For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க... இல்லன்னா உணவுக்குழாய் புற்றுநோய் வந்துடும்...

பிப்ரவரி 04 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் என்பதால், இப்போது உணவுக்குழாய் புற்றுநோயின் வகைகள் மற்றும் எந்த பழக்கங்கள் இந்த புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைக் காண்போம்.

|

உலகிலேயே மிகவும் கொடிய நோய் என்றால் அது புற்றுநோய் தான். இந்த புற்றுநோயில் 200-க்கும் அதிகமான புற்றுநோய் உள்ளன. புற்றுநோய்க்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாமல் இருக்கும் போது, அது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவி, இறுதியில் மரணத்தை உண்டாக்கும். முன்பெல்லாம் புற்றுநோய் வந்தால், மரணம் நிச்சயம் ஏற்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், பல புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

Habits That Increase The Chances Of Esophageal Cancer In Tamil

அப்படிப்பட்ட புற்றுநோய்களில் ஒரு வகை தான் உணவுக்குழாய் புற்றுநோய். இந்த புற்றுநோயானது உணவுக்குழாயின் உட்புற சுவற்றில் ஏற்படும். உணவுக்குழாய் மிகவும் நீளமான குழாய் மற்றும் இது தொண்டையில் இருந்து வயிற்று பகுதிக்கு செல்கிறது. இந்த உணவுக்குழாயின் வழியாக தான் நாம் உண்ணும் உணவுகளானது வயிற்றை அடைந்து செரிமானமாகிறது. பிப்ரவரி 04 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் என்பதால், இப்போது உணவுக்குழாய் புற்றுநோயின் வகைகள் மற்றும் எந்த பழக்கங்கள் இந்த புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுக்குழாய் புற்றுநோய் வகைகள்

உணவுக்குழாய் புற்றுநோய் வகைகள்

உணவுக்குழாய் புற்றுநோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை அடினோகார்சினோமா மற்றும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா. இதில் அடினோகார்சினோமா என்பது உணவுக்குழாயின் அடிப்பகுதியில் ஏற்படக்கூடியது. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா என்பது உணவுக்குழாயின் மேல் பகுதியில் ஏற்படக்கூடியது. இந்த வகை புற்றுநோயால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது எந்த பழக்கங்கள் எல்லாம் ஒருவருக்கு உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைக் காண்போம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

நாம் உண்ணும் சில உணவுகள் உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆம், உதாரணமாக, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகம் உட்கொள்ளும் போது, அது உணவுக்குழாய் புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கிறது. இருப்பினும் இதுக்குறித்து கூடுதல் ஆய்வானது தேவைப்படுகிறது. எதுவாயினும், நீங்கள் இதுவரை பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் பிற உணவுகளை அதிகம் உட்கொண்டு வருபவராயின், முதலில் அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

மிகவும் சூடான பானங்கள்

மிகவும் சூடான பானங்கள்

நீங்கள் தினமும் காபி, டீ-யை கொதிக்க கொதிக்க குடிப்பவராயின், இனிமேல் அப்படி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சமீபத்திய ஆய்வு ஒன்றில், சூடான பானங்களைக் குடிப்பதற்கும், உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையே தொடர்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அளவுக்கு அதிகமான சூட்டில் பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது

புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது

புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது ஆகிய இரண்டுமே பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக சிகரெட்டில் உள்ள புகையிலை உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் ஆபத்து காரணிகளுள் முக்கியமானது. அதேப்போல், மது அருந்துவதும் இந்த புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இந்த இரண்டு பழக்கங்களையும் உடனே தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

உடல் பருமன்

உடல் பருமன்

உடல் பருமன் அல்லது அதிகப்படியான உடல் எடையைக் கொண்டவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் பானைப் போன்று பெரிய தொப்பையைக் கொண்டவர்களுக்கு இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. உண்ணும் உணவுகளை ஜீரணிக்கத் தேவையான அமிலம் மற்றும் நொதிகளை இரைப்பை உருவாக்குகிறது. சில நேரங்களில் இந்த அமிலம் இரைப்பையில் இருந்து உணவுக்குழாய் வழியே மேலே உயரும் போது, இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த நோய் உள்ளவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான அபாயம் சற்று அதிகமாக உள்ளது. எனவே உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயலுங்கள்.

போதுமான உடற்பயிற்சி செய்யாமை

போதுமான உடற்பயிற்சி செய்யாமை

ஒருவரது ஆரோக்கியத்தில் உடற்பயிற்சி முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவர் தினமும் உடற்பயிற்சிகளை செய்து வந்தால், உடலில் ஏற்படும் பல நோய்களைத் தடுக்கலாம் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம். எனவே இந்த புற்றுநோய் வராமல் இருக்க, தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Habits That Increase The Chances Of Esophageal Cancer In Tamil

In this article, we have shared some daily habits that increase the chances of esophageal cancer. Read on...
Story first published: Wednesday, February 1, 2023, 17:18 [IST]
Desktop Bottom Promotion