 50 அரிய நோய்களின் ஒரு குழுவாகும். அவை ஒவ்வொரு 5,000 பேரில் ஒருவரை பாதிக்கின்றன.

|

உலகில் நமக்கு தெரியாத பல விசித்திரமான நோய்கள் உள்ளன. அதில் சில நோய்களைப் பற்றி நம்மில் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். இதற்கு காரணம் இவை மிகவும் அரியதாக நூற்றில் ஒருவரைத் தாக்கும் அரிய வகை நோய்களாகும். இதில் பல அரிய நோய்களுக்கு அதை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி அரிய வகை நோய்களுள் ஒன்று தான் லைசோசோம் சேமிப்பக நோய்.

Lysosomal Storage Disease: Causes, Symptoms, Diagnosis, And Treatment

லைசோசோம் சேமிப்பக நோய்கள் 50 அரிய நோய்களின் ஒரு குழுவாகும். அவை ஒவ்வொரு 5,000 பேரில் ஒருவரை பாதிக்கின்றன. இந்த 50 அரிய நோய்கள் இதயம், தோல், மூளை, எலும்புக்கூடு மற்றும் மத்திய நரம்பு மண்டலம் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளை பாதிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லைசோசோம் சேமிப்பக நோய்கள் உண்டாகக் காரணம் என்ன?

லைசோசோம் சேமிப்பக நோய்கள் உண்டாகக் காரணம் என்ன?

லைசோசோமல் சேமிப்பக நோய் என்பது ஒரு பரம்பரை கோளாறு ஆகும். உடலின் உயிரணுக்களில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடைக்க உதவும் குறிப்பிட்ட நொதிகளின் பற்றாக்குறை இருக்கும் போது இந்த நோய் ஏற்படும். இந்த நொதிகளின் பற்றாக்குறை காரணமாக, உடலில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பை உடைக்க இயலாது. இதனால் உடல் அணுக்களில் உள்ள லைசோசோம்களில் செயல்பாட்டில் இருக்கும் நொதிகளின் இந்த கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சேமிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, உடலின் இயல்பான செயல்பாடு சீர்குலைகிறது. இது லைசோசோமல் சேமிப்பக நோயை ஏற்படுத்தும்.

வகைகள்

வகைகள்

மிகவும் பொதுவான லைசோசோம் சேமிப்பகக் கோளாறுகளாக அறியப்படுபவை, கௌசர் நோய், ஃபேப்ரி நோய், ஹண்டர் நோய்க்குறி, நெய்மன்-பிக் நோய், டே-சாக்ஸ் நோய் மற்றும் கிளைகோஜன் சேமிப்பு நோய் II (பாம்பே நோய்) ஆகியவை ஆகும்.

லைசோசோம் சேமிப்பக நோயின் அறிகுறிகள்:

லைசோசோம் சேமிப்பக நோயின் அறிகுறிகள்:

எந்த நொதி காணவில்லை என்பதைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும், அவற்றில் சில அறிகுறிகள் பின்வருமாறு..

* கை, கால்களில் வலி, உணர்வின்மை அல்லது எரியும் உணர்வு

* உடல் வலி

* காய்ச்சல்

* சோர்வு

* கணுக்கால், கீழ் கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம்

* வயிற்றுப்போக்கு

* மலச்சிக்கல்

* சுவாசிப்பதில் சிரமம்

* சிவப்பு அல்லது ஊதா தோல் புண்கள்

* தலைச்சுற்று

* காதுகளில் ரீங்காரம் மற்றும் காது கேளாமை

* மாரடைப்பு மற்றும் பக்கவாதம்

* மூட்டு வலி

* கண் பிரச்சனைகள்

* இரத்த சோகை

* விரிவாக்கப்பட்ட மண்ணீரல் மற்றும் கல்லீரல்

* வலிப்பு

* தசை பலவீனம்

* நடப்பதில் சிரமம்

* தசை பிடிப்பு

லைசோசோம் சேமிப்பக நோயைக் கண்டறிதல்:

லைசோசோம் சேமிப்பக நோயைக் கண்டறிதல்:

இந்த நோயைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு வகை லைசோசோம் சேமிப்பக நோய்களிலும் அறிகுறிகள் வேறுபடுகின்றன. இருப்பினும், இரத்த பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ மற்றும் பயாப்ஸி போன்ற சில நோயறிதல் பரிசோதனைகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

லைசோசோம் சேமிப்பு நோய்க்கு சிகிச்சை:

லைசோசோம் சேமிப்பு நோய்க்கு சிகிச்சை:

இந்த நோய்க்கு எந்த தீர்வும் இல்லை. இருப்பினும், சில சிகிச்சைகள் உள்ளன, அவற்றில் பின்வருவன அடங்கும்:

என்சைம் மாற்று சிகிச்சை - இதில் காணாமல் போன நொதியை நரம்பு வழியாக மாற்றும் நரம்பு ஊடுருவல்கள் (IV) அடங்கும்.

ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை - காணாமல் போன என்சைம்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உயிரணுக்களின் எண்ணிக்கையை வழங்குவதன் மூலம் லைசோசோம் சேமிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lysosomal Storage Disease: Causes, Symptoms, Diagnosis, And Treatment

Lysosomal storage disease is an inherited disorder that occurs when there is a lack of specific enzymes that help break down fats and carbohydrates in the cells of the body.
Desktop Bottom Promotion