Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
அல்சர் நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட்டா உயிருக்கே ஆபத்தாயிடுமாம்.. உஷார்..
அல்சர் இருந்தால் எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். ஏனெனில் சில உணவுகள் அல்சரை தீவிரமாக்கி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
வயிற்றுப் புண்கள் தான் அல்சர் என்று அழைக்கப்படுகின்றன. இந்த புண்கள் வயிற்றின் சுவர் அல்லது சிறு குடலின் மேல் பகுதியில் உருவாகின்றன. ஆய்வின் படி, இந்தியாவில் சுமார் 9 மில்லியன் மக்கள் அல்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அல்சரானது உணவைச் செரிக்கும் அமிலம் வயிற்றுச் சுவர்களை சேதப்படுத்த ஆரம்பிக்கும் போது உருவாகிறது.

ஒருவருக்கு அல்சர் இருந்தால், அவர் கடுமையான வயிற்று வலி, வயிற்று எரிச்சல், இரத்தம் கலந்த வாந்தி போன்ற அறிகுறிகளை சந்திப்பார்கள். அல்சருக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அந்த புண் தீவிரமாகி வயிற்றில் துளையிட்டு நிலைமையை மோசமாக்கிவிடும். நீண்ட நேரமாக வயிற்றை காலியாக வைத்திருந்தால், வயிற்றில் வலி ஏற்படும். ஆனால் இந்த அல்சரால் ஏற்படும் வயிற்று வலியானது இரவு மற்றும் காலை வேளைகளில் தொந்தரவு செய்யும். இப்போது அல்சர் இருந்தால் எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். ஏனெனில் சில உணவுகள் அல்சரை தீவிரமாக்கி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

காபி
காபியில் உள்ள காப்ஃபைன் வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரிக்கக்கூடியது. ஆகவே அல்சர் நோயாளிகள் காபி குடிக்கக்கூடாது. வயிற்றில் அமிலத்தின் அளவு சீராக இருக்க காபியை மட்டுமின்றி, காப்ஃபைன் நிறைந்த குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகள்
காரமான உணவுகளை அல்சர் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது நிலைமையை தீவிரமாக்கும். அதோடு வயிற்று எரிச்சலையும் அதிகரிக்கும். ஆகவே அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சை எடுக்கும் போது மிளகாய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

பேக் செய்யப்பட்ட உணவுகள்
பேக் செய்யப்பட்ட உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புக்களின் அளவு அதிகமாக இருப்பதால், அது வயிற்றில் செரிமான அமிலத்தின் அளவை அதிகரித்து, வயிற்று எரிச்சலை மேலும் அதிகரிக்கும். ஆகவே இதுப்போன்ற உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

வெள்ளை பிரட்
அல்சர் நோயாளிகள் பிரட் சாப்பிட்டால், அது நிலைமையை மோசமாக்கும். எனவே பிரட்டை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து வந்தால், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் சுகாதார நிபுணர்களின் படி, பிரட் ஒரு ஆரோக்கியமற்ற உணவு. எனவே ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், இதை முற்றிலும் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

மாட்டிறைச்சி
அல்சர் இருப்பவர்கள், மாட்டிறைச்சியை சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாட்டிறைச்சியில் கொழுப்பு மற்றும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இத செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். அதே வேளையில் அதை செரிமானம் செய்வதற்கு அமிலமும் அதிகம் வெளியிடப்படும். இதனால் வயிற்று சுவர் மோசமாக பாதிக்கப்படும். ஆகவே மாட்டிறைச்சியை மட்டுமின்றி, எவ்வித இறைச்சியையும் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

ஆல்கஹால்
பொதுவாக ஆல்கஹால் குடித்தாலே அல்சர் வரலாம். ஆனால் ஏற்கனவே அல்சர் இருப்பவர்கள் ஆல்கஹால் குடிப்பது, விஷம் குடிப்பதற்கு சமம். ஏனெனில் ஆல்கஹால் செரிமான மண்டலத்தை பாதிக்கும் என்பதால், அதிகம் ஆல்கஹால் குடிப்பது வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே அல்சர் இருந்தால் ஆல்கஹாலை அறவே தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள்
பால் பொருட்களில் கொழுப்பு அதிகம் உள்ளது. அல்சர் இருந்தால் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பால் பொருட்கள் வயிற்றில் உள்ள புண்ணின் நிலைமையை மோசமாக்கி, தொந்தரவு செய்யலாம். எனவே அல்சர் குணமாகும் வரை பால் பொருட்களைத் தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications
