For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல் வலி தாங்க முடியலையா? இந்த வழிய ட்ரை பண்ணுங்க... உடனடி நிவாரணம் கிடைக்கும்..

பூண்டு சாப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது கிடையாது. வெளிப்புற பயன்பாட்டிற்கும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அதிலும், பூண்டு எண்ணெயில் ஏராளமான குணநலன்கள் அடங்கியுள்ளன.

|

பூண்டு அனைத்து வித சமையலுக்கு ஏற்றது என்றே கூறலாம். பூண்டு அதற்கென ஒரு தனி சுவை மற்றும் கடுமையான மணத்தை கொண்டது. பூண்டின் மணத்தை விரும்புபவர்கள் உலகம் முழுவதும் ஏராளமாக உள்ளனர். இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

Health Wonders Of Garlic Oil

உதாரணத்திற்கு, கொழுப்பை கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், செரிமானத்தை சீராக்குதல் என சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்திற்கும், பூண்டில் காணப்படும், அல்லிசின் மற்றும் டயல் சல்பைடு தான் முக்கிய காரணம்.

MOST READ: நைட் தூங்குறதுக்கு முன்னாடி யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

பூண்டு சாப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது கிடையாது. வெளிப்புற பயன்பாட்டிற்கும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அதிலும், பூண்டு எண்ணெயில் ஏராளமான குணநலன்கள் அடங்கியுள்ளன. இப்போது பூண்டு எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், அவற்றால் கிடைக்கப் பெறும் நன்மைகள் என்னவென்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்... வாருங்கள் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகப்பரு சிகிச்சை

முகப்பரு சிகிச்சை

பூண்டு சருமத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. அதிலுள்ள, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களான, வைட்டமின் சி, செலினியம், அல்லிசின், ஜிங்க், காப்பர் போன்றவை தான் சரும பராமரிப்பிற்கு மிகவும் ஏற்றது. அதுமட்டுமின்றி, பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு ஏற்படாமல் தடுப்பதோடு, முகப்பரு பிரச்சனையை சரிசெய்யவும் உதவிடுகிறது. பூண்டில் காணப்படும் ஜிங்க், சரும சுரப்பிகளை கட்டுப்படுத்தி அதிகமான எண்ணெய் பசை உள்ள சருமத்தை சரிசெய்திடும்.

*நீங்கள் உபயோகிக்கும் பேஸ் பேக்கில் சில துளிகள் பூண்டு எண்ணெய் கலந்து பரு உள்ள இடத்தில் போட்டால் முகப்பரு இருந்த இடம் தெரியாமல் மறைந்திடும்.

காது வலி

காது வலி

நம் முன்னோர்களே காது வலிக்கு பயன்படுத்தும் ஒரே மருந்து பூண்டு எண்ணெய் தான். காது வலிக்கு முக்கிய காரணம் காதுகளில் ஏற்படக்கூடிய தொற்றுகள் தான். பூண்டில் உள்ள ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள், காதுகளில் ஏற்படக்கூடிய பாக்டீரியா தொற்றுகளை நீக்கி காது வலியை சரி செய்திடும்.

*சில துளிகள் பூண்டு எண்ணெயை, கடுகு எண்ணெயுடன் கலந்து வெதுவெதுப்பாக சூடேற்றி வலி உள்ள காதில் தொடர்ந்து பயன்படுத்தவும். மீதமுள்ள எண்ணெயை எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முடி உதிர்வு

முடி உதிர்வு

முடி உதிர்வுக்கு எண்ணற்ற வீட்டு வைத்தியங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் மிகவும் பயனுள்ளது என்றால் பூண்டு எண்ணெய் மசாஜ் தான். இப்படி செய்வதன் மூலம் முடியின் வேர்கள் வலுபெற்று முடி உதிர்வு குறையும். அதுமட்டுமல்லாது, தொடர்ந்து பூண்டு எண்ணெய் பயன்படுத்தி வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

*முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து விடுபட, இரவு தூங்குவதற்கு முன்பு பூண்டு எண்ணெயை கூந்தலுக்கு தடவிக் கொண்டு காலை எழுந்து ஷாம்பு போட்டு குளித்திடவும். இதன் மூலம் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும்.

பொடுகு தொல்லை

பொடுகு தொல்லை

முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பொடுகு பிரச்சனை. பாக்டீரியா தொற்று மற்றும் ஸ்கால்ப் அழற்சியால் கூட இது ஏற்படக்கூடும். பூண்டில் உள்ள சல்பர், அனைத்து வகை சரும அழற்சியை கட்டுப்படுத்தக்கூடியது.

*பொடுகு பிரச்சனை தீர வேண்டுமென்றால் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஹேர் ஆயிலுக்கு பதிலாக, பூண்டு எண்ணெயை பயன்படுத்துங்கள்.

பல் வலி

பல் வலி

வலிகளிலேயே பொறுத்துக் கொள்ள முடியாதது என்றால் அது பல் வலி தான். எப்போது வலி ஏற்படுமென்றே தெரியாது. அப்படிப்பட்ட வலிக்கு இயற்கை மருந்து பயன்படுத்துவதை விரும்புபவர்களாக இருந்தால், நான் அறிவுறுத்துவது பூண்டு எண்ணெயை தான். பூண்டில் காணப்படும் அல்லிசின் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் பண்புடையது. அதனால் எத்தகைய பல் வலியும், வீக்கமும் சரியாகிவிடும். சொத்தை பல் ஏற்படுவதையும் இது தடுத்திடும்.

வீட்டிலேயே பூண்டு எண்ணெய் தயாரிப்பது எப்படி?

வீட்டிலேயே பூண்டு எண்ணெய் தயாரிப்பது எப்படி?

கடைகளில் வாங்குவதை விட வீட்டில் இயற்கை முறையில் செய்யப்படும் அனைத்து எண்ணெய்களும் மிகவும் சிறந்தது. அந்த வகையில் பூண்டு எண்ணெய் செய்வது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் ஒன்றுமல்ல.

* சில பூண்டு பற்களை தோலுரித்து, தட்டி எடுத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் ஆலிவ் ஆயில் அல்லது உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு எண்ணெய் ஊற்றவும்.

* அத்துடன் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து 2 நிமிடங்கள் சூடேற்றிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.

* எண்ணெய் முற்றிலும் ஆறிய பிறகு சுத்தமான டப்பாவில் ஊற்றி, தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Garlic Oil: Health Benefits And Side Effects

Here are some health wonders of garlic oil. Read on...
Desktop Bottom Promotion