For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவி புரியும் 5 எண்ணெய்கள்!

பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அவை நமது உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்கின்றன என்பது நாம் அறியாத உண்மையாகும்.

|

ஆரோக்கியமான உணவும் முறையான உடற்பயிற்சியும் இருந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்கலாம் என்பது பொதுவான உண்மை. அவற்றைத் தவிர்த்து சிறிது அக்கறையுடன் முயற்சி செய்தால் கணிசமான அளவிற்கு உடல் எடையைக் குறைக்கலாம். அந்த வகையில் உடல் எடையைக் குறைப்பதற்கு நறுமண சிகிச்சை (Aromatherapy) ஒரு சிறந்த கருவியாக இருக்கும்.

Essential Oils That Promote Weight Loss

பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அவை நமது உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்கின்றன என்பது நாம் அறியாத உண்மையாகும். எண்ணெய்களை உணவாகப் பயன்படுத்தினாலோ அல்லது உடலில் தேய்த்தாலோ, அவை நமக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டும் அல்லாமல் நமது உடல் எடையை குறைப்பதற்கும் உதவி செய்யும். எண்ணெய்களால் நமக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வரை அவற்றை நமது உடல் எடையைக் குறைப்பதற்கு பயன்படுத்தலாம்.

MOST READ: காலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான விஷயங்கள்!

ஆகவே உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவி செய்யும் 5 முக்கியமான எண்ணெய்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சம் பழச்சாற்றைப் போல எலுமிச்சை எண்ணெய்யும் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவி செய்கிறது. எலுமிச்சை எண்ணெய் நமது உடலில் பரவி இருக்கும் நச்சுகளை அகற்றுகிறது. நமது உடலில் உள்ள ஆற்றலின் அளவை அதிகரிக்கிறது. மேலும் செரிமானத்திற்கும் துணை செய்கிறது. எலுமிச்சை எண்ணெயின் வாசனையை நுகர்ந்து பார்த்தால், அது நமது மனநிலையை புத்துணர்ச்சியோடு வைத்திருப்பதோடு மட்டும் அல்லாமல், நமது உடலில் உள்ள கொழுப்பை முறிக்கவும் உதவி செய்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஹூமிடிஃபையரில் (humidifier) இரண்டு முதல் 3 சொட்டு எலுமிச்சை எண்ணெயை ஊற்றிப் பயன்படுத்தினால் அது நல்ல பலன்களைத் தரும்.

லாவெண்டர் எண்ணெய் (Lavender Oil)

லாவெண்டர் எண்ணெய் (Lavender Oil)

நமது மன அழுத்தத்தை குறைப்பதில் லாவெண்டர் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. லாவெண்டர் எண்ணெய் நமது மன அழுத்தத்தை நீக்கி இரவில் நமக்கு நல்ல தூக்கத்தைத் தருகிறது. நமது கைகளில் 4 முதல் 5 சொட்டு லாவெண்டர் எண்ணெயைத் தேய்த்து நுகர்ந்து பார்க்கலாம். அதோடு இரவு தூங்குவதற்கு முன்பாக நமது நெற்றி, மணிக்கட்டு மற்றும் பின்கழுத்து போன்ற பகுதிகளில் லாவெண்டர் எண்ணெயைத் தேய்த்தபின் தூங்கலாம். எனினும் ஆரோக்கியமற்ற உணவுகள் மீது நாம் கொண்டிருக்கும் மோகத்தைக் கைவிட்டால்தான் இந்த எண்ணெயால் பலன் கிடைக்கும்.

மிளகுக் கீரை எண்ணெய் (Peppermint oil)

மிளகுக் கீரை எண்ணெய் (Peppermint oil)

மிளகுக் கீரை எண்ணெய் நமது ஆற்றலை அதிகரிக்க உதவி செய்கிறது. அதோடு காயம்பட்ட நமது தசைகளை விரைவாகக் குணப்படுத்துகிறது. மிளகுக் கீரை எண்ணெயை நுகர்ந்து பார்த்தால் அது ஆரோக்கியமற்ற உணவுகளின் மீது நாம் வைத்திருக்கும் மோகத்தைக் குறைத்துவிடும். அதோடு நமக்கு ஒரு நிறைவான உணர்வையும் தரும். நீரில் 4 முதல் 5 சொட்டு மிளகுக் கீரை எண்ணையைக் கலந்து குளித்தால் அது நல்ல பலனைத் தரும்.

கிரேப்ஃபுரூட் எண்ணெய் (Grapefruit oil)

கிரேப்ஃபுரூட் எண்ணெய் (Grapefruit oil)

கிரேப்ஃபுரூட் எண்ணெய் உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்கும், நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் உதவி செய்கிறது. கிரேப்ஃபுரூட் எண்ணெயை வயிற்றில் தேய்த்துவிட்டால் அது வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதோடு, இடுப்பின் சுற்றளவையும் குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதயத் துடிப்பை சீர்படுத்துகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் பசியைக் குறைக்கவும் உதவி செய்கிறது.

இஞ்சி எண்ணெய்

இஞ்சி எண்ணெய்

இஞ்சி எண்ணெய் உடல் வீக்கம், மன அழுத்தம் மற்றும் இனிப்பு பண்டங்களின் மீதான மோகம் ஆகியவற்றைக் குறைத்து செரிமானத்திற்கு உதவி செய்கிறது. மேலும் இது கொழுப்பைக் குறைப்பதற்கு உதவி செய்வதோடு நமது வளர்சிதை மாற்றத்தையும் ஊக்கப்படுத்துகிறது. நீரில் 2 அல்லது 3 சொட்டு இஞ்சி எண்ணெயைக் கலந்து குளித்தால் அது நல்ல பலனைத் தரும். இஞ்சி எண்ணெயை நேரடியாக நுகர்ந்து பார்த்தாலும் நல்லதே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Essential Oils That Promote Weight Loss

Here we listed some essential oils that promote weight loss. Read on...
Desktop Bottom Promotion