For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்பவும் தனிமையாவே இருக்கீங்களா?... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க

நீங்க தனிமையா இருக்கோம்னு ஃபீல் பண்றீங்களா?... என்னவெல்லாம் செய்தால் தனிமையைப் போக்கிக் கொள்ள முடியும் என்று இங்கே விவாதிக்கலாம்.

|

சில பேருக்கு தனிமை என்பது வரம். அதுவே சில பேருக்கு தனிமை என்பது சாபம். சில பேர்கள் நண்பர்களை சுற்றி வைத்துக் கொண்டால் கூட தனிமையாக நினைப்பார்கள். காரணம் அவர்கள் மனம் தனியாக செயல்படுவது தான். நம்மளைச் சுற்றி ஆயிரம் பேர்கள் இருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் சில நேரமாவது தனிமை அவசியம். ஒரு மனிதன் தனிமையாக இருப்பதற்கும், தனியாக இருப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

Loneliness

சிலருக்கு தனிமை என்பது பெரிய கஷ்டமாக இருக்காது. சிலருக்கு அந்த தனிமை வலியை கொடுக்க ஆரம்பித்து விடும். என்ன செய்வதென்றே தெரியாமல் சுத்தி சுத்தி வருபவர்களும் உண்டு. இல்லையென்றால் வெறுத்து எதையாவது பார்த்துக் கொண்டே உட்கார்ந்து இருப்பவர்களும் உண்டு. உங்களுக்கு தனிமை நேர்கையில் அதை எப்படி சாத்தியமான வகையில் கையாளலாம். அதை எப்படி நல்ல வழியில் தொடரலாம் என்பது குறித்து தான் நாம் இக்கட்டுரையில் பேச உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயது காரணமல்ல

வயது காரணமல்ல

தனிமை வருவதற்கு வயது ஒரு காரணமல்ல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த தனிமையை பீல் பண்ணிக் கொண்டு தான் இருக்கிறார்கள். உறவுகளில் சிக்கல், சமூக ஒதுக்களிப்பு, வாழ்க்கை பிரச்சனை இவற்றிற்காக தனிமையை நாடிச் செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

MOST READ: உங்க ஜாதகத்தில் ராகு கேது எப்படி இருக்கிறது - பலன் தரும் பரிகாரங்கள்

சரியான காரணத்தை அடையாளம் காணுங்கள்

சரியான காரணத்தை அடையாளம் காணுங்கள்

எப்பொழுதுமே ஒரு சிக்கலை தீர்ப்பதற்கு முன் அது எதனால் ஏற்பட்டது என்ற ஆணிவேரை கண்டறியுங்கள். சிக்கலுக்கான காரணத்தை கண்டறிவது தான் மிகவும் முக்கியம். அதே மாதிரி முதலில் உங்கள் தனிமையின் காரணத்தை கண்டறியுங்கள். அதுவே உங்களுக்கான சரியான தேடல்களுக்கு வழிவகை செய்யும். அது நெருங்கிய அன்பானவரின் மரணமாக இருக்கலாம், உங்கள் உறவில் /நட்பில் சந்தித்த துரோகமாக இருக்கலாம் இந்த காரணங்கள் உங்களுக்கு தனிமையை தூண்டி இருக்கலாம். இப்படி உங்கள் தனிமைக்கு பின்னால் இருக்கும் காரணத்தை நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

உறவுகளுக்கு அப்பால் செல்லுங்கள்

உறவுகளுக்கு அப்பால் செல்லுங்கள்

யார் சொன்னார்கள் உங்களை உயிரோட்டமாக வைத்திருக்க மனிதர்களால் மட்டுமே முடியும் என்று. உங்கள் தனிமையை போக்க இந்த உலகத்தில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அது உங்கள் செல்லப் பிராணியாக இருக்கலாம், இயற்கை சூழலாக இருக்கலாம், திரைப்படங்கள் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால் ஒரு நாயை தத்தெடுத்து அன்பு பாராட்டி வரலாம். மனிதர்கள் உங்களிடம் அன்பு செலுத்த நிபந்தனை வைத்திருப்பார்கள். ஆனால் வளர்த்த பிராணிகள் உங்கள் மீது நிபந்தனை இல்லாத அன்பை வைத்திருக்கும். அதே மாதிரி புத்தக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நேர்மறையான எண்ணங்களையும் மகிழ்ச்சியையும் தரும்.

