For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா இல்லையா?... படிங்க புரியும்...

மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உங்கள் உயிருக்கே உலை வைத்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள், வாங்க தெரிஞ்சுக்கலாம்.

|

இன்றைய அவசர கால கட்டத்தில் எல்லோரும் ஓடிக் கொண்டே தான் இருக்கிறோம். ஏன் சாப்பிடுவதில் கூட அவசரம் தான். எதையாவது சீக்கிரம் செய்ய வேண்டும் எதையாவது வாயில் போட வேண்டும் அப்படித்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது. எனவே நிறைய பேர் அவசரமாகவும் செளகரியமாகவும் சமைக்க மைக்ரோ வேவ் ஓவன் பயன்பாட்டை விரும்புகிறார்கள்.

Is Cooking In Microwave Oven Bad For Your Health?

இது உணவை சில நிமிடங்களிலயே சூடாக்க உதவுவதால் பெண்கள் இதை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இப்படி மைக்ரோ வேவ் ஓவனில் சமைப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று என்னைக்காவது நீங்கள் அலசிப் பார்த்து இருக்கீங்களா? கண்டிப்பாக கிடையாது. ஆனால் இது குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெப்பமடையும் உணவு

வெப்பமடையும் உணவு

ஹார்வர்டு ஹெல்த் கூற்றுப்படி உணவை மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து அதிக சூட்டில் சமைக்கும் போது நீராவி மூலக்கூறுகள் உணவை சுற்றி உள்ளேயே தங்குகின்றன. இந்த மூலக்கூறுகள் அதிர்வுற்று, உராய்வை ஏற்படுத்தும் போது வெப்பத்தை உண்டாக்கி உணவை சமைக்கிறது.

MOST READ: மூளைக்காய்ச்சல்ல இத்தன வகை இருக்கா?... பார்த்து கவனமா இருங்க... இல்ல நீங்க காலி...

இது பாதுகாப்பானதா?

இது பாதுகாப்பானதா?

அடுப்பில் சமைப்பதை விட மைக்ரோ வேவ் ஓவனில் சமைக்கும் போது நேரம் குறைவாக எடுத்துக் கொள்வதால் உணவில் உள்ள விட்டமின் சி சத்துகள் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன. எனவே ஊட்டச்சத்துக்கள் சிறப்பாக காக்கப்படுகிறது. வேளாண் மற்றும் உணவு வேதியியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பால், பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்ற உணவுகளை மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சமைக்கும் போது அதிலுள்ள வைட்டமின் பி 12 சத்துக்கள் இழக்கப்படுகிறது. 30 முதல் 40 சதவீதம் வரை விட்டமின் பி12 இழக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பால் எதிர்ப்பு சக்தி இழப்பு

தாய்ப்பால் எதிர்ப்பு சக்தி இழப்பு

தாய்ப்பாலை நீங்கள் மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சூடேற்றும் போது பாக்டீரியாவை எதிர்த்து போரிடும் அதிலுள்ள எதிர்ப்பு சக்தி மூலக்கூறுகள் அழிக்கப்படுகிறது. உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் படி மைக்ரோ வேவ் ஓவனில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் வெப்பத்தில் உருகி உணவுடன் கலந்து கேடு விளைவிக்கும் என்கிறார்கள்.

இந்த பிளாஸ்டிக் கொள்கலன்கள் செய்ய பிபிஏ அல்லது பிஸ்பெனோல் ஏ, ஈஸ்ட்ரோஜன் போன்ற கலவை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, மைக்ரோவேவில் சமைக்கப்படும் உணவு கதிரியக்கமாக மாறாது, அடுப்பில் சமைப்பது போன்று பாதுகாப்பானது என்கிறார்கள்.

வித்தியாசம்

வித்தியாசம்

மைக்ரோ வேவ் ஓவனில் சமைப்பதற்கும் சாதாரண அடுப்பில் சமைப்பதற்கும் என்ன வித்தியாசம் என்றால் இதில் வெப்ப நுண்ணலைகள் உணவுக்குள் ஊடுருவி உணவை சீக்கிரமாக சமைத்து விடும். இதனால் நேரம் மிச்சம்.

MOST READ: எது செஞ்சாலும் பதட்டமாவே இருக்கா?... இத சாப்பிடுங்க... தெம்பாயிடுவீங்க...

முடிவு

முடிவு

மைக்ரோ வேவ் ஓவனில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு எதிரானது என்பதற்கு எந்த வித அறிவியல் சான்றும் இல்லை. ஆனால் இதில் சமைக்கும் போது சில ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன. மற்றபடி நீங்கள் பிளாஸ்டிக் கொள்கலன்கள் பயன்படுத்தாமல் பாதுகாப்பான கொள்கலன்களை பயன்படுத்தினால் பயப்படத் தேவையில்லை. சீக்கிரமாகவே சமைத்து ருசிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Cooking In Microwave Oven Bad For Your Health?

Microwave oven has made everyone's lives easier, as it helps in cooking pre-made meals or reheating the food within a few minutes, as compared to other conventional cooking methods.
Desktop Bottom Promotion