Just In
- 1 hr ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி சிக்கல் தீர்க்கப்படும்...
- 11 hrs ago
ஒயிட் சாஸ் பாஸ்தா
- 12 hrs ago
உங்க ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் மாத்திரைகள 60% தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்!
- 12 hrs ago
கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் போடுவது எப்படி?
Don't Miss
- News
சென்னையில் இரவில் கொட்டித்தீர்த்த மழை.. சூறைக்காற்று இடி-மின்னலுடன் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி!
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Movies
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளும் பானங்களும்... உங்க சிறுநீரில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் தெரியுமா?
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். நாம் ஆரோக்கியமான உணவுகளை தான் எடுத்துக்கொள்கிறோமா என்பதை நம் உடல் செயல்பாடுகள் வெளிக்காட்டுகிறன. உணவின் தரத்திற்கு சிறுநீர் ஒரு நல்ல குறிகாட்டியாகும். உணவில் சில தாதுக்களை அதிக அளவில் உட்கொள்வது சிறுநீரில் உள்ள நிறம், வாசனை மற்றும் படிவுகளை மாற்றும். அதேபோல சிறுநீர் நுரையாக வெளியேறுவதும் பிரச்சனையை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் நீரிழப்பு, சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது ஆண்களில் புரோஸ்டேட் வீக்கம் அல்லது பெண்களின் பிறப்புறுப்பு, பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், சிறுநீரக கற்கள் அல்லது அதிகப்படியான உணவுப் பழக்கத்தால் ஏற்படுகிறது.
நோயியலுக்குரிய காரணத்தைக் கண்டறிய உங்கள் மருத்துவரை அணுகுவதற்கு முன், காரணமான உணவுக் காரணிகளைப் பற்றி தெரிந்துகொண்டு அவற்றை தவிருங்கள். அத்தகைய உணவு மற்றும் பானங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உப்பு உணவு
உப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிருங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அன்பு அதிகமாக காணப்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், பதிவு செய்யப்பட்ட உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவைகளும் இதில் அடங்கும். அதிக உப்பு உட்கொள்ளல் மற்றும் போதுமான தண்ணீர் உட்கொள்ளாமால் இருப்பது நீரிழப்பு மற்றும் மேகமூட்டமான நுரை சிறுநீருக்கு வழிவகுக்கிறது.

உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப்
உயர்-பிரக்டோஸ் கார்ன் சிரப் என்பது சோள மாவுச்சத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு ஆகும். வழக்கமான கார்ன் சிரப் தயாரிப்பைப் போலவே, ஸ்டார்ச் நொதிகளால் குளுக்கோஸாக உடைக்கப்படுகிறது. தொகுக்கப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களிலும் தீங்கற்றதாகத் தோன்றும் இந்தச் சேர்க்கை. குறிப்பாக சர்க்கரை கலந்த சோடாக்கள் மற்றும் இனிப்பு வகைகளை அதிகமாக உட்கொள்ளும் போது, யூரிக் அமிலத்தின் உற்பத்தியை அதிகரித்து, நுரை சிறுநீரகத்தை ஏற்படுத்துகிறது.

பால் பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் உடலில் பாஸ்பரஸ் அதிகமாகி சிறுநீரை நுரையாக வெளியேற்றுகிறது. ஒரு நபருக்கு அடிப்படை சிறுநீரக நோய் இருக்கும்போது இது துரிதப்படுத்தப்படுகிறது.

இறைச்சி
சிவப்பு இறைச்சி மற்றும் கோழி ஆகியவைற்றை சாப்பிடும்போது, பாஸ்பரஸை அதிகமாக வெளியிடுகிறது. இது பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிகப்படியான உப்புடன் சிறுநீரில் நுரையை ஏற்படுத்துகிறது.

கடல் உணவு :
மத்தி, நெத்திலி மற்றும் மட்டி போன்ற சில வகையான கடல் உணவுகளில் ப்யூரின்கள் அதிகம் உள்ளன. இது யூரிக் அமிலமாக வளர்சிதை மாற்றமடைந்து சிறுநீரின் நிறமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

மது
அதிகப்படியான மது அருந்துதல் நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. அதனால் சிறுநீரின் நிறம் மாறுகிறது. இது மேலும் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

காஃபின்:
பெரும்பாலும் நாம் அதிகமாக குடிக்கும் பானங்கள் காபி, டீ. கறுப்பு மற்றும் பச்சை தேயிலைகளில் காஃபின் அதிகமாக இருப்பதால், இது நீர் இழப்பை ஏற்படுத்தும்.

இறுதிகுறிப்பு
மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து உணவு மற்றும் பானங்கள் மிதமாக உட்கொள்ளும் போது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சரியான நீரேற்றத்துடன் நன்கு சமநிலையான உணவு சாப்பிடுவது முக்கியமானது. உங்கள் உணவை மாற்றிய பிறகும், சிறுநீரில் உள்ள நுரைகள் நீங்கவில்லை அல்லது சீழ், வெளியேற்றம், வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.