உங்கள் படைப்பாற்றலை வெளியே கொண்டு வாருங்கள்

உங்கள் படைப்பாற்றலை வெளியே கொண்டு வாருங்கள்

உங்களுக்குள் நிறைய திறமைகள் இருக்கலாம். பெயிண்டிங் செய்வது, கவிதைகள் எழுதுவது, சமைப்பது மற்றும் நடனமாடுவது போன்ற ஏராளமான திறமைகள் உங்களிடம் இருக்கலாம். உங்கள் திறமையை போக்க அதை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தனிமையில் இருக்கும் போது உங்களுக்கு பிடித்த ஓவியம் தீட்டி மகிழலாம், சமைக்கலாம், நடனமாடாலாம் இதனால் உங்கள் தனிமையும் போகும் அதே நேரத்தில் திறமையும் வளரும்.

யாரும் தேவையில்லை செல்லுங்கள்

யாரும் தேவையில்லை செல்லுங்கள்

விடியும் ஒவ்வொரு நாட்களுமே உங்களுக்கான நாட்கள். இந்த நாட்களில் நீங்கள் யாரையும் உங்களுக்காக கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் உங்களுக்கு நீங்களே துணையாக இருக்க முடியும். செல்லுங்கள் உங்களுக்கு பிடித்த ரெஸ்டாரென்ட் செல்லுங்கள். பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுங்கள். உங்களுக்கு பிடித்த ஊர்களுக்கு செல்லுங்கள். ஷாப்பிங் செய்யுங்கள், சுற்றிப் பாருங்கள். இது நிச்சயமாக உங்கள் தனிமைக்கு மருந்தாக அமையும்.

சமூக குழுவில் சேருங்கள்

சமூக குழுவில் சேருங்கள்

நீங்கள் தனிமையாக இருந்தால் சமூகத்தில் எவ்வளவோ குழுக்கள் உள்ளன. அதில் சேர்ந்து கொள்ளுங்கள். அங்கே ஏராளமான தொண்டு செய்பவர்கள் இருப்பார்கள். இதனால் உங்கள் தனிமை போய் விடும். அவர்களிடம் உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளலாம். முடிந்தால் மற்றவர்களுக்கும் சேவை செய்து மகிழலாம்.

MOST READ: இதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா?... இந்த அறிகுறி இருக்குமாம்...

அடுத்தவருக்கு உதவுங்கள் அதுவே மருந்து

அடுத்தவருக்கு உதவுங்கள் அதுவே மருந்து

உங்கள் தனிமையை போக்க அடுத்தவருக்கு உதவுங்கள். அதுவே உங்களுக்கு மருந்தாக அமையும். நீங்கள் செய்யும் உதவியால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சியை தரும். இது உங்கள் தனிமையை போக்கி ஆறுதல் அளிக்கும்.

இயற்கையுடன் நேரத்தை செலவிடுங்கள்

இயற்கையுடன் நேரத்தை செலவிடுங்கள்

இயற்கை ஒன்றே போதும் மனதின் பாரங்களை ஆற்ற.தனிமையில் இருக்கும் போது இயற்கை காட்சிகளை கண்டு மகிழுங்கள். காட்டிற்கு சென்று புதுவித அனுபவத்தை ரசிக்கலாம். அருவிகளில் குளிக்கலாம். இப்படி இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது உங்கள் தனிமையை போக்கி விடும். உங்களை புதிதாக உணர வைக்கும். புதிய காற்றை சுவாசிப்பீர்கள். ஒரு அழகான தோட்டம் அமைத்து பராமரித்து வரலாம். இது உங்கள் தனிமையை எதிர்த்து போராட உதவியாக இருக்கும்.

