For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டீ, காபி குடிப்பவரா நீங்கள்? அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!

உயர் இரத்த அழுத்தத்தை போலவே, குறைந்த இரத்த அழுத்தமும் ஒரு உடல்நலப் பிரச்சனையாகும்.

|

சர்க்கரை நோய் எப்படி வெகுஜன மக்களிடையே சாதாரணமாக இருக்கிறதோ, அதேபோல இரத்த அழுத்த பிரச்சனையும் இருக்கிறது. உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் என இரு பிரிவு உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை போலவே, குறைந்த இரத்த அழுத்தமும் ஒரு உடல்நலப் பிரச்சனையாகும். குறைந்த இரத்த அழுத்தத்தால் மயக்கம், குமட்டல், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும். சில சமயங்களில், குறைந்த இரத்த அழுத்தம் சாதாரணமாக இருக்கலாம் மற்றும் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் கூட இருக்கும்.

effective-home-remedies-for-low-blood-pressure

இருப்பினும், குறைந்த இரத்த அழுத்தம் அறிகுறிகள் தென்படும்போது, நீங்கள் நிலைமையை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. குறைந்த இரத்த அழுத்தத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்டால், அதிர்ச்சி, பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறைந்த இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளைச் சமாளிக்க நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு தண்ணீர்

உப்பு தண்ணீர்

உங்கள் உடல் சரியாக செயல்பட, திரவ அளவை சமநிலைப்படுத்தவும், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கவும் உப்பு மிக அவசியம். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உண்மையில் தீங்கு விளைவிக்கும். ஆனால் நீங்கள் குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் அதிக உப்பை உட்கொள்ள வேண்டும். மயக்கம் அல்லது குமட்டல் போன்றவை உணர ஆரம்பிக்கும் போது, உப்பு நீர் குடிக்கவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அதை சரியாக கலந்து பருகலாம். உங்கள் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்போது அதை உறுதிப்படுத்த இந்த கலவை உதவும்.

MOST READமலச்சிக்கல் பிரச்சினையால் அவதிபடுகிறீர்களா?..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...!

ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது கற்பூரத்தைக் கொண்டுள்ளது. இது குறைந்த இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெய் சுவாச அமைப்பைத் தூண்டுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. ரோஸ்மேரி எண்ணெயை உங்கள் உள்ளங்கையில் தேய்த்து உங்கள் இரத்த அழுத்த அளவை நிர்வகிக்க அதை உள்ளிழுக்கலாம்.

தேநீர் அல்லது காபி

தேநீர் அல்லது காபி

தேநீர் அல்லது காபி போன்ற காஃபினேட் பானங்களை குடிப்பதால் உங்கள் இதய துடிப்பு அதிகரிக்கும். மேலும் இது உங்கள் இரத்த அழுத்த அளவை உயர்த்தலாம். குறைந்த இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளுக்கு உதவ நீங்கள் இனிப்பு கலக்காத பானங்களை அருந்தலாம். இருப்பினும், காபி உங்கள் இரத்த அழுத்தத்தை குறுகிய காலத்திற்கு உறுதிப்படுத்த உதவுகிறது.

MOST READ:ஆண்களே! உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க...!

உலர் திராட்சை

உலர் திராட்சை

உலர் திராட்சை ஒரு பண்டைய வீட்டு வைத்தியம். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உங்கள் இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்க உலர் திராட்சை உதவும். குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், சிறிது உலர் திராட்சையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அதை பாலுடன் கொதிக்க வைத்து காலையில் சாப்பிடுங்கள்.

துளசி இலை

துளசி இலை

நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளை மென்று சாப்பிடுவது குறைந்த இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளை சமாளிக்க உதவும். பச்சை இலைகளில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகளவில் உள்ளன. இது உங்கள் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும், துளசி இலை கொழுப்பின் அளவை நிர்வகிக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Home Remedies for Low Blood Pressure

Here home remedies to deal with the problem of low blood pressure.
Story first published: Wednesday, January 22, 2020, 10:32 [IST]
Desktop Bottom Promotion