இத க்ரீன் டீயில சேர்த்து குடிச்சா நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்குமாம் - அது என்ன தெரியுமா?

க்ரீன் டீயின் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். ஆனால் இந்த டீயின் சுவையை அதிகரிக்க அத்துடன் எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ளலாம். இதனால் இந்த டீயினால் கிடைக்கும் நன்மைகள் இரு மடங்காக அதிகரிக்கும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்களிடையே பிரபலமான ஓர் பானம் தான் க்ரீன் டீ. இந்த டீயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது என பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இதனால் தற்போது ஏராளமானோருக்கு க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் இந்த டீ அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனெனில் க்ரீன் டீ ஒருவரது உடல் எடையில் பெறும் மாற்றத்தைக் காண உதவி புரிகிறது.

Health Benefits Of Drinking Green Tea With Lemon

இத்தகைய க்ரீன் டீயின் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். ஆனால் இந்த டீயின் சுவையை அதிகரிக்க அத்துடன் எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ளலாம். இதனால் இந்த டீயினால் கிடைக்கும் நன்மைகள் இரு மடங்காக அதிகரிக்கும். உங்களுக்கு க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியானால், க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடியுங்கள். இக்கட்டுரையில் க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீ தயாரிக்கும் முறை

டீ தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

* க்ரீன் டீ பேக் - 1

* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் - 1 கப்

* தேன் - சுவைக்கேற்ப

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, நன்கு சூடேற்ற வேண்டும்.

* பின் அந்நீரை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் க்ரீன் டீ பேக்கை 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பிறகு அந்த டீ பேக்கை எடுத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து சூடாக குடிக்கவும்.

இப்போது இந்த எலுமிச்சை சாறு கலந்த க்ரீன் டீயைக் குடிப்பதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.

செரிமானத்திற்கு உதவும்

செரிமானத்திற்கு உதவும்

க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினை சேர்க்கும் போது, அது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் உடலுக்கு எளிதில் நன்மை கிடைக்கச் செய்கிறது. மேலும் க்ரீன் டீயில் இருந்து உடல் பெறும் கேட்டசின்களின் எண்ணிக்கையை எலுமிச்சை சாறு ஆறு மடங்கு அதிகரிக்கிறது. செரிமான பிரச்சனையை சந்திப்பவர்கள், க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பது மிகவும் நல்லது.

சர்க்கரை நோயால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும்

சர்க்கரை நோயால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும்

க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கும் போது, சர்க்கரை நோயால் சிறுநீரகங்கள் சேதமடைவது குறைகிறது. க்ரீன் டீயில் ஜிங்க் சத்து உள்ளது. பொதுவாக ஜிங்க் சத்து தான் இன்சுலின் உற்பத்திக்கும், சுரப்பிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இன்சுலின் தான் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. இந்த பானத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சர்க்கரை நோயால் ஏற்படும் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள் போன்றவற்றின் தாக்கத்தைக் குறைக்கிறது.

எடை இழப்பு

எடை இழப்பு

க்ரீன் டீ எடை இழப்பிற்கு உதவும் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கும் போது, உடலில் உள்ள கொழுப்புச் செல்களை எரிக்கும் திறன் இன்னும் அதிகரிக்கும் மற்றும் உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கும். க்ரீன் டீயில் EGCG மற்றும் காப்ஃபைன் போன்றவை உள்ளன. இவை தான் நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்க்கும் போது, அதில் உள்ள பெக்டின் நார்ச்சத்து பசி ஆசைக்கு எதிராக போராட உதவுகிறது.

புற்றுநோயை எதிர்க்கும்

புற்றுநோயை எதிர்க்கும்

க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினை சேர்க்கும் போது, சுவை அற்புதமாக இருக்கும். பொதுவாக எலுமிச்சையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய லெமோனைன் பைட்டோகெமிக்கல் அடங்கியுள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் EGCG கூறுகள் நிறைந்த இந்த பானம், நச்சுக்கள் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களால் உடல் செல்கள் சேதப்படுவதைத் தடுத்து பாதுகாக்கின்றன.

pH அளவு சமநிலையாக இருக்கும்

pH அளவு சமநிலையாக இருக்கும்

க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கும் போது, அது உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நீக்குவதுடன், மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கு முக்கிய காரணமான மூட்டுகளில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கவும் உதவுகிறது. மொத்தத்தில் இந்த பானம் உடலின் pH அளவை சமநிலையில் பராமரிக்க உதவி புரிகிறது.

உடலை சுத்தம் செய்யும்

உடலை சுத்தம் செய்யும்

நீங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பினால், க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடியுங்கள். இதனால் இந்த பானத்தில் உள்ள எலுமிச்சை சிறுநீரின் வழியே உடலினுள் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிந்து, உடலை நச்சுக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி புரியும்.

கல்லீரலுக்கு நல்லது

கல்லீரலுக்கு நல்லது

எலுமிச்சை உடலின் இயற்கையான pH அளவை தக்க வைக்கவும், கல்லீரலை சுத்தம் செய்யவும் உதவுகிறது. மேலும் இது கல்லீரலை அதிகப்படியான பித்தநீரை உற்பத்தி செய்யத் தூண்டி, செரிமானத்திற்கும் உதவி புரிகிறது. அதோடு, இந்த பானத்தில் உள்ள குறிப்பிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான EGCG, EGC போன்றவை ஆக்ஸிஜனேற்றத்தால் செல்கள் சேதமடைவதைக் குறைக்கிறது. ஒருவர் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்து வந்தால், கல்லீரல் செல்கள் சேதமடைவது தடுக்கப்பட்டு, புதிய செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

மெட்டபாலிச விகிதத்தை அதிகரிக்கும்

மெட்டபாலிச விகிதத்தை அதிகரிக்கும்

க்ரீன் டீ மட்டும் ஒரு நாளில் 4% வரை அடிப்படை மெட்டபாலிச விகிதத்தை அதிகரிக்கும் என்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இது ஒரு நாளைக்கு சுமார் 70 கலோரிகளை கூடுதலாக எரிக்கிறது. இருப்பினும் ஒரு நாளைக்கு 3-4 கப் க்ரீன் டீ குடிப்பது என்பது நல்லதல்ல. எனவே ஒருமுறை குடித்தாலும் முழு நன்மைகளைப் பெற நினைத்தால், க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளுங்கள். இது இரட்டிப்பு நன்மைகளைப் பெற உதவி புரியும்.

சளி, இருமலை சரிசெய்யும்

சளி, இருமலை சரிசெய்யும்

எலுமிச்சையில் வைட்டமின் சி முழுமையாக நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முழுமையாக நிறைந்துள்ன. இதுவும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பெற உதவுகிறது. இந்த இரண்டையும் ஒன்றாக குடிக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, சளி, இருமல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு, விரைவில் குணமடைய உதவுகிறது.

இதய நோயைத் தடுக்கும்

இதய நோயைத் தடுக்கும்

க்ரீன் டீயை ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஒருவர் சரியான அளவில் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், எதிர்பார்த்தவாறு உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த பானம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் இது இரத்த குழாய்களில் அடைப்பை உண்டாக்கும், கொலஸ்ட்ராலை எரித்து குறைக்க உதவுகிறது. நாள்பட்ட கொலஸ்ட்ரால் அல்லது இதய பிரச்சனையைக் கொண்டவர்கள், தினமும் எலுமிச்சை கலந்த க்ரீன் டீயை குடிப்பது நல்லது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், இது உடலைத் தாக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்து, உடலைப் பாதுகாக்கும். ஆகவே தினமும் ஒரு கப் க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுத்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion