Latest Updates
-
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்!
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Chilli Chapati Recipe In Tamil: நைட் உங்கள் வீட்டில் செய்த சப்பாத்தி நிறைய மீந்து போயுள்ளதா? அந்த சப்பாத்தியை வீணடிக்காமல் அதைக் கொண்டு ஒரு சூப்பரான டிபனை செய்ய வேண்டுமா? அப்படியானால் சில்லி சப்பாத்தியை செய்து கொடுங்கள். இந்த சில்லி சப்பாத்தி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சில்லி சப்பாத்திக்கு சாஸ் எதுவும் தேவையில்லை. நம் வீட்டில் உள்ள மசாலா பொருட்களே போதுமானது. இந்த பக்குவத்தில் சில்லி சப்பாத்தியை செய்யும் போது, ரெஸ்டாரண்ட் சுவையில் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சில்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சப்பாத்தி - 12 (பெரிய சதுர துண்டுகளாக வெட்டியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* குடைமிளகாய் - 1 (பெரிய சதுர துண்டுகளாக வெட்டியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறி மசாலா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2
* முந்திரி - 4
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சப்பாத்திகளை பெரிய சதுர துண்டுகளாக வெட்டி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, சப்பாத்தி துண்டுகளை சேர்த்து லேசாக ப்ரை செய்து தனியாக
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே பேனில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து,
நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறி மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்
சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளி மற்றும் முந்திரியை நன்கு அரைத்து சேர்த்து
கிளறி, சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து வெண்ணெய் சேர்த்து கிளறி, ப்ரை செய்த சப்பாத்தியை சேர்த்து
நன்கு கிளறி, 5 நிமிடம் நன்கு வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான சில்லி சப்பாத்தி தயார்.



Click it and Unblock the Notifications
