For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வெளிப்படும் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!

தண்ணீர் போதுமான அளவு உடலில் இல்லாத போது, சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை நீர்த்துப் போக செய்வது கடினமாகி, சிறுநீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறி, சிறுநீரக கற்களை உருவாக்க வழிவகுக்கிறது.

|

நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்றாகும். சிறுநீரகங்களானது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் திரவங்களை சிறுநீரின் வழியே வெளியேற்ற உதவுகின்றன. இப்படிப்பட்ட முக்கியமான பணியைச் செய்யும் சிறுநீரங்களின் உட்புறத்தில் கரைந்த தாதுக்கள் குவிவதன் விளைவாக ஏற்படுவது தான் சிறுநீரக கற்கள். இந்த சிறுநீரக கற்கள் உருவானால் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். பொதுவாக சிறுநீரக கற்களானது ஒரு நாளைக்கு 2 லிட்டருக்கும் குறைவான அளவில் நீரைக் குடிப்போருக்கு தான் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

Early Symptoms Of Kidney Stones You Should Know In Tamil

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு சிறுநீரகங்களுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. தண்ணீர் போதுமான அளவு உடலில் இல்லாத போது, சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை நீர்த்துப் போக செய்வது கடினமாகி, சிறுநீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறி, சிறுநீரக கற்களை உருவாக்க வழிவகுக்கிறது. சரி ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால் அதை எப்படி அறிவது, அதன் அறிகுறிகள் என்னவென்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

இது சிறுநீரக கல் அறிகுறிகளில் மிகவும் பொதுவான அறிகுறியாகும். நீண்ட நாட்களாக சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலை அனுபவித்தால், உடனே பரிசோதனை செய்வது நல்லது. சில நேரங்களில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றும் சிறுநீரக கற்களின் ஆரம்ப அறிகுறியாகும். சிறுநீர் கழிக்கும் போது வலியை அனுபவித்தால், சிறுநீர்ப்பையில் கற்கள் சிக்கியுள்ளது என்று அர்த்தம். இதுப்போன்ற அறிகுறிகளை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

சிறுநீரில் இரத்தம்

சிறுநீரில் இரத்தம்

கழிக்கும் சிறுநீரில் இரத்தம் கலந்திருந்தால், சிறுநீரக கற்கள் உள்ளது மற்றும் இந்த அறிகுறியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதற்கு உடனடி சிகிச்சை பெற மருத்துவரை அணுக வேண்டும் என்று அர்த்தம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருந்தாலும், சிறுநீரக கற்களின் அறிகுறியும் கூட. இம்மாதிரியான அறிகுறி சிறுநீரக கற்கள் கீழ் சிறுநீர் பாதைக்கு நகர்ந்துள்ளதைக் குறிக்கிறது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இந்த கவலையைத் தவிர்க்க வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

தெளிவற்ற அல்லது துர்நாற்றமிக்க சிறுநீர்

தெளிவற்ற அல்லது துர்நாற்றமிக்க சிறுநீர்

சிறுநீர் பிங்க், சிவப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் இருந்தால், அது சிறுநீரக கற்களின் அறிகுறியாகும். சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்காது. ஆனால் துர்நாற்றத்துடன் அல்லது தெளிவற்ற நிலையில் இருக்கும். இது சிறுநீரக கற்களின் தெளிவான அறிகுறியாகும்.

சிறுநீர் பாதை அடைப்பு

சிறுநீர் பாதை அடைப்பு

முன்பே கூறியதைப் போன்று, சிறுநீரக கற்களின் அறிகுறிகளில் ஒன்று அடிக்கடி சிறுநீர் கழிப்பது. இது சிறுநீரக கற்கள் கீழ் சிறுநீர் பாதையில் சிக்கியிருப்பதற்கான அறிகுறியாகும். இந்நிலையில் கற்கள் சிறுநீர் பாதையை அடைத்து அழுத்தத்தைக் குறைக்கும்.

காய்ச்சல்

காய்ச்சல்

காய்ச்சலும், குளிரும் சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரக பாதையிலோ தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டியது முக்கியம்.

வாந்தி

வாந்தி

சிறுநீரகங்கள் இரைப்பைக் குழாயுடன் நரம்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆகவே இது வயிற்று உப்புசம், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். அதிலும் வாந்தி கடுமையான வலியின் எதிர்வினையின் காரணமாகவும் ஏற்படலாம்.

முதுகு வலி

முதுகு வலி

முதுகு வலி அல்லது வயிற்று வலி சிறுநீரக கற்களின் அறிகுறியாகும். அதாவது சிறுநீரகத்தில் கற்கள் பெரிதாகவோ அல்லது அதிக எண்ணிக்கையிலோ இருந்தால், இம்மாதிரியான வலியை அனுபவிக்கக்கூடும். ஆரம்பத்தில் வலி தாங்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அது சில நாட்கள் கழித்து தாங்க முடியாத அளவில் இருக்கும். வலியில் இருந்து விடுபட உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Early Symptoms Of Kidney Stones You Should Know In Tamil

Here are some early symptoms of kidney stones you should know in tamil. Read on...
Story first published: Saturday, May 7, 2022, 12:38 [IST]
Desktop Bottom Promotion