For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெங்காயம் & பூண்டு தோல்களை வைத்து நீங்க பண்ணும் இந்த விஷயம் உடலுக்கு அதிசயங்களை செய்யுமாம்!

வெங்காயம் மற்றும் பூண்டு தோல்களை எடுத்து வெதுவெதுப்பான நீரில் சேர்க்கவும். அந்த நீரில் கால்களை ஊறவைக்கவும். பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கால் தொற்றுகளுக்கு சிறந்தவை.

|

வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத சமையல் அறைகளே இருக்காது. இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெங்காயம் மற்றும் பூண்டு உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால், வெங்காயம் மற்றும் பூண்டு தோல்களை சமையலறையில் பயன்படுத்திய பின் தூக்கி எறிகிறீர்களா? அப்படியானால் நீங்கள் இதை உடனே நிறுத்த வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டு உணவுப் பொருள் இல்லாமல் அன்றாட இந்திய சமையலை கற்பனை செய்து பார்க்க முடியாது. சுவையான உணவுகளுக்கு வலுவான நறுமணத்தை சேர்ப்பதில் இருந்து உணவின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை, வெங்காயம் மற்றும் பூண்டு தோல் பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது.

Here’s Why One Should Never Throw Away Onion And Garlic Peels in tamil

அவை என்னென்ன என்றும், பல சுவாரஸ்யமான வழிகளில் வெங்காயம் மற்றும் பூண்டு தோலை மீண்டும் பயன்படுத்துவது எப்படி என்பதும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோல்களை ஏன் வைத்திருக்க வேண்டும்?

தோல்களை ஏன் வைத்திருக்க வேண்டும்?

பூண்டு மற்றும் வெங்காயம் இரண்டும் தாதுக்கள், வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. உண்மையில், வெங்காயத் தோல்கள் குர்செடின் எனப்படும் ஃபிளாவனாய்டுகளின் வளமான மூலமாகும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். பூண்டைப் பொறுத்தவரை, தோல்கள் அகற்றப்படும்போது அது அதன் தன்மையை இழக்கிறது. இது, உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் அது உண்மைதான். பூண்டு தோல்களில் ஃபீனைல்ப்ரோபனாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் வயதானதை மெதுவாக்குகிறது. எனவே, இந்த தோல்களை மீண்டும் பயன்படுத்துவது நல்லது.

சரியான புகை சுவை

சரியான புகை சுவை

வெங்காயம் மற்றும் பூண்டு அவற்றின் கவர்ச்சியான மற்றும் வலுவான சுவைக்காக அறியப்படுகிறது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா? வெங்காயம் மற்றும் பூண்டின் தோல்களை உலர் வறுத்து பல சுவையான உணவுகளுக்கு புகைபிடிக்கும் சுவையை சேர்க்கலாம். உணவக உணவுகளைப் பற்றிய ஒரு உண்மை செய்தி. தோல்கள் கருகிவிடும் வரை வறுத்து, அரைத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும். இந்த கலவையை சுவையான உணவுகளில் சேர்ப்பதால், அந்த சரியான ஸ்மோக்கி ருசியை கொடுக்கலாம்.

அரிசி உணவுகளை ஆரோக்கியமாக்குங்கள்

அரிசி உணவுகளை ஆரோக்கியமாக்குங்கள்

அரிசி சமைக்கும் போது வெங்காயம் மற்றும் பூண்டு தோல்களை சேர்த்து சமைப்பது அரிசிக்கு அதிக ஊட்டச்சத்தை சேர்க்க உதவுகிறது. உண்மையில், இதை பிரியாணி மற்றும் புலாவ் ஆகியவற்றில் சேர்ப்பதன் மூலம் டிஷ் மேலும் நறுமணமாக இருக்கும். ஆனால், வடிகட்டும்போது, தோலை அகற்ற மறக்காதீர்கள்.

கிரேவிகளுக்கு தடிமன் சேர்க்கவும்

கிரேவிகளுக்கு தடிமன் சேர்க்கவும்

வெங்காய விழுது அல்லது துருவிய வெங்காயத்தைச் சேர்ப்பதால் கறிகள், கிரேவிகள் மற்றும் சூப்கள் கெட்டியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் கறிகள் அல்லது சூப்பின் நிலைத்தன்மையை அதிகரிக்க விரும்பினால், சூப்பில் வெங்காயத் தோல்களைச் சேர்க்கவும், கறி ஒரு கெட்டியான அமைப்பை அடைந்ததும், ஒரு ஸ்பேட்டூலாவைப் பயன்படுத்தி தோல்களை அகற்றி, சுவையான கறி அல்லது சூப்பை அருந்தலாம்.

நரை முடியை போக்குகிறது

நரை முடியை போக்குகிறது

வெங்காயம் அவற்றின் சக்திவாய்ந்த மருத்துவ மற்றும் குணப்படுத்தும் பண்புகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் முடி உதிர்ந்து நரைத்ததால், மிகவும் கவலையாக இருக்கலாம். இது உங்களுக்கு ஒரு மீட்பராக செயல்படும். ஒரு இரும்பு கடாயை எடுத்து, வெங்காயத் தோல்களை கருப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். கருப்பு வெங்காய விதைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இந்த எண்ணெயை சூடாக்கி, ஆறவைத்து, தலைமுடியில் தடவவும். நல்ல பலனைப் பெற ஒரு மணி நேரம் கழித்து அதைத் தடவி இரவு முழுவதும் வைத்திருக்கவும். உங்கள் முடிக்கு நல்ல பலனை பெறலாம்.

அரிப்பை நீக்குகிறது

அரிப்பை நீக்குகிறது

வெங்காயம் மற்றும் பூண்டு தோல்களை எடுத்து வெதுவெதுப்பான நீரில் சேர்க்கவும். அந்த நீரில் கால்களை ஊறவைக்கவும். பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கால் தொற்றுகளுக்கு சிறந்தவை.

வெங்காயத் தோல் தேநீர்

வெங்காயத் தோல் தேநீர்

இது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் வெங்காயத்தோல் தேநீரைப் பருகுவது உங்கள் உணர்வுகளைத் தணிக்கவும் தூக்கத்தைத் தூண்டவும் உதவும். வெங்காயத்தைப் போலவே, தோல்களிலும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. ஒரு கப் தண்ணீரை சூடாக்கி, வெங்காயத் தோல், கிரீன் டீ சேர்த்து, 3 நிமிடம் ஊற வைத்து, எலுமிச்சை மற்றும் தேன் சேர்க்கவும். இப்போது, ஆரோக்கியமான ஒரு கோப்பை தேநீரை குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Here’s Why One Should Never Throw Away Onion And Garlic Peels in tamil

Here’s Why One Should Never Throw Away Onion And Garlic Peels in tamil.
Story first published: Thursday, July 14, 2022, 16:52 [IST]
Desktop Bottom Promotion