Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
அதிகப்படியான கொழுப்பு சத்தால் அவதிப்படுபவரா? அப்ப இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க...
மாம்பழத்தை போலவே, அதன் கொட்டையிலும் எண்ணிடலங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
மாம்பழம் யாருக்கு தான் பிடிக்காது? அதுவும் ஒவ்வொரு வருடமும் மாம்பழ சீசனுக்காகவே காத்திருப்போரும் உண்டு. நன்கு பழுத்த மாம்பழத்தை அதன் தோலோடு கடித்து சாப்பிடும் சுவையே தனி சுவை தான். ஆனால், மாம்பழத்தை விரும்பி சாப்பிடும் நாம் மாம்பழத்தின் கொட்டையை தூக்கி தானே போடுகிறோம்? வெறும் கொட்டை தானே என்று நாம் அதனை தூக்கி போடுகிறோம். ஆனால், அதனுள் மறைந்திருக்கும் மருத்துவ குணங்களை பற்றி அறிந்தால், இனி அந்த காரியத்தை ஒருபோதும் செய்யவே மாட்டீர்கள். ஆம், மாம்பழத்தை போலவே, அதன் கொட்டையிலும் எண்ணிடலங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
மாங்கொட்டையின் பொடியை பயன்படுத்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கப் பெறலாம். ஆனால், இப்போது நாம் மாங்கொட்டை எண்ணெய் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். சுவாச கோளாறுகள் முதல் சரும பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு என மாங்கொட்டை எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சரி, வாருங்கள் இப்போது மாங்கொட்டை எண்ணெய் பற்றி இன்னும் சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்...

மாங்கொட்டை எண்ணெய் எந்த வகையில் நன்மை அளிக்கக்கூடியது?
மாம்பழம் வேண்டாம் என்று கூறுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மாம்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏனென்றால், அதில் உடலுக்கும் நன்மையளிக்கக் கூடிய ஆரோக்கிய பலன்கள் நிறைய உள்ளன. மேலும், மாமரத்தின் இலைகள் நீரிழிவு நோய்க்கு சிறந்த பலனளிக்கக் கூடியது. அதேப்போல், மாங்கொட்டையும் நிறைய மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. வாருங்கள். மாங்கொட்டை எண்ணெயின் மருத்துவ பலன்கள் தெரிந்து கொள்வோம்...

மாங்கொட்டையின் மருத்துவ பலன்கள்:
கொழுப்பை குறைத்திட உதவும்
அதிகப்படியான கொழுப்பு சத்தால் அவதிப்படுபவரா நீங்கள்? அப்படியெனில், உங்களது உணவில் மாங்கொட்டை எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். மாங்கொட்டை எண்ணெயானது, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள கொழுப்பை குறைத்திட உதவும். எனவே, அதிகமான கொழுப்பால் அவதிப்படுபவர்கள், அவர்களது உணவில் மாங்கொட்டை சேர்ப்பதன் மூலம் நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் மா இலைகள் மிகவும் உதவக்கூடியவை என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதேபோல தான், மாங்கொட்டை எண்ணெயும், இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுத்து, ஒரே சீராக வைத்துக் கொள்ள உதவக்கூடியது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவக்கூடிய எண்ணெய் இது. அதுமட்டுமல்லாது, உடலில் சீரான ஆற்றலை வெளிப்படுத்தி, இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்திடும். மேலும், உடலில் குளுகோஸ் உறிஞ்சப்படுவதையும் இது மெதுவாக மாற்றிடும்.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும்
மாங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, ஆரோக்கிய உடல் எடையை பராமரித்திட பெரிதும் உதவக்கூடியது. அதனால் தான், மாம்பழம் மற்றும் மாங்கொட்டை இரண்டுமே எடையை நிர்வகிப்பதில் சிறந்தவையாகும். மேலும், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, உடலில் வளர்சிதை மாற்றத்தையும் தூண்டுகிறது.

ஆரோக்கியமான ஜொலிக்கும் சருமம்
மாம்பழம் அல்லழ மாங்கொட்டை எண்ணெய் வைத்து வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஃபேஸ் பேக் உபயோகிப்பதன் மூலம், இளமை தோற்றத்தையும், ஜொலிக்கும் சருமத்தையும் நிச்சயம் பெற்றிட முடியும். மாங்கொட்டை எண்ணெய் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் அதன் தழும்புகளை நீக்கிட உதவக்கூடியது. இந்த எண்ணெயை பயன்படுத்தி தொடர்ந்து முகத்தில் மசாஜ் செய்து வரலாம் அல்லது ஃபேஸ் பேக்காக கூட போடலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்
மாங்கொட்டை எண்ணெய் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும். அதுமட்டுமல்லாது, முடி உதிர்வு அல்லது பொடுகு தொல்லை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், இந்த எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் சுலபமாக அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதற்கு, எண்ணெயை கூந்தலில் தேய்த்து சாதாரணமாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து குளித்திடலாம். வாரத்தில் 2 முறை இப்படி செய்து வந்தாலே போதும், ஆரோக்கியமான, அழகான கூந்தலை பெற்றிடலாம். இந்த எண்ணெயிலுள்ள கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை தான் ஆரோக்கியமான, அழகான கூந்தலை பெற்றிட உதவுகின்றன.

குறிப்பு:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளில் மாங்கொட்டை எண்ணெயை பயன்படுத்தி, உங்களது ஆரோக்கியத்தையும் அழகையும் மேலும் கூட்டிக்கொள்ளுங்கள். இருப்பினும், இந்த எண்ணெயை சருமத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு, பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது. அப்போது தான், இதனால் உங்களுக்கு அழற்சி ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், உங்களது உதவில் இதனை சேர்த்துக் கொண்டாலும், குறைந்த அளவிலேயே சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மாம்பழத்தால் அழற்சி உள்ளவர்கள் யாரும் இந்த மாங்கொட்டை எண்ணெயை பயன்படுத்த வேண்டாம். இதனால் எந்தவொது பக்கவிளைவும் ஏற்படாது, இருப்பினும், இதனை உபயோகித்து ஏதேனும். பக்கவிளைவுகளை உணர்ந்தால் உடனடியாக உங்களது மருத்துவரை அணுகுங்கள்.



Click it and Unblock the Notifications











