Just In
- 28 min ago
சர்க்கரை நோயாளிகள் மது அருந்தும் போது அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது தெரியுமா?
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பயணம் சாதகமாக அமையும்...
- 16 hrs ago
பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப இந்த சாக்லேட் ஃபேஸ் பேக்கை போடுங்க..
- 17 hrs ago
பெண்களே! உங்க முன்னாள் காதலன் மீண்டும் உங்கள காதலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
Don't Miss
- Technology
18 ஜிபி ரேம், பிரத்யேக டிஸ்ப்ளே மற்றும் கூலிங் சிஸ்டம் உடன் Asus ROG Phone 6, 6 Pro: தலைசுத்த வைக்கும் அம்சம்!
- Automobiles
வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!
- News
பிரபல நடிகை.. மாமனார் முன்பு அந்த "கோலத்தில்".. இதுல வீடியோ வேற.. மாங்காட்டில் என்ன நடந்தது?
- Movies
"ஏமாற்றிய பாவிகளை மன்னித்துவிட்டேன்"..வனிதா யாரை சொல்யிருக்காங்கனு பாருங்க!
- Finance
சீனா-வுக்கு கதவை திறந்த இந்தியா.. மோடி அரசின் திடீர் முடிவு எதற்காக..?
- Sports
தேர்வுக்குழுவில் திடீர் ஆலோசனை.. கோலி, பண்ட், பும்ராவுக்கு எச்சரிக்கை.. டிராவிட்-க்கு புதிய சிக்கல்!
- Travel
ஸ்டார்கேஸிங் செய்து இரவை இனிமையாக கழிக்க வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்களுக்கு அளவுக்கு அதிகமா வியர்க்குதா? அப்படின்னா உங்களுக்கு இந்த நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
கோடைக்காலத்தில் அதிகம் வியர்ப்பது சாதாரணம் தான். வியர்வை என்பது உடலின் இன்றியமையாத செயல்களில் ஒன்றாகும். வியர்வையின் மூலம் உடலில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படுகின்றன. மேலும் வியர்வை வெளியேறுவதன் மூலம் சருமத்தின் பொலிவும் அதிகரிக்கிறது. கூடுதாக வியர்வையானது உடல் எடை, மனநிலை மற்றும் தூக்கம் போன்றவற்றை நேர்மறையாக பாதிக்கிறது.
ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கும். ஒருவருக்கு உடலில் எந்த நோயும், உடல் உழைப்பும், உஷ்ணமும் இல்லாமல் வியர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஒருவேளை அதிகமாக வியர்த்தால், உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் சுரப்பிகள் அதிகமாக செயல்படுகிறது என்று அர்த்தம். ஒருவருக்கு ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்னும் பிரச்சனை இருந்தால் தான் வழக்கத்தை விட அதிகமாக வியர்க்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை சுரப்பிகள் அதிக சுறுசுறுப்புடன் செயல்படும். இந்த காரணத்தினால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகள் மற்றும் பாதங்கள் எந்நேரமும் வியர்த்தவாறு இருக்கும்.
ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நோயில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் முதன்மை நிலை ஆபத்தானது அல்ல. ஆனால் இரண்டாம் நிலை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இரத்த சர்க்கரை அதிகரிக்கும், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உலகில் சுமார் 3% மக்கள் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவில் வியர்ப்பதற்கான இரண்டு காரணங்கள்:
முதன்மை காரணம்
உடலில் எந்த நோயும் இல்லாமல் அளவுக்கு அதிகமாக வியர்த்தால், அதற்கு காரணம் வியர்வை சுரப்பிகள் தான். இந்த வகையில் வியர்வை சுரப்பிகள் குறிப்பிட்ட நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் போது, உடல் இயல்பை விட அதிகமாக வியர்க்க தொடங்கும்.

இரண்டாவது காரணம்
எப்போது ஒருவர் தைராய்டு சுரப்பி கோளாறு, சர்க்கரை நோய், இறுதி மாதவிடாய் காலம், காய்ச்சல், நரம்பு தளர்ச்சி மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் போது, அளவுக்கு அதிகமாக வியர்க்கும்.

உணவுக் கட்டுப்பாடு தேவை
ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்தால், அவர் தாங்கள் உண்ணும் உணவைக் கட்டுப்படுத்த வேண்டும். அதுவும் பின்வருவனவற்றை நினைவில் கொண்டு பின்பற்ற வேண்டும்.
* காரமான மற்றும் புளிப்பான உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும்.
* சூடான உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும்.
* தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில 10 ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுங்கள்.
* அதிக துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட உணவுகளை உண்ணுங்கள்.

அதிகமாக வியர்ப்பதைத் தடுக்க குடிக்க வேண்டிய பானங்கள்:
மல்லி நீர்
மல்லி விதைகளை இரவு தூங்கும் முன் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் அந்த நீரை மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

வெட்டிவேர் நீர்
அதிகமாக வியர்ப்பவர்களுக்கு கோடையில் இன்னும் அதிகமாக இருக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் சாதாரண நீரைக் குடிப்பதற்கு பதிலாக, வெட்டிவேர் நீரைக் குடிப்பது நல்லது. அதற்கு சிறிது வெட்டிவேரை 2 லிட்டர் நீரில் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரை வடிகட்டி, நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.

எலுமிச்சை நீர்
உப்பு கலந்த எலுமிச்சை நீர், உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிக்க உதவும். பொதுவாக வியர்க்கும் போது, உடலில் உப்பின் அளவு குறையும். இந்த சூழ்நிலையில் எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரைக் குடித்தால், அளவுக்கு அதிகமாக வியர்ப்பதால் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அதிக வியர்வையைத் தடுக்கும் சில இயற்கை வழிகள்:
வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ வியர்வை பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். வெஜிடேபிள் ஆயில் மற்றும் நட்ஸ்களில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளன. எனவே வியர்வை பிரச்சனைகளில் இருந்து விடுபட விரும்பினால், வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

ஆளி விதை
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது வியர்வை பிரச்சனைகளில் இருந்து நிவாரணமளிக்கும். இது தவிர, இது ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, வியர்வைவைக் கட்டுப்படுத்தும். ஆளி விதைகளில் உள்ள உட்பொருட்கள் உடலில் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். இதன் காரணமாகவும் வியர்வை பிரச்சனை குறையும்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா தலைவலி, மன அழுததம் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் இருப்பதால், இது இறுதி மாதவிடாய் அறிகுறிகளைக் குறைத்து, வியர்வை பிரச்சனையைக் குறைக்கிறது. மேலும் இது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவுகளைக் குறைத்து, வியர்வை பிரச்சனையை நீக்குகிறது.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது உடலில் ஹார்மோன் மாற்றங்களைக் கட்டுப்படுத்தி, வியர்வை பிரச்சனையில் இருந்து விடுவிக்கிறது. அதற்கு அதிகம் வியர்க்கும் அக்குள் பகுதியில் ஆப்பிள் சீடர் வினிகரைத் தடவுங்கள் மற்றும் நீரில் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து குடியுங்கள்.