For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை இருமடங்கு வேகத்தில் குறைக்கும் அற்புத டீ - எப்படி தயாரிப்பது? எத்தனை முறை குடிக்கணும்?

உங்களுக்கு வித்தியாசமான டீ குடிக்க பிடிக்குமானால், கிராம்பு டீயை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். இந்த டீயை நம் முன்னோர்களும் குடித்திருப்பார்கள் போலும். அதனால் தான் அவர்கள் தொப்பையின்றி இருந்துள்ளார்கள்.

|

இந்திய மசாலாப் பொருட்கள் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டவை. இவற்றில் பெரும்பாலான மசாலாப் பொருட்கள் அன்றாட உணவை சமைக்கும் போது பயன்படுத்துபவைகளாகும். அதோடு இவற்றின் மருத்துவ பண்புகளால் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல்நல பிரச்சனைகளை சரிசெய்ய தயாரிக்கும் மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய மசாலாப் பொருட்களுள் ஒன்று தான் கிராம்பு.

How Clove Tea Can Help You Lose Weight

கிராம்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிகரித்த உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் செரிமானத்தை மேம்படுத்தவும், பிற ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. அதற்கு இந்த மசாலாப் பொருளை சமைக்கும் போது பயன்படுத்தலாம் அல்லது குடிக்கும் பானங்களுடனும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் கிராம்பின் முழு நன்மைகளையும் பெற முடியும்.

MOST READ: தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிட்டால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

உங்களுக்கு வித்தியாசமான டீ குடிக்க பிடிக்குமானால், கிராம்பு டீயை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். இந்த டீயை நம் முன்னோர்களும் குடித்திருப்பார்கள் போலும். அதனால் தான் அவர்கள் தொப்பையின்றி இருந்துள்ளார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராம்பு டீ தயாரிப்பது எப்படி?

கிராம்பு டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 2 கப்

* கிராம்பு - 4-5

* பட்டை - 1/2 இன்ச்

* இஞ்சி - 1/2 இன்ச்

* வெல்லம் - சுவைக்கேற்ப

* எலுமிச்சை - 1/2

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கவும்.

* பின்பு அதில் கிராம்பு, பட்டை சேர்த்து, இஞ்சியையும் தட்டிப் போட்டு மூடி வைத்து 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.

* பிறகு அந்த நீரை வடிகட்டி, அதில் ஒரு டீபூன் தேன் மற்றும் ஒரு டேபிள் பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், கிராம்பு டீ தயார்.

இப்போது கிராம்பு டீ குடிப்பதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.

எடை இழப்புக்கு உதவும்

எடை இழப்புக்கு உதவும்

கிராம்பு டீ ஒருவரது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. கிராம்பில் உள்ள உட்பொருட்கள், செரிமான செயல்முறையை ஊக்குவிக்கிறது. ஒருவரது உடலில் செரிமானம் சிறப்பாக நடந்தால், அது அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க உதவும். சாதாரணமாகவே மசாலாப் பொருட்கள் உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிப்பவை. உடலின் மெட்டபாலிசம் அதிகரித்தால், அது கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறை வேகப்படுத்தும்.

சரும தொற்றுக்களை குணப்படுத்தும்

சரும தொற்றுக்களை குணப்படுத்தும்

கிராம்பில் ஆன்டிசெப்டிக் பண்புகளும் உள்ளன. எனவே இவை சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், உடலில் இருந்து நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. அதோடு, இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதனால் இது முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்கள், புள்ளிகள் போன்றவற்றைக் குறைக்கும்.

சைனஸ் பிரச்சனையை சரிசெய்யும்

சைனஸ் பிரச்சனையை சரிசெய்யும்

கிராம்பு டீ நெஞ்சு நெரிசலுக்கும், சைனஸிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும். இதில் யூஜெனோல் இருப்பதால், இது நெஞ்சில் உள்ள சளியை வெளியேற்றி நிவாரணத்தை அளிக்கும். மேலும் கிராம்பில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்றவை பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும். முக்கியமாக இந்த டீ காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

ஈறு மற்றும் பல் வலி

ஈறு மற்றும் பல் வலி

கிராம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பல் வலி மற்றும் ஈறு வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். எனவே கிராம்பு டீ குடித்தால், அது வாயில் இருந்து பாக்டீரியாக்களை நீக்க உதவி புரிந்து, பல் சம்பந்தமான பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தை வழங்கும்.

கிராம்பு டீயின் பக்க விளைவுகள்

கிராம்பு டீயின் பக்க விளைவுகள்

மசாலாப் பொருட்கள் எப்போதுமே பாதுகாப்பானவை தான். ஆனால் அந்த மசாலாப் பொருட்களை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது தான் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. கிராம்பு டீயை ஒருவர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடிப்பது நல்லது. இதற்கு மேல் குடிக்கும் போது, இரைப்பைக் குடலில் அழுத்தம் அதிகமாக கொடுக்கப்பட்டு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதோடு, தசை வலி மற்றும் சோர்வை சந்திக்கக்கூடும். கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கிராம்பு டீயைக் குடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக குடித்தால், அது குழந்தைக்கு தீங்கை விளைவிக்கும்.

யாரெல்லாம் கிராம்பு டீ குடிக்கக்கூடாது?

யாரெல்லாம் கிராம்பு டீ குடிக்கக்கூடாது?

கிராம்பு டீ குடித்த பின் வாந்தி மற்றும் குமட்டல் உணர்வை சந்திப்பவர்கள், அந்த டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல் அல்லது குளிர் போன்றவற்றை சந்திப்பவர்கள், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Clove Tea Can Help You Lose Weight

Clove is one such spice that you will find in every Indian kitchen that can help to boost your health and even shed kilos.
Desktop Bottom Promotion