For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள்...இந்த பிரச்சனைகள் இருந்தா அலட்சியமா இருக்காதீங்க...!

கோவிட்-19 இன் ஆரம்ப அறிகுறிகளாக வாசனை மற்றும் சுவை இழப்பு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு ஆதரிக்கிறது

|

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்தது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை உலகளவில் 1 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 19,072 ஆக உயர்ந்து 605 பேர் உயிரிழந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கொரோனா வைரஸைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் வைரஸைப் பற்றி ஒரு புதிய ஆய்வு வெளிவருகிறது. மிக சமீபத்தில், ஒரு ஆய்வு வாசனை அல்லது சுவை இழப்பது கொரோனா வைரஸ் நோயின் (கோவிட்-19) ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது.

loss of smell and taste a new symptom of covid-19

இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவை கொரோனா வைரஸைக் கண்டறிந்த பிறகு கவனிக்க வேண்டிய பொதுவான அறிகுறிகள் என்று சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஓட்டோலரிங்காலஜி-ஹெட் அண்ட் நெக் சர்ஜரி மற்றும் பிரிட்டிஷ் அசோசியேஷன் ஆஃப் ஓட்டோரினோலரிங்காலஜி ஆகியவை இப்போது கோவிட்-19 இன் முதன்மை ஸ்கிரீனிங் அறிகுறிகளின் பட்டியலில் வாசனை இழப்பு (அனோஸ்மியா) மற்றும் சுவை இழப்பு (டிஸ்ஜூசியா) ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. இதைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாசனை இழப்பு (அனோஸ்மியா) என்றால் என்ன?

வாசனை இழப்பு (அனோஸ்மியா) என்றால் என்ன?

அனோஸ்மியா என்பது வாசனையின் முழுமையான இழப்பு ஆகும். அனோஸ்மியா உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, கசப்பான மற்றும் புளிப்புப் பொருள்களை ருசிக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட சுவைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை குறிப்பாக சொல்ல முடியாது. சுவைகளுக்கிடையேயான வேறுபாட்டைக் கூறும் திறன் வாசனையைப் பொறுத்தது, நாக்கில் அல்ல. அனோஸ்மியாவின் பொதுவான காரணங்கள் தலையில் காயம், வைரஸ் தொற்று மற்றும் அல்சைமர் நோய் ஆகும்.

MOST READ: இந்த வழிகளை பயன்படுத்தி லாக்டவுன் முடியறதுக்குள்ள ஈஸியா உங்க எடையை குறைக்கலாம்...!

சுவை இழப்பு (டிஸ்ஜீசியா) என்றால் என்ன?

சுவை இழப்பு (டிஸ்ஜீசியா) என்றால் என்ன?

டிஸ்ஜுசியா என்பது சுவை இழப்பு மற்றும் டிஸ்ஜுசியா உள்ளவர்கள் பொதுவாக ஒரு உலோக சுவை மற்றும் விரும்பத்தகாத இனிப்பு, கசப்பான அல்லது உப்பு சுவை குறித்து புகார் கூறுகிறார்கள். குளிர், கர்ப்பம், வறண்ட வாய், புகைபிடித்தல், ஒவ்வாமை, ஊட்டச்சத்து குறைபாடுகள், ஒற்றைத் தலைவலி, மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் தொற்று ஆகியவை டிஸ்ஜுசியாவின் பொதுவான காரணங்கள்.

எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?

எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?

ஒரு ஆய்வின்படி, வாசனை மற்றும் சுவை இழப்பு கோவிட்-19 நோய்த்தொற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்நேஷனல் ஃபோரம் ஆஃப் அலர்ஜி அண்ட் ரைனாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், யு.சி. சான் டியாகோ ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸுடன் உணர்ச்சி இழப்பு தொடர்புடையதாக தெரிவித்துள்ளனர்.

ஆய்வு

ஆய்வு

ஆய்வின் போது, ஆராய்ச்சியாளர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட 1,480 நோயாளிகளை ஆய்வு செய்தனர் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மொத்தத்தில், 102 நோயாளிகள் கொரோனா வைரஸுக்கு நேர்மறையாகவும் 1,378 பேர் எதிர்மறையாகவும் இருந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகளுக்கு இந்த நோயின் லேசான அறிகுறி இருந்தது, ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

MOST READ: இந்த நபர்களுக்கு காய்ச்சல் வந்தால் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்... ஜாக்கிரதை...!

2 முதல் 4 வாரங்கள்

2 முதல் 4 வாரங்கள்

நேர்மறை கோவிட்-19 நோயாளிகளில் சில உணர்ச்சி குறைபாடுகள் அதிகமாக இருப்பதாகவும், வாசனை மற்றும் சுவை இழப்பு தீவிரமானது என்றும் லேசானது அல்ல என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வாசனை மற்றும் சுவை மீட்கும் விகிதம் அதிகமாக இருப்பதாகவும், பொதுவாக கோவிட்-19 நோய்த்தொற்றின் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் இது ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

பிற பொதுவான அறிகுறி

பிற பொதுவான அறிகுறி

"எங்கள் ஆய்வின் அடிப்படையில், உங்களுக்கு வாசனை மற்றும் சுவை இழப்பு இருந்தால், உங்களுக்கு தொற்றுநோய்க்கான பிற காரணங்களை விட 10 மடங்கு அதிகமாக கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றின் பொதுவான முதல் அறிகுறி காய்ச்சலாகவே உள்ளது. ஆனால் சோர்வு, வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவை பிற பொதுவான ஆரம்ப அறிகுறிகளாகப் பின்தொடர்கின்றன "என்று யூரோ சான்டியாகோ ஹெல்த் நிறுவனத்தின் ஓட்டோலரிஞ்ஜாலஜிஸ்ட் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் கரோல் யான் கூறினார்.

MOST READ: உங்க கண்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம்...ஜாக்கிரதை...!

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

"கோவிட்-19 மிகவும் தொற்றுநோயான வைரஸ் என்று எங்களுக்குத் தெரியும். கோவிட்-19 இன் ஆரம்ப அறிகுறிகளாக வாசனை மற்றும் சுவை இழப்பு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு ஆதரிக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

ஆய்வு செய்ய வேண்டும்

ஆய்வு செய்ய வேண்டும்

கோவிட்-19 க்கு நோயாளிகளை பரிசோதிக்கும் போது வாசனை மற்றும் சுவை இழப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று யுசி சான் டியாகோ ஹெல்த் பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், கோவிட்-19 நோயாளியின் வாசனை மற்றும் சுவை இழப்பதற்கான சரியான வழிமுறை மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

loss of smell and taste a new symptom of covid-19

Here we are talking about loss of smell and taste a new symptom of covid-19.
Desktop Bottom Promotion