Latest Updates
-
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
இந்த உணவுகளை எப்பவும் குக்கரில் சமைக்காதீங்க... அது பெரிய ஆபத்தை ஏற்படுத்துமாம்... உஷார்...
சில சமயங்களில் பிரஷர் குக்கரில் சமைப்பதும் ஆபத்தாக முடியும். குறிப்பாக சில உணவுப் பொருட்களை குக்கரில் சமைத்தால் விபத்துக்கள் ஏற்படும். அதோடு அதில் சமைக்கும் உணவில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும்.
இன்றைய காலகட்டத்தில் சமைத்து சாப்பிட பலருக்கும் சோம்பேறித்தனம். இதனால் பெரும்பாலான மக்கள் கடைகளில் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இப்படி கடைகளில் வாங்கி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் தான் பாழாகும். இன்னும் சிலர் வேகமாக சமைத்து முடிக்க வேண்டும் என்பதற்காக பிரஷர் குக்கரில் சமைக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் பிரஷர் குக்கரில் சமைப்பதும் ஆபத்தாக முடியும். குறிப்பாக சில உணவுப் பொருட்களை குக்கரில் சமைத்தால் விபத்துக்கள் ஏற்படும். அதோடு அதில் சமைக்கும் உணவில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும்.

இன்றைய அவசர உலகில் பிரஷர் குக்கர் மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான பாத்திரங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுகிறது. இருப்பினும், பல காரணங்களால் இந்த குக்கர் சில நேரங்களில் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள். எனவே பிரஷர் குக்கரைப் பயன்படுத்துபவர்கள், ஆபத்துக்களைத் தவிர்க்க சில உணவுப் பொருட்களை அதில் சமைக்காதீர்கள். இப்போது குக்கரில் சமைக்கக்கூடாத உணவுப் பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.

அரிசி
பிரஷர் குக்கரில் பொதுவாக பலரும் சாதத்தை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் குக்கரில் அரிசியை சமைப்பதால், அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் உருவாகி, பல தீங்கு விளைவிக்கும் நோய்களுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. மேலும் குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிட்டால் உடல் பருமனாகும். எப்படியெனில் குக்கரில் சாதத்தை சமைக்கும் போது, அதில் உள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருக்கிறது. இதனால் உடல் எடை கூடுகிறது.

உருளைக்கிழங்கு
நம்மில் பலர் உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் தான் வேக வைப்போம். ஏனெனில் உருளைக்கிழங்கை எளிதில் வேக வைப்பதற்கான எளிய வழி இது தான். இருப்பினும், உருளைக்கிழங்கில் மாவுச்சத்து உள்ளது. எனவே இதை குக்கரில் சமைக்கக்கூடாது. பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை சமைப்பது உங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும். அதுவும் புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பல உடல்நல நோய்களுக்கு வழிவகுக்கும்.

பால் பொருட்கள்
பால் பொருட்களை எப்போதும் பிரஷர் குக்கரில் சமைப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. குக்கரானது விரைவில் வேகாமல் இருக்கும் உணவுகளுக்காக தயாரிக்கப்பட்ட பாத்திரம். ஆனால் பால் குறைவான நேரத்தில் சூடாகக்கூடியது என்பதால் பாலால் தயாரிக்கப்பட்ட எந்த உணவுப் பொருட்களையும் குக்கரில் சமைக்காதீர்கள்.

முட்டை
சிலர் முட்டைகளை குக்கரில் வேக வைப்பார்கள். பிரஷர் குக்கரில் முட்டைகளை வேக வைக்கும் போது பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. முட்டைகளை வேக வைப்பதற்கு அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. எனவே அதிக வெப்பநிலையில் வைத்து முட்டைகளை குக்கரில் சமைத்தால் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகளை விட சத்தானவை எதுவும் இருக்க முடியாது. இப்படி சத்துக்கள் அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்போதும் குக்கரில் போட்டு வேக வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அவற்றில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பிற சத்துக்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

மீன்
பொதுவாக மீன் வேகமாக வெந்துவிடும். அத்தகைய மீனை குக்கரில் ஒருபோதும் சமைக்கக்கூடாது. ஏனெனில் மீன் சற்று அளவுக்கு அதிகமாக வெந்துவிட்டால், அதன் சுவையே கெட்டுவிடும். அதோடு மீனில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும். எனவே மீனை குக்கரில் சமைக்காதீர்கள்.

குறிப்பு
பிரஷர் குக்கரில் எப்போதும் சமைக்கும் போதும், குக்கரை மூடிய பின் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பிரஷர் குக்கரைத் திறப்பதற்கு முன்பும் கவனமாக இருக்க வேண்டும். அடுப்பில் இருந்து குக்கரை இறக்கிய பின் குறைந்தது 15 நிமிடங்கள் காத்திருந்து பின் மூடியைத் திறக்கவும். மிகவும் பழமையான பிரஷர் குக்கர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது விபத்துக்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications