Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ஏலக்காய் நீரை தினமும் குடிப்பதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?
ஏலக்காய் பொதுவாக உணவின் சுவைக்காகவும், மணத்திற்காகவும் பயன்படுத்தும் ஓர் மசாலாப் பொருள். அதோடு இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. எனவே இந்த ஏலக்காயை நீரில் ஊற வைத்துக் குடிப்பது என்பது மிகவும் நல்லது.
பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றத்துடன் இருப்பது மட்டுமின்றி, பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் சமாளிக்க உதவுகிறது. குறிப்பாக இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட தண்ணீருடன் ஒருசில பொருட்களை சேர்த்துக் குடித்தால், அதனால் கிடைக்கும் பலன்களோ ஏராளம்.

அதுவும் அந்நீரில் ஏலக்காயை பயன்படுத்தினால், அது குடிக்கும் நீரின் பலனை இரட்டிப்பாக்கும். ஏலக்காய் பொதுவாக உணவின் சுவைக்காகவும், மணத்திற்காகவும் பயன்படுத்தும் ஓர் மசாலாப் பொருள். அதோடு இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. எனவே இந்த ஏலக்காயை நீரில் ஊற வைத்துக் குடிப்பது என்பது மிகவும் நல்லது. இப்போது ஏலக்காய் நீரை எப்படி தயாரிப்பது மற்றும் அந்நீர் எவ்வளவு நன்மைகளை வழங்குகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
ஏலக்காய் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பொருள். இதில் ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், அத்தியாவசிய எண்ணெய்கள், டயட்டரி நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏலக்காய் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை எரிப்பதைத் தவிர, வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. இப்போது அந்த நன்மைகளைக் காண்போம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து போன்ற பண்புகள் உள்ளன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஏற்ப வேலை செய்கிறது. இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து கொழுப்புக்களின் அளவைக் குறைக்கவும், இரத்த உறைவு உருவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
ஏலக்காயில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள அதிகப்படியான மாங்கனீசு, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாது என்று நினைத்தால், ஏலக்காய் நீரைக் குடியுங்கள்.

சளி மற்றும் இருமலை சரிசெய்யும்
ஏலக்காயில் ஆன்டிடூசிவ் மற்றும் மியூகோலிடிக் பண்புகள் உள்ளன. இது சளி உருவாகி சேர்வதைத் தடுக்க உதவுகிறது மற்றும் சளி மற்றும் இருமலை நீக்குகிறது. மேலும் இது நுரையீரலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

செரிமான பிரச்சனைகளை நீக்கும்
அறிக்கையின் படி, ஏலக்காயில் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் கூறுகள் உள்ளன. ஏலக்காயை தினமும் உட்கொள்வது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க உதவுகிறது. மேலும் இது பல் சொத்தையாவதைத் தடுக்க உதவுகிறது.

ஏலக்காய் நீரை எப்படி தயாரிப்பது?
முதலில் 5 ஏலக்காயை எடுத்து உரித்து, இரவு தூங்கும் முன் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்நீரை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும். இதனால் உடல் எடை வேகமாக குறையும். ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு லிட்டர் வரை ஏலக்காய் நீரைக் குடிக்கலாம். இப்படி தினமும் குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஏலக்காயில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது சருமத்தில் ஏற்படும் வெடிப்புக்களை குணப்படுத்தும் மற்றும் இது சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை சுத்தப்படுத்தி தெளிவான மற்றும் சீரான நிறத்தை கொடுக்க உதவும். மேலும் இது மென்மையான சருமத்தைப் பெறவும் உதவுகிறது.
நிறைய ஆய்வுகளின் படி, அதிகப்படியான ஏலக்காயை உட்கொள்வது ஆண்மைக் குறைவு பிரச்சனையை ஏற்படுத்துவதைக் காட்டுகிறது. மேலும் ஏலக்காயை சாப்பிடுவதால் பாலுணர்வு குறைவதாக பலர் புகாரளிக்கின்றனர்.
புத்துணர்ச்சியான சுவாசம் மற்றும் நல்ல செரிமானத்திற்கு ஒருவர் ஒரு நாளைக்கு 2-3 பச்சை ஏலக்காயை சாப்பிடலாம். ஏலக்காய் பொடி என்றால் 250 மிகி எடுக்கலாம்.
பித்தப்பை கல் உள்ள நோயாளிகள் ஏலக்காயை கட்டாயம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஏலக்காயை சற்று அதிகம் சாப்பிட்டாலும், அது பித்தப்பை வலியை பெரிதும் அதிகரிக்கும். மேலும் பித்தப்பை நோயாளிகள் ஏலக்காய் சாப்பிடுவது தொற்றுகள் மற்றும் இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஏலக்காயை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது கல்லீரல் பிரச்சனைகள், பசியின்மை, அறுவை சிகிச்சைக்குப் பின் குமட்டல் மற்றும் வாந்தி, வாய்ப்புண் மற்றும் தொண்டை புண் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications