For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸிற்கான முதல் தடுப்பூசி பரிசோதனையை தொடங்கியது அமெரிக்கா..!

கொரோனா வைரஸ் வேகமாக உலகெங்கிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்க கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.

|

கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மக்களிடையே அதிகம் பரவி, பல உயிர்களை அன்றாடம் பறித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக இதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள பல ஆராய்ச்சி குழுக்கள் போட்டிப் போட்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

First Clinical Trial Of Covid-19 Vaccine Begins

கொரோனா வைரஸ் வேகமாக உலகெங்கிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்க கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் மனித பரிசோதனை மார்ச் 16 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டது.

MOST READ: கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்புடன் இருக்க சீனர்கள் குடிக்கும் மூலிகை சூப்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்டனா நிறுவனம்

மார்டனா நிறுவனம்

மார்டனா என்ற அமெரிக்க நிறுவனம் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இது mRNA-1273 ஆகும். இந்நிறுவனம் தான் கண்டுபிடித்த தடுப்பூசியானது பிப்ரவரி 25 ஆம் தேதி அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்துக்கு அனுப்பியது.

mRNA-1273

mRNA-1273

mRNA-1273 என்பது ஒரு mRNA தடுப்பூசி ஆகும். இது ஸ்பைக் (S) புரதத்தின் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட வடிவத்திற்கு குறியாக்கம் செய்கிறது. இது அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தின் ஆராச்சியாளர்களுடன் இணைந்து மாடர்னா ஆராய்ச்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

முதல் மனித சோதனை

முதல் மனித சோதனை

சியாட்டிலிலுள்ள கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த முதல் மனித சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனைக்கு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் நிதியுதவி செய்து வருகின்றன. முதல் நோயாளிக்கு மார்ச் 16 ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. இந்த சோதனையில் 45 இளம், ஆரோக்கியமான தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்களுக்கு வெவ்வேறு அளவுகளில் தடுப்பூசி போடப்பட்டது.

பாதிப்பு ஏதும் இருக்காது

பாதிப்பு ஏதும் இருக்காது

கொரோனா வைரஸ் தடுப்பூசியில் உண்மையான வைரஸ் ஏதும் இல்லாததால், இந்த சோதனையில் பங்கேற்பாளருக்கு தடுப்பூசியில் எந்த ஒரு பாதிப்பு ஏற்படவும் சாத்தியம் இல்லை. இந்த சோதனையின் குறிக்கோள் என்னவென்றால், பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளதா என்பதுடன், பயனுள்ள நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருத்தமான அளவை தீர்மானிப்பதும் தான்.

இதர நிறுவனங்கள்

இதர நிறுவனங்கள்

உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களும், கம்பெனிகளும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன. இதில் இன்னோவியோ பார்மாசூட்டிகல்ஸ் அதன் சோதனையை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மற்றும் அடுத்த மாதம் மிசோரியின் கன்சாஸ் நகரில் உள்ள ஒரு சோதனை மையத்திலும் தொடங்க எதிர்பார்க்கிறது.

யு.எஸ். சரிலுமாப்

யு.எஸ். சரிலுமாப்

கடுமையான கொரோனா வைரஸ் நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட COVID-19 நோயாளிகளுக்கு கெவ்ஸாரா (சரிலுமாப்) பற்றிய யு.எஸ். மருத்துவ பரிசோதனையை ரெஜெனெரான் பார்மாசியூடிகல்ஸ் மற்றும் சனோஃபி தொடங்கின. யு.எஸ். சரிலுமாப் (U.S. Sarilumab) ஒரு மனித மோனோக்ளோனல் ஆன்டிபாடி ஆகும். இது இன்டர்லூகின் -6 (ஐ.எல் -6), ஒரு புரோஇன்ஃப்ளமேட்டரி சைட்டோகைனைத் தடுக்கிறது. இது தடுப்பூசி அல்ல.

ரெமெடிசிவர்

ரெமெடிசிவர்

COVID-19 நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு, வைரஸ் தடுப்பு மருந்தான ரெமெடிசிவரின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவதாக கிலியட் சயின்சஸ் அறிவித்தது. ஆனால் இதுவும் தடுப்பூசி அல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

First Clinical Trial Of Covid-19 Vaccine Begins

The first clinical trial of covid-19 vaccine begins in USA. Read on.
Desktop Bottom Promotion