For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கற்பூரவள்ளியின் மருத்துவ குணத்தால் நோய்களைக் குணப்படுத்த கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்பூரவள்ளி இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ எடுக்கலாம்.

|

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் பிட்சா. விடுமுறை நாட்கள் வந்தோலோ, சமைக்க முடியாவிட்டாலோ, பலரும் பிட்சாவையே ஆர்டர் செய்து அதிகம் சாப்பிடுகின்றனர். பிட்சா மைதாவினால் செய்யப்படுவது மட்டுமின்றி, இதில் பல்வேறு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் சேர்க்கப்படுவதால், ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களுள் ஒன்றாக உள்ளது.

Health Benefits Of Eating Oregano Leaves

ஆனால் இந்த பிட்சாவின் மீது சேர்த்து சாப்பிடக் கொடுக்கப்படும் பச்சை நிறத்திலான ஒருவித நறுமணமிக்க இலைகள் என்னவென்று தெரியுமா? அது தான் மருத்துவ குணம் அதிகம் கொண்ட உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள். இதன் மருத்துவ குணத்தால் நோய்களைக் குணப்படுத்த கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கற்பூரவள்ளி இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ உட்கொள்ளலாம். இல்லாவிட்டால், கற்பூரவள்ளியின் எண்ணெயைக் கூட பயன்படுத்தலாம். இந்த கட்டுரையில் உங்களுக்குத் தெரியாத சில கற்பூரவள்ளியின் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

100 கிராம் கற்பூரவள்ளியில் 4.3 கிராம் கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ (34%), கால்சியம்(159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து (204%), வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) உள்ளது.

இப்போது கற்பூரவள்ளி இலைகளால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.

நன்மை #1

நன்மை #1

கற்பூரவள்ளி இலைகளை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும்.

25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

நன்மை #2

நன்மை #2

கற்பூரவள்ளியில் பலரும் அதிகம் எடுக்கத் தவிர்க்கும் அத்தியாவசியமான வைட்டமின் கே ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் கே சத்தானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் கால்சியம் நுழைவதைத் தடுக்கும். இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் சரியான இரத்த உறைதலை ஊக்குவிக்கும்.

நன்மை #3

நன்மை #3

சமீபத்திய ஆய்வில் ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் கற்பூரவள்ளி ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு, பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.

நன்மை #4

நன்மை #4

கற்பூரவள்ளி இலைகளில் டயட்டரி நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த இலைகளை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

நன்மை #5

நன்மை #5

கற்பூரவள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் என்னும் உட்பொருட்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள தைமோல் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் செயல்களைச் செய்கின்றன.

நன்மை #6

நன்மை #6

காய்ச்சல், சளி மற்றும் அடிவயிற்று வலி போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், கற்பூரவள்ளி இலையை பச்சையாக வாயில் போட்டு மென்று திண்பது நல்லது. இதனால் அதில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் உடனடி நிவாரணம் அளிக்கும்.

நன்மை #7

நன்மை #7

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நற்பதமான கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.

தயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா? கூடாதா?

நன்மை #8

நன்மை #8

நெஞ்சு சளியில் இருந்து கற்பூரவள்ளி எண்ணெய் விரைவில் நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான நீரில் 3 துளிகள் கற்பூரவள்ளி எண்ணெயை சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இப்படி 4-5 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், நல்ல பலன் கிடைக்கும்.

நன்மை #9

நன்மை #9

கற்பூரவள்ளி இலையில் மக்னீசியம் மற்றும் கால்கியம் அதிகம் உள்ளது. இது எலும்பு மெட்டபாலிசத்திற்கு மிகவும் முக்கியமான பொருட்களாகும். எனவே உங்கள் எலும்பு ஆரோக்கியமாக பிரச்சனைகளின்றி இருக்க வேண்டுமானால், கற்பூரவள்ளி இலையை அன்றாடம் சாப்பிடுங்கள்.

நன்மை #10

நன்மை #10

கற்பூரவள்ளி அஜீரண கோளாறுகளைத் தடுக்கும். அதுவும் இது பித்த நீரின் உற்பத்தியைத் தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்யும். ஒருவேளை உங்களுக்கு லேசான அஜீரண கோளாறு என்றால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால், ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான நீரில் 2-3 துளிகள் கற்பூரவள்ளி எண்ணெயை சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் செரிமானம் விரைவில் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Eating Oregano Leaves

Here are some health benefits of eating oregano leaves. Read on to know more...
Desktop Bottom Promotion