For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் வெண்கல சொம்பில் தண்ணீர் குடிப்பதால் பெறும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

தற்போது பிளாஸ்டிக்கைப் பற்றி மக்களின் மத்தியில் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், பிளாஸ்டிக்கைத் தவிர்த்துவிட்டு வெண்கலப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

|

அறிவியலும் தொழில்நுட்பமும் உச்சமடைந்திருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த அளவிற்கு என்றால் தொழில்நுட்பமும் அறிவியலும் நமது உணவு பழக்கங்களைக்கூட பெருமளவு பாதித்திருக்கின்றன.

குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களின் தாக்கம் மிகவும் அதிகம். பிளாஸ்டிக் மனித வாழ்க்கையின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து இருக்கிறது. ஆனால் அந்த பிளாஸ்டிக் தான் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக இருக்கிறது.

Kansa Is The Healthiest Metal To Eat And Cook In!

தற்போது பிளாஸ்டிக்கைப் பற்றி மக்களின் மத்தியில் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், பிளாஸ்டிக்கைத் தவிர்த்துவிட்டு வெண்கலப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஏனெனில் வெண்கலப் பொருட்கள் சம்ஹித்தா காலத்திலேருந்தே மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்கலம் அல்லது கன்சா

வெண்கலம் அல்லது கன்சா

வெண்கலம் இந்தியாவில் கன்சா என்று அழைக்கப்படுகிறது. மணி செய்வதற்கு வெண்கலம் பயன்படுத்தப்படுவதால், அது மணி உலோகம் என்றும் அழைக்கப்படுகிறது. வெண்கலம் என்பது 78 விழுக்காடு தாமிரமும், 22 விழுக்காடு தகரமும் கலந்த கலவையாகும். தாமிரமும் தகரமும் கலந்த கலவையை 700 சென்டிகிரேட் வெப்பநிலையில் காய்ச்சும் போது தூய்மையான வெண்கலம் கிடைக்கிறது. வெண்கலம் நெகிழ்வு தன்மை கொண்டிருப்பதால், நமது அழகியல் சிந்தனைகளுக்குத் தகுந்தவாறு பலவகையான பளபளப்பான அல்லது பளபளப்பற்ற கைவினைப் பொருள்களை வெண்கலத்தில் செய்யலாம்.

வழக்கமாக வெண்கலப் பாத்திரங்கள் நாம் உணவு அருந்துவதற்கும், நீர் குடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு வெண்கலப் பாத்திரங்களில் உணவு சாப்பிட்டால் அல்லது வெண்கலக் குவளைகளில் நீர் அருந்தினால் அது நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

ஏன் வெண்கலப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்?

ஏன் வெண்கலப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்?

தாமிரம் அல்லது தகரம் போன்றவை புளிப்பான உணவுப் பொருட்கள், உப்பு மற்றும் எலுமிச்சம்பழம் போன்றவற்றிற்கு மிக எளிதாக எதிர்வினை ஆற்றிவிடும். அதனால் அவை உடலுக்குத் தீங்கு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வெண்கலப் பாத்திரங்கள் அவ்வாறு எளிதில் எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆகவே சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் வெண்கலப் பாத்திரங்கள் சிறந்தவையாக இருக்கும்.

வெண்கலத்தின் நன்மைகள்

வெண்கலத்தின் நன்மைகள்

வெண்கலம் மருத்துவ சிகிச்சைகளுக்குரிய குணங்களைக் கொண்டிருப்பதாக ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நல்ல செரிமானம்

ஒரு ஆரோக்கியமான உடலுக்கு ஆணி வேராக இருக்க வேண்டியது செரிமான அமைப்பாகும். வெண்கலம் நம் உணவைத் தூய்மைப்படுத்தி நமது செரிமானத் திறனையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

வெண்கலம் மருத்துவக் குணங்களைக் கொண்டிருப்பதால், ஆயுர்வேத மருத்துவம் முழுமையான ஆரோக்கியத்திற்கு வெண்கலத்தைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக மன அழுத்தத்தைத் தளர்த்தி நமது உடல் உறுப்புகளையும் சுத்தப்படுத்துகிறது. வெண்கலத்திற்கு நுண்ணியிரிகளை அழிக்கும் ஆற்றல் இருப்பதால், அதைப் பயன்படுத்துவது நமது சுகாதாரத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சமஸ்கிருத மொழியில் "கன்சியம் புத்திவர்தகம்" என்று ஒரு சொற்றொடர் உண்டு. அதற்கு வெண்கலம் நமது அறிவைக் கூர்மைப்படுத்துகிறது. அதனால் அதன் மருத்துவ சக்திக்கு தலைவணங்க வேண்டும் என்று பொருள். ஆகவே வெண்கலப் பாத்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வளரும் மற்றும் நோய்கள் வராமல் இருக்கும்.

