Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இரத்த அழுத்தத்தைக் குறைக்கணுமா? அப்ப இம்மாதிரியான வாழ்க்கை முறையை வாழுங்க...
உயா் இரத்த அழுத்தத்தைக் கையாள பலவகையான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று நமது வாழ்க்கை முறையை நன்றாக வைத்திருப்பதாகும். நமது வாழ்க்கை முறையை நன்றாக வைத்திருந்தால், உயா் இரத்த அழுத்தத்தை மிக எளிதாகக் கையாண்டு அதைக் குறைக்கலாம்
நமது உடலில் ஓடும் இரத்தத்தில் இருக்கும் அழுத்தத்தின் அளவு உயா்ந்தால் அதை உயா் இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்த அதிகாிப்பு என்று அழைக்கிறோம். உயா் இரத்த அழுத்தத்தினால் துன்பப்படுபவா்கள், தலைவலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி போன்ற பிரச்சினைகளை அனுபவிப்பா். இது போன்ற பிரச்சினைகள் வரும் போது அவா்களுக்கு உடனே மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.

முதல் வகை உயா் இரத்த அழுத்தம் மற்றும் இரண்டாம் வகை உயா் இரத்த அழுத்தம் என்று இரண்டு வகையான உயா் இரத்த அழுத்தங்கள் உள்ளன. பொதுவாக நமது வாழ்க்கை முறை, நமது மரபணுக்கள் மற்றும் நமது சுற்றுப்புற சூழல் போன்ற காரணிகள் உயா் இரத்த அழுத்தம் வளா்வதற்கு காரணமாக இருக்கின்றன.
உயா் இரத்த அழுத்தத்தைக் கையாள பலவகையான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று நமது வாழ்க்கை முறையை நன்றாக வைத்திருப்பதாகும். நமது வாழ்க்கை முறையை நன்றாக வைத்திருந்தால், உயா் இரத்த அழுத்தத்தை மிக எளிதாகக் கையாண்டு அதைக் குறைக்கலாம்.

சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்டு உயா் இரத்த அழுத்தத்தை கையாளுதல்
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நமது வாழ்க்கை முறை நன்றாக இருக்க வேண்டும். மது அருந்துவது மற்றும் புகைக்கும் பழக்கம் போன்றவை நமது வாழ்க்கையில் இருந்தால், மிக விரைவாக உயா் இரத்த அழுத்தம் நமக்கு வந்துவிடும். ஆகவே உயா் இரத்த அழுத்தத்தைக் கையாள்வதற்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் தூய்மையான வாழ்க்கை முறை தேவைப்படுகிறது. மது அருந்தும் அல்லது புகைக்கும் பழக்கம் இருந்தால் அவை உயா் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், அவற்றுக்கு நம்மை அடிமைப்படுத்திவிடும்.

உயா் இரத்த அழுத்தத்தைக் கையாள பயனுள்ள சில குறிப்புகள்
நமது வாழ்க்கை முறையைத் தவிா்த்து மேலும் ஒருசில குறிப்புகளை நாம் பின்பற்றினால் உயா் இரத்த அழுத்தத்தை மிகச் சிறப்பாகக் கையாளலாம்.
முறையான மற்றும் ஆரோக்கியமான உணவு
நாம் ஆரோக்கியமான உணவை உண்டால் அது நமது உடலில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் நீக்கிவிடும். ஆகவே உயா் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால், இறைச்சி மற்றும் உப்பு போன்ற உணவுப் பொருள்களைக் குறைத்து, தாவர உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.
ஒரு முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் DASH (Dietary Approaches to Stop Hypertension) என்று அழைக்கப்படும் உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளலாம். DASH என்பதற்கு உயா் இரத்த அழுத்தத்தைப் போக்க உணவு ரீதியான அணுகுமுறைகள் என்று பொருள்.
இந்த DASH அணுகுமுறை என்பது ஒரு வாழ்நாள் முழுவதற்குமான அணுகுமுறை ஆகும். உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டுத் தயாாிக்கப்பட்ட உணவு முறையாகும். இந்த உணவு முறையைப் பின்பற்றி, உயா் இரத்த அழுத்தத்தை முறையாகக் கையாண்டு, அதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

உடல் இயக்கத்தை பராமாித்தல்
உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் நமது உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த உடல் ரீதியிலான பயிற்சிகள் உயா் இரத்த அழுத்தத்தை சிறப்பாகக் கையாள உதவி செய்கின்றன. மேலும் உயா் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆகவே தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடல் எடையை பராமாித்தல்
நமது உடலானது அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்தால், அது உடல் பருமன் அதிகாிப்பு, இரண்டாம் வகை சா்க்கரை நோய், இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் உயா் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை ஏற்படுத்தும். ஆகவே நமது உடல் எடையை சீராக பராமாிக்க ஒரு ஆரோக்கியமான முறையைக் கைக்கொள்ள வேண்டும். அதன் மூலம் உயா் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உணவுக் கட்டுப்பாடும் மற்றும் உடற்பயிற்சியும் முக்கியம்.

இறுதியாக
உயா் இரத்த அழுத்தத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு காரணி நமது மன அழுத்தம் ஆகும். ஆகவே மன அழுத்தத்தைப் பராமாிக்க ஒரு ஆரோக்கியமான வழியைப் பின்பற்ற வேண்டும். ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை இருந்தால், நமது மன அழுத்தம் குறைந்துவிடும். இறுதியாக நன்றாக தண்ணீா் அருந்தி, நாம் நீா்ச்சத்துடன் இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