பழைய நண்பர்களை சேருங்கள்

பழைய நண்பர்களை சேருங்கள்

உங்கள் பழைய நண்பர்களை ஒன்று திரட்டி பேசலாம். உங்களைச் சுற்றி நம்பிக்கையான ஆதரவான நண்பர்கள் இருப்பது பாக்கியம். அது நம் வாழ்க்கையை அழகாக்கும். உங்கள் தனிமையை அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் அன்பு உங்களுக்கு தோழமை கொடுக்கும். நீங்கள் அவர்களை அழைத்து இரவு உணவு சாப்பிடலாம், அவர்களுடன் பயணங்கள் திட்டமிடலாம். அவை உங்களை சிரிக்க வைக்கும், அழகான தருணங்களை அனுபவிக்க உதவும். உங்கள் தனிமையை போக்க அவர்கள் மருந்தாக முடியும்.

புதிய இடங்களுக்கு பறந்து போங்கள்

புதிய இடங்களுக்கு பறந்து போங்கள்

பயணம் ஒரு தெரபி. அதனால் தான் புதிய புதிய இடங்களுக்கு போகும் போது புதிய புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. நம்மைச் சுற்றி உள்ள இயற்கையின் அழகும், சந்தோஷமும் அளவில்லாதது. புது விதமான மனிதர்கள், புது விதமான கலாச்சாரம், புது விதமான உணவுகள் என்று உங்கள் தனிமைக்கு தீனி கிடைத்துக் கொண்டே இருக்கும். இப்படியே போனால் உங்கள் தனிமையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும்.

இசையே மருந்து

இசையே மருந்து

உங்களுக்கு பிடித்த இசை உங்கள் தனிமையை போக்க கிடைத்த மிகப்பெரிய ஆயுதம். தனிமையில் இருக்கும் போது உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு மகிழலாம். அது உங்கள் மனதை தளர்த்தி மன அழுத்தத்தை குறைக்கும். ஏன் இசைக்கு ஏற்ற மாதிரி பாட்டு கூட பாடி வரலாம். இப்படி நீங்கள் விரும்பும் விஷயத்தில் ஈடுபட்டு உங்கள் தனிமையை போக்கலாம்.

MOST READ: உடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா?... இதெல்லாம்தான்...

குடும்பத்தாருடன் நேரம் செலவழியுங்கள்

குடும்பத்தாருடன் நேரம் செலவழியுங்கள்

இதற்கு மாற்றாக எதுவும் இல்லை. உங்கள் குடும்பம் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவு. ஏனெனில் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் உங்கள் கூடவே வரும். தனிமை உங்களை கொல்வதாக நினைத்தால் உங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவு செய்யுங்கள். உங்கள் தனிமைக்கான காரணங்களை அவர்களிடம் சொல்லி உதவி கேட்கலாம். எதிர்மறையான எண்ணங்களிலிருந்து வெளியே வர அது உங்களுக்கு உதவி செய்யும். அவர்களின் ஆறுதல் உங்களுக்கு ஊக்கமளிக்கும். உங்கள் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என அவர்களுடன் உட்கார்ந்து பேசலாம். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் விளையாடலாம். ஏனெனில் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக்கி விடும் மந்திரம் படைத்தவர்கள்.

மேற்கண்ட முறைகள் உங்கள் தனிமையை போக்க உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். எல்லவற்றையும் விட "தன் கையே தனக்குதவி" என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் கொடுக்கும் மருந்து தான் உங்கள் மனதின் காயங்களை ஆற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Loneliness: 11 Tips That Will Help You Overcome It

Loneliness can be difficult to conquer and it can escalate even if you are surrounded by your close ones. It can creep in even if you share an intimate bonding with someone. Sense of belonging is essential for every human being but it is important to understand that being lonely and being alone are two different things. Therefore, loneliness has nothing to do with living alone.
Desktop Bottom Promotion