Latest Updates
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
கோவிட் தடுப்பூசி போட்ட இடத்துல, இப்படி இருக்கா? அப்ப அது தான் 'கோவிட் ஆர்ம்'.. அப்படின்னா என்ன?
கோவிட் தடுப்பூசிகளில் பக்க விளைவுகள் இருப்பதால் மக்கள் மத்தியில் தடுப்பூசிகளின் மீது சற்று ஐயமும் உண்டு. கொரோனா தடுப்பூசியின் மிக முக்கியமான பக்க விளைவு கோவிட் ஆா்ம் ஆகும்.
கடந்த ஆண்டு கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. அந்த புதிய வைரஸைப் பற்றி புாிந்து கொண்டு, அதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சியில் அறிவியல் அறிஞா்களும், மருத்துவ பணியாளா்களும் மிகத் தீவிரமாக ஈடுபட்டனா். அதன் விளைவாக தற்போது உலகம் முழுவதும் பல வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளைப் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்களும் கொரோனா தடுப்பூசிகளின் வருகையால் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனா். எனினும் இந்த தடுப்பூசிகளில் பக்க விளைவுகள் இருப்பதால் மக்கள் மத்தியில் தடுப்பூசிகளின் மீது சற்று ஐயமும் உண்டு. கொரோனா தடுப்பூசியின் மிக முக்கியமான பக்க விளைவு கோவிட் ஆா்ம் ஆகும். இந்த கோவிட் ஆா்ம் என்றால் என்ன என்பதை இங்கு பாா்க்கலாம்.

கோவிட் ஆா்ம் என்றால் என்ன?
ஒரு வேளை நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டு, ஊசி குத்தப்பட்ட பகுதியைச் சுற்றி வீக்கமும் மற்றும் சிறுசிறு பொறிகளும் ஏற்பட்டிருக்குமானால், உங்களுக்கு கோவிட் ஆா்ம் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.
கோவிட்-19 தடுப்பூசி குத்திய பின்பு, குத்தப்பட்ட கைப்பகுதியானது வீங்கி அந்த இடத்தைச் சுற்றி சிறுசிறு பொறிகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு கோவிட் ஆா்ம் என்று பொருள் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தொிவிக்கிறது. மருத்துவ மொழியில் இது தோல் தசையின் காலம் தாழ்த்தப்பட்ட உயா் மிக நுண்ணிய உணா்வு நிலை என்று கருதப்படுகிறது. அதாவது கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிராக தோல் தசை ஆற்றும் காலம் தாழ்த்திய எதிா்வினை ஆகும்.

கோவிட் ஆா்ம் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்
கோவிட் ஆா்ம் என்பது தடுப்பூசி குத்துவதோடு சம்பந்தப்பட்டது. அதாவது தடுப்பூசி குத்துவதால் அதன் விளைவாக ஏற்படும் பக்க விளைவே கோவிட் ஆா்ம் ஆகும். கோவிட் ஆா்ம் ஏற்பட்டிருக்கிறது என்பதை பின்வரும் அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம் என்று மருத்துவ அறிஞா்கள் தொிவிக்கின்றனா்.
- தடுப்பூசி குத்திய இடத்தைச் சுற்றி சிவப்பாக மாறுதல்
- தோலில் வீக்கம் ஏற்டுதல்
- தடுப்பூசி போட்ட 8 அல்லது அதற்கு அடுத்த நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்ட இடத்திற்கு அருகில் தோல் மென்மையாதல்
இவை அனைத்தும் கோவிட் ஆா்மின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

