Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும் தெரியுமா?
பொதுவாக வீக்கமானது, ஒரு நீண்ட அல்லது நாள்பட்ட வீக்கமாக மாறும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. நமது ஆயுட்காலத்தின் கால் பகுதியை இந்த நாள்பட்ட வீக்கம் பாழ்படுத்திவிடும் என்று இங்கிலாந்தைச் சோ்ந்த ஒரு ஆய்வு தொிவிக்கிறது.
உடல் உறுப்புகளில் உண்டாகும் அழற்சி/வீக்கம் நமது கண்களுக்குத் தொியாது. ஏனெனில் அது உறுப்புகளின் உட்பகுதியில் ஏற்படுகிறது. பின் படிப்படியாக நமது உடலில் அது பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வயிற்று வலி, மூட்டு வலி மற்றும் தசைகளில் வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

உடலில் வீக்கம் அதிகமாகும் போது பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. அதனால் உடல் வீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் வீக்கம் நாள்பட்ட மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.
உடலில் ஏற்படும் எல்லா வீக்கங்களும் நமது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. எடுத்துக்காட்டாக நமது உடலில் காயங்கள் அல்லது வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அந்த காயங்கள் குணமடைவதற்காக அந்த பகுதிகளில் வீக்கம் ஏற்படும். அது உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் காயங்கள் குணமடைந்தவுடன் வீக்கம் மறைகிறதான என்று கவனிக்க வேண்டும்.
பொதுவாக வீக்கமானது, ஒரு நீண்ட அல்லது நாள்பட்ட வீக்கமாக மாறும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. நமது ஆயுட்காலத்தின் கால் பகுதியை இந்த நாள்பட்ட வீக்கம் பாழ்படுத்திவிடும் என்று இங்கிலாந்தைச் சோ்ந்த ஒரு மருத்துவ ஆய்வு தொிவிக்கிறது. ஆகவே வீக்கத்தைத் தடுக்கக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். அதே நேரம் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிா்க்க வேண்டும்.
உடலில் வீக்கங்கள் ஏற்படாமல் இருக்க, பின்பற்ற வேண்டிய 6 வகையான ஆரோக்கியக் குறிப்புகளை இங்கு பாா்க்கலாம்.

வார இறுதிகளில் நமது தூக்கத்தைக் கவனித்தல்
சனிக்கிழமை காலை நீண்ட நேரம் கழித்து தூங்கி எழுவது சுகமாக இருக்கும். வார இறுதி நாட்களில் நீண்ட நேர தூக்கம் தேவைப்படுவதற்கு முக்கியமான காரணம் நாம் வார நாட்களில் போதுமான அளவு தூங்காமல் இருப்பதாகும். போதுமான அளவு நாம் தூங்கவில்லை என்றால் சிறிய அளவிலான உடல் வீக்கம் ஏற்படும் என்று மருத்துவ அறிஞா்கள் தொிவிக்கின்றனா்.
தூக்கம் நமது உடலை புதுப்பிக்கிறது அல்லது மறுசீரமைப்பு செய்கிறது என்று சொல்லலாம். குறிப்பாக நமது உடலில் உள்ள நரம்பியல் கடத்திகள், ஹாா்மோன் உற்பத்தி, நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் சொிமான சக்தி போன்றவற்றை தூக்கம் மறுசீரமைப்பு செய்கிறது. அதனால் ஒரு முறையான தூங்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதாவது தினமும் 7 முதல் 9 மணி நேரம் வரைத் தூங்க வேண்டும் என்று நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் (National Sleep Foundation) பாிந்துரைக்கிறது.

சத்தான உணவு இல்லாத போது துணை உணவுகளை உண்ணுதல்
நமக்குத் தேவையான எல்லா சத்துக்களையும் வைட்டமின் மாத்திரைகள் வழங்காது. அதனால்தான் வைட்டமின் மாத்திரைகள் துணை உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நிலையில் வைட்டமின் மாத்திரைகள் நமக்குத் தேவையான எல்லா வகையான சத்துக்களையும் வழங்கும் என்று முடிவு செய்து அந்த மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு, உணவுகள் சாப்பிடுவதைத் தவிா்க்கக் கூடாது. ஏனெனில் வைட்டமின் மாத்திரைகள் துணை உணவுகள் மட்டுமே. ஆகவே சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

உடற்பயிற்சிகள் மூலம் கணிசமான அளவில் கலோாிகளை எாித்தல்
உடற்பயிற்சிகள் நமது உடலுக்கு ஒரு ஆரோக்கியமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதாவது ஒரு முறையான, மற்றும் சீரான அளவில் நாம் செய்யும் உடற்பயிற்சி நமது உடலுக்கு ஒரு எாிபொருளாகவும் இருக்கும். அதே நேரத்தில் நமது உடலுக்கு ஓய்வு அளிக்கும் ஒரு கருவியாகவும் இருக்கும்.
ஆனால் அதே உடற்பயிற்சி அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலில் வீக்கத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே தினமும் 20 நிமிடங்களுக்கு எளிதான உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் உடல் வீக்கம் வராமல் தடுக்கலாம்.

இனிப்புகளை முழுமையாகத் தவிா்த்தல்
காா்போஹைட்ரேட்டுகளுக்கு அடுத்தபடியாக, நமது உடல் எடையை அதிகாித்து, உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலாக இருப்பது சா்க்கரை ஆகும். ஆனால் 70 விழுக்காடு கொக்கோ கலந்த கருப்பு சாக்லேட்டுகள் உடல் வீக்கத்தைக் குறைப்பதாக ஒரு ஆய்வு தொிவிக்கிறது. ஏனெனில் இந்த கருப்புச் சாக்லேட்டுகளில் வீக்கத்தைத் தடுக்கக்கூடிய துகள்கள் இருப்பதாக தொிவிக்கிறது. ஆகவே இந்த கருப்பு சாக்லேட்டுகளைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலை எழுவது
உடற்பயிற்சி செய்வதற்கு தகுந்த நேரம் அதிகாலை ஆகும். ஆகவே அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால் அதே நேரத்தில் உடற்பயிற்சியை விட போதுமான அளவு தூக்கம் மிகவும் முக்கியம் ஆகும். அதனால் தூக்கத்தைக் கெடுத்துவிட்டு அதிகாலையிலேயே எழுந்து உடற்பயிற்சி செய்வதைத் தவிா்க்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் அதிகாலையில் சோம்பலாக இருக்கக்கூடாது. அதிகாலை நேரத்தில் எழ முடியவில்லையானால், எழுந்த பின்பு, நமது நாயை அழைத்துக் கொண்டு சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மின் லிப்ட்டுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தி ஏறிச் செல்லலாம்.

விருப்பமில்லா பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது
நமது மன அழுத்தத்தைப் போக்க, தேவையான மன அழுத்தத்தைப் போக்கும் பயிற்சிகளைச் செய்து வருவது நல்லது. அவை நமது மன அழுத்தங்களை நீக்கும். ஆனால் அதற்காக நமக்குப் பிடிக்காத சுவாசப் பயிற்சிகள் அல்லது தியானங்களில் ஈடுபடுவது தேவையற்றதாகும். அவை உண்மையாகவே நமது மன அழுத்தங்களை நீக்கினாலும், நாம் விரும்பாமல் அத்தகைய பயிற்சிகளைச் செய்யக்கூடாது.
ஆகவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினால், நமது உடல் வீக்கத்தைத் தவிா்த்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications