Just In
- 28 min ago
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- 1 hr ago
ஆண்களின் நிம்மதியை கெடுக்கும் அவர்களிடம் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வுகள் என்ன தெரியுமா?
- 1 hr ago
இந்த 3 ஃபேஸ் மாஸ்க்குகளை நீங்க யூஸ் பண்ணா... உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்குமாம் தெரியுமா?
- 3 hrs ago
உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!
Don't Miss
- News
இதெல்லாம் பூலோகத்தில் உண்டா? ரெடியாகாத வேட்பாளர்.. எடப்பாடி திணறுகிறாராமே? இவர் இப்படி சொல்லுறாரே?
- Movies
என் கனவுக் கண்ணன்.. அரவிந்த் சாமிக்கு ஹார்ட்டீன் விட்ட குஷ்பு.. டிரெண்டாகும் க்யூட் புகைப்படங்கள்!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல.. ரொம்ப கம்மி!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நெய்யை இந்த 5 உணவுகளுடன் சாப்பிட்டால் மாரடைப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வராதாம்..!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் நெய். இந்த நெய்யை தினந்தோறும் சாப்பிடும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. இத்தகைய நெய்யை தோசை, ரொட்டி, கிச்சடி, பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். நெய்யானது சமையலில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, சில உடல்நல பிரச்சனைகளை சரிசெய்யவும் பயன்படுகிறது.
நெய் பல நன்மைகளை உள்ளடக்கியது. நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புக்களால் இதயத்திற்கு நல்லது. ஆனால் இந்த நெய்யை ஒருசில பொருட்களுடன் சேர்த்து எடுக்கும் போது, அதனால் இருமடங்கு நன்மைகள் கிடைக்கும்.

மஞ்சள்
நெய்யைப் போலவே மஞ்சளும் ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் பயன்படுத்தப்படும் பொருளாகும். மஞ்சளில் உள்ள குர்குமின், ஒரு இயற்கையான பைட்டோ கெமிக்கல். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. குர்குமின் மூட்டு வலிக்கு எதிரான விளைவுகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட மஞ்சளை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது, உடல் வலி குறைகிறது மற்றும் உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது.

துளசி
துளசி இலைகளில் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது தவிர கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியமும் உள்ளது. ஆய்வுகளின் படி, துளசி இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் லிப்பிட்டுகளின் அளவை இயல்பாக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்சியோலிடிக் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இத்தகைய துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது நெய் சேர்த்து கலந்து, அந்நீரைக் குடிப்பது இன்னமும் நல்லது.

பட்டை
பட்டை பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை போக்க வல்ல சக்தி வாய்ந்த மசாலா பொருளாகும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியல் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது. ஆய்வுகளிலும் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டையை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நெய் சேர்த்து கலந்து இறக்கி, குளிர வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் இருமடங்கு பலன் கிடைக்கும்.

பூண்டு
பூண்டு மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். இந்த பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் நல்ல சுவையாக இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தும், இதய ஆரோக்கியம் மேம்படும், சருமம் சுத்தமாகும், நல்ல லிப்பிட்டுகளின் அளவு மேம்படும் மற்றும் இரத்த அழுத்தம் குறையும்.

கற்பூரம்
கற்பூர மரத்தின் பட்டையில் இருந்து கிடைப்பது தான் கற்பூரம். இது செரிமானத்திற்கு நல்லது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆர்த்ரிடிஸ் நோயாளிகளுக்கு உதவுகிறது. அதுவும் கற்பூர எண்ணெய் வலி நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய கற்பூரத்தை 2 துண்டு எடுத்து நெய்யுடன் சேர்த்து 5 நிமிடம் சூடேற்றி, அதை குளிர வைத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வலியுள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் வலியில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்.