For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழங்கால் வலி தாங்க முடியலையா? நம்ம பாட்டி வைத்தியத்தை முயற்சி பண்ணி பாருங்க...

ஒருவருக்கு முழங்கால் வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. சுளுக்கு, எலும்பு முறிவு, காயங்கள் அல்லது ஆர்த்ரிடிஸ் போன்ற தீவிரமான பிரச்சனைகள் காரணமாக முழங்கால் வலி ஏற்படலாம்.

|

தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால், பல நோய்களால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று தான் முழங்கால் வலி. ஒருவருக்கு முழங்கால் வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. சுளுக்கு, எலும்பு முறிவு, காயங்கள் அல்லது ஆர்த்ரிடிஸ் போன்ற தீவிரமான பிரச்சனைகள் காரணமாக முழங்கால் வலி ஏற்படலாம்.

Grandma Remedies To Treat Knee Pain

ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் மூட்டு இணைப்புக்கள் மற்றும் எலும்புகளில் உள்ள அழற்சி தான். இந்த பிரச்சனையை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முடியும். இக்கட்டுரையில் முழங்கால் வலியை சரிசெய்ய உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, வலியில் இருந்து நிவாரணம் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெப்ப மற்றும் குளிர் சிகிச்சை

வெப்ப மற்றும் குளிர் சிகிச்சை

ஹீட் பேடு (Heat Pad) முழங்காலில் உள்ள இறுக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும். அதே சமயம் ஐஸ் பேக் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, வீக்கத்தைக் குறைக்கும். வேண்டுமானால் கோல்டு பேடு (Cold Pad), ஹீட்டிங் பேட், ஹாட் பேக்ஸ் அல்லது எலக்ட்ரிக் ப்ளாக்கெட் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

இஞ்சி சாறு

இஞ்சி சாறு

இஞ்சி ஏராளமான மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பதால், ஆயுர்வேதத்தில் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருளும் கூட. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆரத்ரிடிஸ் அல்லது வயிற்று வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். எனவே முழங்கால் வலி உள்ளவர்கள், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடிக்க, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் முழங்கால் வலியைக் குறைக்க உதவும். அதன் கார விளைவு, முழங்கால் வலியைக் குறைத்து, உங்கள் இயக்கத்தை மேம்படுத்தும் தசைக் கட்டமைப்பை மென்மையாக்குகிறது. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, தூங்கும் முன் குடியுங்கள். இல்லாவிட்டால், ஆப்பிள் சீடர் வினிகரை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, வலிமிக்க முழங்கால் பகுதியில் நேரடியாக தடவுங்கள்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயைக் கொண்டு வலியுள்ள முழங்கால் பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்தால் மாயம் நிகழும். கடுகு எண்ணெய் மசாஜ் மூலம் வலியினால் சந்திக்கும் அசௌகரியத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். ஏனெனில் இந்த மசாஜ் முழங்கால் பகுதியில் இரத்த ஓட்டத்தை தூண்டிவிட்டு, வலி மற்றும் அழற்சியைக் குறைக்கும்.

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர் முழங்கால் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அக்குபஞ்சர் சிகிச்சையை ஒருமுறை மேற்கொள்ளுங்கள். இதனால் ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் வீக்கத்தினால் ஏற்படும் வலியும் குறையும். இது அபாயம் ஏதும் இல்லாத ஒரு முறை என்பதால், இதை நிச்சயம் அனைவரும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வலியைக் குறைக்க உதவும். மேலும் இது முழங்கால் வலியில் இருந்து உடனடி நிவாரணமும் அளிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் சிறிது நீர் மூன்றையும் ஒன்றாக கலந்து, 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை இறக்கி குளிர வைத்து, சுவைக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை 1 டம்ளர் பாலில் சேர்த்தும் கலந்து குடிக்கலாம்.

குறிப்பு

குறிப்பு

* ஆர்த்ரிடிஸ் மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க அதிகப்படியான உடல் எடை இருந்தால், அதை அவசியம் குறைக்க வேண்டும்.

* உடற்பயிற்சிகளான சைக்கிளிங், நீச்சல் அல்லது வாக்கிங் போன்றவை முழங்கால் வலியை சரிசெய்யும்.

* மூட்டு வலிகளிலிருந்து நிவாரணம் வழங்குவதில் உடல் சிகிச்சையும் பயனுள்ளதாக இருக்கும்.

* பல மாதங்களாக வலி நீடித்திருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Grandma Remedies To Treat Knee Pain

Here are some grandma remedies to treat knee pain. Read on...
Story first published: Saturday, September 28, 2019, 16:23 [IST]
Desktop Bottom Promotion