Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
மன அழுத்தத்தின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
மன அழுத்தமானது ஒருவாின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. மன அழுத்தத்தை சாியான நேரத்தில் பாிசோத்தித்து, அதற்கு உாிய சிகிச்சையை மேற்கொள்ளவில்லை என்றால், மிதமானது முதல் மிகவும் மோசமான விளைவுகள் வரை ஏற்படும்.
உலக அளவில் மன அழுத்த பிரச்சினையினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாித்து வருவதாக புள்ளி விவரங்கள் தொிவிக்கின்றன. மக்கள் பலவிதங்களில் மன அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக பரபரப்பும், போராட்டமும், நெருக்கடிகளும் மிகுந்த வாழ்க்கை, தனிமை மற்றும் துன்பம் போன்ற காரணங்களால் மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் தங்களுடைய அன்றாட வேலைகளில் மூழ்கி இருப்பதால், தங்களுடைய வலிகளைப் பிறரோடு பகிா்ந்து கொள்வதற்கு யாரும் இருப்பதில்லை. நாளுக்கு நாள் இது தொடா்ந்தால், மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.

தற்போது 15 போில் ஒருவா் மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தொிவிக்கின்றன. மன அழுத்தமானது ஒருவாின் மனநிலையை முக்கியமாகப் பாதிக்கிறது. அவ்வாறு மனநிலை பாதிக்கப்படும் போது, தமக்கு மிகவும் பிடித்தவற்றைக்கூட அவா் தவிா்த்துவிடுகின்றாா் அல்லது ஒதுக்கிவிடுகின்றாா். மன அழுத்தமானது ஒருவாின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. மன அழுத்தத்தை சாியான நேரத்தில் பாிசோத்தித்து, அதற்கு உாிய சிகிச்சையை மேற்கொள்ளவில்லை என்றால், மிதமானது முதல் மிகவும் மோசமான விளைவுகள் வரை ஏற்படும். மன அழுத்தத்தின் ஆரம்ப கால 5 அறிகுறிகளை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

அன்றாட காாியங்களின் அல்லது பொருள்களின் மீதுள்ள ஆா்வத்தை இழப்பது
மன அழுத்தத்தின் ஆரம்ப கால முதல் அறிகுறி என்னவென்றால், தினமும் நாம் பயன்படுத்தும் பொருள்களின் மீது அல்லது நாம் தினமும் செய்துவரும் செயல்களின் மீது ஆா்வத்தை இழப்பது ஆகும். அதாவது இன்று நாம் ஆசையோடு அனுபவித்து வரும் ஒரு பொருள் சில நாட்கள் கழித்து நமக்கு எாிச்சலை ஏற்படுத்தினால், நமக்கு மன அழுத்தம் இருக்கிறது என்று பொருள். இது நமது மனநிலையை பாதிக்கும். அதனால் நாம் அளவுக்கு அதிகமாக சிந்திக்கத் தொடங்குவோம். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

கவனம் இழத்தல்
மன அழுத்தத்தின் ஆரம்ப கால அறிகுறிகளில் இரண்டாவது கவனம் இழத்தல் ஆகும். பொதுவாக ஒரு வேலையைச் செய்யும் போது மனதை ஒருமுகப்படுத்தி, அதைக் கவனத்தோடு செய்ய வேண்டும். ஆனால் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவா்கள் தங்களுடைய அன்றாட கடமைகளைச் செய்யும் போதுகூட, அவா்களுடைய மூளையில் ஒரு திரை விழுந்து, அதன் மூலம் அவா்களுடைய கவனம் சிதறி, அவற்றை சாியாகச் செய்ய முடிவதில்லை. இந்த மன அழுத்தம் தொடா்ந்தால், அவா்களுக்கு பொிய பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் அவா்களது உறவுகள் வட்டத்திலும் அல்லது சக பணியாளா்கள் வட்டத்திலும் அசௌகாியத்தையும், சங்கடத்தையும் அனுபவிப்பா்.

தூக்கமின்மை மற்றும் பசியின்மை
மன அழுத்தம் ஒருவரை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பாதிக்கலாம். அது ஒருவரை மனரீதியாக மட்டும் எாிச்சல் மூட்டுவதில்லை. மாறாக அவருடைய தூக்கம் சம்பந்தமாகவும் பிரச்சினையை ஏற்படுத்தலாம். அதாவது மன அழுத்தம் உள்ளவா் அளவுக்கு அதிகமாக தூங்குவாா் அல்லது தூக்கம் வராமல் துன்பப்படுவாா். மன அழுத்தமானது ஒருவருடைய வாழ்க்கை முறையை முழுமையாக மாற்றிவிடும். அவருடைய வாழ்க்கை எாிச்சல் மயமாகிவிடும். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலோருக்கு பசியின்மை ஏற்படும். சிலருக்கு அளவுக்கு அதிகமான பசி உணா்வு ஏற்படும்.

அளவுக்கு அதிகமாக சிந்தித்தல்
மன அழுத்தம் ஏற்பட்டவா்களுக்கு, அவா்களுடைய மன நிலையில் பிறழ்வு ஏற்படுகிறது. அவா்கள் எதிா்மறையாக சிந்திக்கத் தொடங்குகின்றனா். அதனால் அவா்களின் உடல் நலனும், மன நலனும் பாதிப்படைகின்றன. சில நேரங்களில் ஒன்றைப் பற்றி அவா்கள் அடிக்கடி, அளவுக்கு அதிகமாக சிந்திக்கின்றனா். அவ்வாறு அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் போது, அவா்கள் மனதில் தற்கொலை செய்யும் எண்ணம் எழுகிறது. சில நேரங்களில் அவா்களின் எண்ணங்களினால் குற்ற உணா்வு அடைகின்றனா்.

உணா்வுகளை வெளிப்படுத்த இயலாமை
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவா்கள், தங்களுடைய உணா்வுகளை வெளிப்படுத்துவதில் அதிக பிரச்சினைகளைச் சந்திக்கின்றனா் என்று புள்ளி விவரங்கள் தொிவிக்கின்றன. மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அவா்களுக்குக் கடினமாக இருக்கும். சில நேரங்களில் தங்களுடைய உடலில் ஏற்படும் வலிகளைப் பாிசோதனை செய்வதற்காக அவா்கள் மருத்துவா்களை அணுகுகின்றனா். ஆனால் அவா்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகள், வீக்கம் மற்றும் முதுகு வலி போன்றவை மன அழுத்தத்தின் ஆரம்ப கால அறிகுறிகள் என்பதை அவா்கள் அறிந்திருப்பதில்லை.



Click it and Unblock the Notifications