Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
Liver Detox Tips: இரண்டே வாரத்தில் கல்லீரலில் உள்ள அழுக்கை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இதுல ஒன்ன தினமும் குடிங்க!
நீங்கள் உங்கள் கல்லீரலை இதுவரை சுத்தம் செய்ய எந்த ஒரு முயற்சியையும் எடுத்ததில்லையா? அப்படியானால் இன்று முதல் முயற்சி எடுங்கள். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் பின்பற்றுங்கள்.
உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு கல்லீரல். மேலும் கல்லீரல் தான் உடலிலேயே அதிக பணியை செய்யக்கூடிய உறுப்பும் கூட. முக்கியமாக பல முக்கியமான செயல்பாடுகளை கல்லீரல் தான் செய்கிறது. அதில் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவது முதல் பித்த நீரை உற்பத்தி செய்வது மற்றும் வெளியேற்றுவது, ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவது, ஊட்டச்சத்தை சமநிலைப்படுத்துவது, நொதிகளை செயல்படுத்துவது வரை பல வேலைகளை செய்கிறது. எனவே கல்லீரலின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செத்த வேண்டும்.

கல்லீரல் பலவிதமான செயல்களை செய்வதால், கல்லீரலில் அழுக்குகள் அதிகம் தேங்கவும், சேதம் ஏற்படவும் மற்றும் நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளன. ஆனால் கல்லீரலை நோய்களின்றி ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது; மற்றொன்று சில பழக்கங்களைக் கைவிடுவது. நீங்கள் உங்கள் கல்லீரலை இதுவரை சுத்தம் செய்ய எந்த ஒரு முயற்சியையும் எடுத்ததில்லையா? அப்படியானால் இன்று முதல் முயற்சி எடுங்கள். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் பின்பற்றுங்கள்.

மஞ்சள்
மஞ்சள் மருத்துவ பண்புகளை ஏராளமாக கொண்டு ஒரு மசாலா பொருள். இந்த மஞ்சள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரல் நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. அத்தகைய மஞ்சள் தூளை 1/2 டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது மிளகுத் தூள் சேர்த்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து சில நாட்கள் குடித்து வந்தால், கல்லீரல் சுத்தமாகும்.

வெதுவெதுப்பான நீர்
உங்கள் கல்லீரல் நச்சுக்களின்றி சுத்தமாக இருக்க வேண்டுமானால், அதற்கு வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். அதுவும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 10-12 டம்ளர் வெதுவெதுப்பான நீரை தவறாமல் குடிக்க வேண்டும்.

பச்சை இலைக் காய்கறிகள்
கீரைகள், பாகற்காய் போன்ற பச்சை இலைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், அந்த காய்கறிகளில் உள்ள சுத்தப்படுத்தும் பண்புகள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், பச்சை இலைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் தாவர வகை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை கல்லீரலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை நீக்க உதவி புரிந்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. ஆகவே சுத்தமான கல்லீரலைப் பெற தினமும் 2-3 கப் க்ரீன் டீ குடிக்கத் தொடங்குங்கள். இதனால் கல்லீரல் நோய்களின் அபாயமும் குறையும்.

பூண்டு
பூண்டில் உள்ள சல்பர் கல்லீரலில் உள்ள நொதிகளை செயல்படத் தூண்டிவிட்டு, உடலில் இருந்து நச்சுக்களை திறம்பட வெளியேற்ற உதவி புரிகிறது. முக்கியமாக இதில் உள்ள அல்லிசின் மற்றும் செலினியம் கல்லீரலில் நச்சுக்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. கல்லீரலை சுத்தம் செய்ய நினைத்தால், தினசரி உணவில் சேர்ப்பதைத் தவிர, தினமும் இரவு தூங்கும் முன் 2 பல் பச்சை பூண்டு சாப்பிடுங்கள்.

ப்ளாக் காபி
பல்வேறு ஆய்வுகளின் படி, காபியை அளவாக குடித்து வந்தால், அது கல்லீரலில் கொழுப்புக்களை தேங்குவதைத் தடுத்து பாதுகாப்பளிப்பதோடு, கல்லீரல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. அதற்கு ஒரு நாளைக்கு 2 கப் காபியை, சர்க்கரை மற்றும் பால் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

நெல்லிக்காய்
ஆயுர்வேதத்தில் கல்லீரல் செயல்பாட்டின் ஆரோக்கியத்திற்காக நெல்லிக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காய் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நீங்கள் உங்கள் கல்லீரலை சுத்தம் செய்ய விரும்பினால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள தவிர்க்க வேண்டியவைகள்:
சர்க்கரை
சர்க்கரை என்ன தான் இனிப்புத் சுவையைத் தந்தாலும், உண்மையில் அது மெதுவாக ஆளைக் கொல்லும் ஒரு விஷம். சர்க்கரை உணவுகளை உண்ணும் போது, அது உடலில் நச்சுக்களை நீக்க உற்பத்தி செய்யப்படும் குறிப்பிட்ட நொதிகளின் உற்பத்தியைத் தடுத்து, இரத்த சர்க்கரையை அளவை சட்டென்று உயர்த்தி, இன்சுலிவை அதிகளவு வெளியிடச் செய்கிறது. இதனால் கல்லீரல் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலும் மோசமாக பாதிக்கப்படுகின்றன. எனவே உணவில் சர்க்கரையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால், தவிர்ப்பது இன்னமும் நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெமிக்கல்கள் அதிகம் இருக்கும். இந்த கெமிக்கல்கள் உடலினுள் செல்லும் போது, அது உடல் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்துவதோடு, சுமையை அதிகரித்து, ஜீரணிக்க கடினமாக இருக்கும். ஆகவே கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், பதப்படுத்தப்பட்ட உணவுகளான செரில்கள், உறைய வைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பேகான் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால்/மது
பல்வேறு உடல்நல நிபுணர்களின் கூற்றுப்படி, ஆல்கஹால் கல்லீரலுக்கு கெடு விளைவிக்கும் மிகவும் கொடிய பொருள். ஆல்கஹாலை அருந்தும் போது, அது உடலினுள் உள்ள உறுப்புக்களின் நச்சுநீக்கும் செயல்பாட்டில் சுமையை அதிகரித்துவிடும். குறிப்பாக ஆல்கஹால் குடிப்பதால் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல் தான். எனவே உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பின், முதலில் அதை தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications