For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரவர உடலுறவில் நாட்டம் குறைகிறதா? அப்ப அதுக்கு இதுல ஒன்னு தான் காரணமா இருக்கணும்...

|

திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்ய வாழ்க்கை திருப்திகரமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போதைய பரபரப்பான உலகில் நிதானம் என்ற பேச்சிற்கே இடமில்லை. எப்போதுமே எதையுமே அவசரமாகவே செய்யும் நிலையில் தள்ளப்பட்டுள்ளோம். இதன் விளைவாக பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பதோடு மட்டுமின்றி, தம்பதியர்கள் இருவருமே வேலைக்கு செல்வதால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுவதோடு, ஒருவேளை இருவரும் ஒன்றாக நேரத்தைக் கழிக்க முடிந்தாலும், வேலைப்பளுவால் இருவராலும் சந்தோஷமாக நேரத்தைக் கழிக்க முடிவதில்லை. அதோடு, தற்போது பலர் உடலுறவில் நாட்டம் குறைவதாகவும் புகார் அளிக்கின்றனர்.

இளம் வயதிலேயே உடலுறவில் நாட்டம் குறைந்தால், அத்தகையவர்கள் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். அதோடு, ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் உடலுறவில் நாட்டம் குறையும் என்பதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. இதனால் எளிதில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். இப்போது பாலுணர்ச்சி குறைபாட்டிற்கான பொதுவான காரணங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
களைப்பு

களைப்பு

ஒவ்வொரு நாளின் முடிவிலும் நீங்கள் அடிக்கடி மிகவும் சோர்வாக உணர்ந்தால், உங்கள் துணையுடன் உடலுறவு கொள்ள விரும்பமாட்டீர்கள். தூக்கமின்மை கூட உங்கள் பாலியல் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகளும் கூறுகின்றன.

மன அழுத்தம்

மன அழுத்தம்

அலுவலகத்தில் கொடுக்கப்படும் அதிகப்படியான வேலைப்பளுவால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து மன அழுத்தம் அதிகரிக்கும். ஒருவரது உடலில் கார்டிசோல் அளவு அதிகமானால், அது டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இதர ஹார்மோன் உற்பத்திகளைக் குறைத்து, உடலுறவில் உள்ள நாட்டத்தை அழிக்கும்.

மன இறுக்கம்

மன இறுக்கம்

மன இறுக்கம் அல்லது இதர மனநல பிரச்சனைகள் உடலுறவில் உள்ள விருப்பத்தைக் குறைக்கலாம். அதிலும் நீங்கள் மன இறுக்க எதிர்ப்பு மருந்துகளை எடுத்து வந்தால், அது உடலுறவில் உள்ள நாட்டத்தைக் குறைப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

தைராய்டு பிரச்சனைகள்

தைராய்டு பிரச்சனைகள்

ஆய்வுகளின் படி, தைராய்டு நோய்கள் அல்லது அசாதாரண தைராய்டு அளவுகள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கக்கூடும். அதிலும் ஹைப்போ தைராய்டிசம் மெட்டபாலிசத்தை சீர்குலைத்து, பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் வேகத்தைக் குறைத்து, உடலுறவில் உள்ள நாட்டத்தைக் குறைக்கிறது.

உடற்பயிற்சியின்மை

உடற்பயிற்சியின்மை

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உடல் பருமன், மன அழுத்தம் போன்ற அனைத்தும் ஹார்மோன் உற்பத்தியைப் பாதிப்பவைகளாகும். குறிப்பாக இவை செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைக் குறைக்கும். ஒருவரது பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால், உடலில் போதுமான அளவில் டெஸ்டோஸ்டிரோன் அளவு இருக்க வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமற்ற டயட்

ஆரோக்கியமற்ற டயட்

சரிவிகித டயட் பாலுணர்ச்சியை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை நீங்கள் வறுத்த மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்பவராயின், அது உங்களுக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்குவதோடு, பாலியல் நாட்டத்தையும் அழிக்கும்.

உடல் வறட்சி

உடல் வறட்சி

உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால், அது செயல்பாட்டில் ஈடுபடுவதற்கான வேட்கையை அழிக்கக்கூடும். மேலும் உடல் வறட்சி தலைவலியை உண்டாக்கும். தலை வலியை ஒருவர் சந்தித்தால், நிச்சயம் உடலுறவு கொள்ள விரும்பமாட்டார்கள். கூடுதலாக, உடல் வறட்சி யோனியிலும் வறட்சியை உண்டாக்கி, உடலுறவின் போது மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

குறைந்த சுய மரியாதை

குறைந்த சுய மரியாதை

நீங்கள் உங்களைப் பற்றி நன்றாக உணராமல் இருந்தாலோ அல்லது எதிர்மறை எண்ணங்களுடன் இருந்தாலோ, உங்கள் துணையுடன் உடலுறவு கொள்ள விரும்பமாட்டீர்கள். குறைவான சுய மரியாதை, குறைவான சுய மதிப்பு அல்லது சுய அன்பு இல்லாமை போன்றவை உடலுறவு கொள்வதற்கான உங்களின் நாட்டத்தை அழிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Losing Your Sexual Desire? It May Be Because Of One Of These Reasons

If you are often too tired at the end of the day, you may not want to have sex with their partner. Common reasons for low libido you may want to know...
Story first published: Thursday, February 20, 2020, 11:29 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more