October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!

October 2026 Monthly Career Horoscope: அக்டோபர் மாதம் தொடங்கப் போகிறது. இந்த புதிய மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்குமே ஆவல் இருக்கும். முக்கியமாக தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணிபுரிபவர்கள் என ஒவ்வொருவருமே தங்களின் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புவார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமான அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகளால் அனைத்து ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் மாற்றங்களைக் காணக்கூடும்.

October 2026 Monthly Career Horoscope These Zodiac Signs Will See Growth And Profit

அதில் சில ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபத்தை பெறுவதோடு, சில ராசிக்காரர்கள் தங்களின் வேலையில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும். இப்போது 2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் தொழில் ரீதியாக எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

அக்டோபர் மாதமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். சுயதொழில் செய்பவராக இருந்தால், இந்த மாதம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

மிதுனம்

அக்டோபர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பார்கள். சனி பகவான் 10 ஆவது வீட்டில் இருப்பதால், தொழிலில் நல்ல பலன்களைப் பெறக்கூடும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். பேச்சுத்திறன் வலுவாக இருக்கும். மொத்தத்தில் இம்மாதம் தொழில் மற்றும் வேலை ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுவரும்.

துலாம்

அக்டோபர் மாதம் சனி பகவான் 6 ஆவது வீட்டில் இருப்பதால், துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கலாம். சொந்தமாக தொழிலை தொடங்க எண்ணம் இருந்தால், இம்மாதத்தில் முயற்சித்தால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.

மகரம்

அக்டோபர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள். தொழில் முன்னேற்றம் தெளிவாகத் தெரியும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் நன்றாக இருக்கும். இருப்பினும் ராகு, கேதுவின் நிலையில் இம்மாதத்தில் தொழில் தொடர்பான முடிவுகளை அவசரப்பட்டு எடுக்காமல், பொறுமையை யோசித்து எடுத்தால் நல்ல பலனைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, September 30, 2026, 0:08 [IST]
Desktop Bottom Promotion