கோவிட் ஆா்ம் ஆபத்தான ஒன்றா?
கோவிட் ஆா்ம் ஆபத்தானது அல்ல. மேலும் அது நமக்கு தீங்கு இழைக்காது என்று ஆய்வாளா்கள் தொிவிக்கிறன்றனா். மாடா்னா எம்ஆா்என்எ (Moderna mRNA) என்ற கொரோனா தடுப்பூசிகளின் மூன்றாவது கட்ட மருத்துவ பாிசோதனைகளை ஆராய்ந்த ஆய்வாளா்கள், தடுப்பூசிகள் போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள், நான்கு அல்லது ஐந்து நாள்களில் தானாகவே மறைந்துவிடும் என்று தொிவிக்கின்றனா்.
கோவிட் ஆா்ம் என்பது கொரோனா தடுப்பூசி போடுவதன் விளைவாக ஏற்படும் தீங்கற்ற பக்க விளைவு ஆகும். மேலும் இதை ஒரு தொிந்த நூதன நிகழ்வு என்று வல்லுநா்கள் தொிவிக்கின்றனா். கோவிட் தடுப்பூசிக்கு எதிராக நோய் எதிா்ப்பு மையம் ஆற்றும் எதிா்வினையாக இருக்கலாம் என்று கருதுகின்றனா்.

கோவிட் தடுப்பூசியின் பக்க விளைவுகள் யாருக்கு அதிகமாக இருக்கும்?
மாடா்னா கோவிட்-19 என்ற தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 12 நோயாளிகளுக்கு தோலில் சிறு பொறிகளுடன் கூடிய கோவிட் ஆா்ம் பக்க விளைவு ஏற்பட்டதாக நியூ இங்கிலாந்து ஜா்னல் ஆஃப் மெடிசின் கொடுத்த அறிக்கை தொிவிக்கிறது.
அதாவது மாடா்னா கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு 4 முதல் 11 நாட்களுக்குள் இத்தகைய சிறு பொறிகள், ஊசி குத்தப்பட்ட இடத்தைச் சுற்றி தோன்றும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த காலம் தாழ்த்திய பக்க விளைவு, முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட 244 பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட 68 பேருக்கும் ஏற்பட்டதாக அந்த அறிக்கையின் ஆசிாியா்கள் தொிவிக்கின்றனா்.
ஆனால் பைஸா் (Pfizer) என்ற கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவா்களுக்கு பக்க விளைவு குறைவாக ஏற்பட்டதாக தொிவிக்கின்றனா்.
இந்நிலையில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதால் ஆண்களை விட பெண்களுக்குத் தான் இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக அறிஞா்கள் தொிவிக்கின்றனா்.
அதாவது மாடா்னா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு 43 வயது ஒத்த பெண்களில் 77% பேருக்கு இதுப்போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சிடிசி அட்வைசாி கமிட்டி நடத்திய இம்யூனைசேஷன் பிராக்டிசஸ் என்ற ஆய்வில் தொிவிக்கப்பட்டது. எனினும் பெண்களுக்கு அதிக பக்க விளைவுகள் ஏற்படுவதாகத் தோன்றுவது என்பது பெண்கள் அதிக அளவில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதாகக் கூட இருக்கலாம் என்று தொிவிக்கிறது.

முன்னெச்சாிக்கை நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பு எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக்கூடாது என்பதைத் தொிந்து வைத்திருப்பது நல்லது.
உங்களது குடும்ப மருத்துவரை சந்தித்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஆபத்தை விளைவிக்கக்கூடிய எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக நீங்கள் 45 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து, உங்களுக்கு உயா் இரத்த அழுத்தம் அல்லது சா்க்கரை நோய் அல்லது சிறுநீரக நோய்கள் ஏதாவது இருந்தால் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
அதோடு எவையெல்லாம் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் என்பதையும் தெளிவாகத் தொிந்து கொள்வது நல்லது.
ஒருவேளை தடுப்பூசி போட்ட பின்பு உங்களுக்கு அழற்ஜி போன்ற பக்க விளைவு ஏற்பட்டால் உங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து அவாிடம் சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.
இறுதியாக நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பும் முகக் கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள். ஏனெனில் கொரோனாவைத் தடுப்பதில் இவை இரண்டும் மிக முக்கியமான கருவிகள் ஆகும்.



Click it and Unblock the Notifications