For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க இத கண்ட்ரோல் பண்ணனும்னா ஒரு வாரத்துக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடனும் தெரியுமா?

ஆராய்ச்சி ஆய்வுகளின்படி, ஒரு வாரத்திற்கு அல்லது ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவது உங்கள் இரத்த அழுத்தத்தை 10 சதவீதம் குறைக்கும்.

|

உயர் இரத்த அழுத்தம் அல்லது குறைந்த இரத்த அழுத்தம், உங்கள் தமனி சுவர்களுக்கு எதிரான இரத்த அழுத்தத்தைக் குறிக்கிறது. காலப்போக்கில், உயர் இரத்த அழுத்தம் இதய நோய், சிறுநீரக நோய், பக்கவாதம் மற்றும் பிற உடல் நலப் பிரச்சினைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். அறிகுறிகள் இல்லாததால் உயர் இரத்த அழுத்தம் சில நேரங்களில் அமைதியான கொலையாளி என்றும் அழைக்கப்படுகிறது.

How banana can help control your blood pressure

இரத்த அழுத்தத்தின் சாதாரண வரம்பு 120/80 மிமீஹெச்ஜி ஆகும். உங்கள் இரத்த அழுத்தம் இதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் அன்றாட உணவில் வாழைப்பழங்களை சேர்ப்பதால் உடனடி ஆற்றல் அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதைப் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையை படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வாழைப்பழம் ஏன் நல்லது?

வாழைப்பழம் ஏன் நல்லது?

பல்வேறு ஆராய்ச்சிகளின்படி, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் மிகுதியாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளன. எஃப்.டி.ஏ படி, பொட்டாசியம் நிறைந்த மற்றும் சோடியம் குறைவாக உள்ள உணவுகள் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கலாம். உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் இரத்த நாளங்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது, மேலும் நீர் சமநிலையை சீர்குலைக்கிறது.

MOST READ: இந்த ராசிக்காரர்கள் எளிதில் கள்ள உறவில் ஈடுபடுவார்களாம்.. உங்க கணவன் அல்லது மனைவி ராசி இதுல இருக்கா?

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

பொட்டாசியம் அடங்கியுள்ள உணவை உட்கொள்வது சிறுநீரகங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது. சிறுநீரின் மூலம் உங்கள் உடலில் இருந்து கூடுதல் சோடியத்தை வெளியேற்றுவதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுகிறது. பொட்டாசியம் உடலில் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

நீங்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும்?

நீங்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும்?

ஆராய்ச்சி ஆய்வுகளின்படி, ஒரு வாரத்திற்கு அல்லது ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவது உங்கள் இரத்த அழுத்தத்தை 10 சதவீதம் குறைக்கும். நீங்கள் வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டால், உங்கள் உணவில் வாழைப்பழங்களைச் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

ஊட்டச்சத்து சுயவிவரம்

ஊட்டச்சத்து சுயவிவரம்

ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் கிராம் ஃபைபர் கொண்ட 109 கலோரிகள், 18 கிராம் இயற்கை சர்க்கரை, 20 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 1 கிராம் புரதம் உள்ளது. இதில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை அடங்கியுள்ளன.

MOST READ: இந்த ராசிக்காரர்கள் உடலுறவை விட இந்த விஷயத்தில்தான் ரொம்ப ஆர்வம் காட்டுவார்களாம்..அது என்ன தெரியுமா?

 பிற உணவுகள்

பிற உணவுகள்

கீரை, செலரி, ஓட்மீல், வெண்ணெய், தர்பூசணி, ஆரஞ்சு, பீட், சூரியகாந்தி விதைகள் மற்றும் கேரட் ஆகியவை உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும், இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் அளவு

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் அளவு

வாழைப்பழங்கள் பொட்டாசியத்தின் சிறந்த உணவு மூலமாகும். சிறிய வாழைப்பழங்களில் 362 மில்லிகிராம் பொட்டாசியமும், நடுத்தர அளவிலான வாழைப்பழங்களில் 422 மில்லிகிராமும் உள்ளது. பெரிய வாழைப்பழங்களில் 487 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

MOST READ: உங்க கணவன் அல்லது மனைவியை நீங்க சந்தேகப்படுறீங்களா? அவங்க எப்படினு இத வச்சு தெரிஞ்சிக்கலாம்!

எப்படி வாங்குவது?

எப்படி வாங்குவது?

உடனடி பயன்பாட்டிற்கு பழுத்த வாழைப்பழங்களையும், பின்னர் பயன்படுத்த சில பழுக்காத பச்சை வாழைப்பழங்களையும் தேர்வு செய்யவும். வெடிப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களைத் தவிர்க்கவும். மேலும், முழு, குண்டான வாழைப்பழங்களைத் தேடுக்க வேண்டும். சாம்பல் நிறத்தில் உள்ள வாழைப்பழங்களைத் தவிர்க்கவும்.

எப்படி சேமிப்பது?

எப்படி சேமிப்பது?

நேரடி வெப்பம் மற்றும் சூரிய ஒளியிலிருந்து அறை வெப்பநிலையில் வாழைப்பழத்தை சேமிக்கவும். நன்கு காற்றோட்டமான, குளிர்ந்த, இருண்ட இடத்தில் அவற்றை சேமிக்கவும். மேலும், குளிரூட்டுவதைத் தவிர்த்து, அவற்றை மற்ற பழங்களிலிருந்து விலக்கி வைக்கவும். வாழைப்பழ அப்பங்கள், வாழைப்பழத்துடன் ஓட்ஸ், வாழைப்பழ ஸ்மூத்தி, வாழைப்பழ சாலட் மற்றும் வாழைப்பழ அல்வா போன்ற இனிப்பு வகைகளை செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How banana can help control your blood pressure

Here we are talking about this is how banana can help control your blood pressure.
Story first published: Tuesday, July 28, 2020, 14:31 [IST]
Desktop Bottom Promotion