வெண்கலம் நமது வாழ்வில் எவ்வாறு பயன்படுகிறது?

வெண்கலம் நமது வாழ்வில் எவ்வாறு பயன்படுகிறது?

ஆரோக்கியம் மேம்படும்

வெண்கலம் ஒரு முழுமையான குணமாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. அதாவது நமக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் நமது மன அழுத்தத்தைக் குறைத்து, நமது உடல் சக்தியை அதிகரிக்கிறது.

தோஷங்களை சமப்படுத்தும்

தோஷங்களை சமப்படுத்தும்

வெண்கலப் பாத்திரத்தில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தண்ணீரை வைத்திருந்தால், அந்த தண்ணீர் நமது உடலில் உள்ள 3 தோஷங்களை சமபடுத்தும் அளவிற்கு நேர்மறை சக்தியைப் பெறும்.

வெண்கலப் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் எளிதில் பழையதாக மாறாது. மேலும் தண்ணீரின் மூலம் பரவும் வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் வெண்கலம் பாதுகாக்கும்.

ஆரோக்கியமான மூளை மற்றும் தைராய்டு சுரப்பி

ஆரோக்கியமான மூளை மற்றும் தைராய்டு சுரப்பி

* வெண்கலம் நேர்மறையான ஆற்றல்களைக் கொண்டிருப்பதால் அது நமது மூளையைத் தூண்டிவிடும் ஆற்றலாக இருக்கிறது.

* வெண்கலப் பாத்திரங்களில் தண்ணீர் அருந்தி வந்தால், தைராய்டு சுரப்பிகள் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் சீராக இயங்கும்.

சிவப்பணுக்கள் அதிகரிக்கும்

சிவப்பணுக்கள் அதிகரிக்கும்

நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற வெண்கலப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வெண்கலம் உடல் வீக்கத்தைக் குறைத்து, இரத்தச் சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது.

வெண்கலப் பாத்திரங்களில் வைக்கப்படும் உணவுகள் மற்றும் தண்ணீர் ஆகியவை இயல்பாகவே மருத்துவக் குணங்களைப் பெறுகின்றன. அதனால் அவை குணப்படுத்தும் சக்தியைப் பெறுகின்றன.

தசை வலி மற்றும் கீல்வாதம்

தசை வலி மற்றும் கீல்வாதம்

அழற்சியை ஏற்படுத்தும் நுண்ணியிர்களுக்கு எதிரான சக்தியை வெண்கலம் கொண்டிருப்பதால் அது மூட்டுகளைத் தளர்த்துகிறது. மற்றும் தசைவலி மற்றும் கீல்வாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்துகிறது.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

நமது சருமத்திற்குத் தேவையான நிறமியை வழங்குவதில் வெண்கலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நமக்கு ஆரோக்கியமான சருமத்தைக் கொடுத்து, நாம் வயதான தோற்றத்தை எளிதில் அடைந்துவிடாமல் காக்கிறது.

எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியம்

எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியம்

* உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து நமது உடல் எடையைக் குறைக்கவும் வெண்கலம் உதவுகிறது.

* வெண்கலம் இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதோடு இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இரத்த சோகையை நீக்குகிறது.

சுத்தமான வெண்கலத்தை எவ்வாறு கண்டறிவது?

சுத்தமான வெண்கலத்தை எவ்வாறு கண்டறிவது?

சுத்தமான வெண்கலப் பாத்திரத்தை கண்டறிய வேண்டும் என்றால் அந்த பாத்திரத்தைத் தட்டிப்பார்க்க வேண்டும். தட்டும் போது ஆலய மணியின் ஓசையைப் போன்ற அதிர்வுள்ள இனிமையான ஓசை வந்தால் அதிலிருந்து அது உண்மையான வெண்கலப் பாத்திரம் என்று அறிந்து கொள்ளலாம். மேலும் வெண்கலப் பாத்திரத்தில் அரிப்பு அதிகம் இல்லாததால் பித்தளை அல்லது தகர பாத்திரங்களை விட அதைப் பாதுகாப்பது மிகவும் எளிது. எனினும் வெண்கலப் பாத்திரங்களை காற்று மற்றும் ஈரப்பதம் படுமாறு நீண்ட நாள்கள் வைத்தால் அவை அதன் பொழிவை இழந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kansa Is The Healthiest Metal To Eat And Cook In

Here we listed some health benefits of using bronze utensils. Read on to know more...
Desktop Bottom Promotion