For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் பொருட்கள் நீங்கள் எதிர்பார்க்காத இந்த பிரச்சனையை உங்களுக்கு ஏற்படுத்தும் தெரியுமா?

|

பால் பொருட்கள் மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்று மக்களுக்கு சொல்ல தேவையே இல்லை. ஏனெனில் இவற்றின் நன்மைகள் பற்றி அனைவரும் அறிவர். உங்கள் உணவில் பால் சேர்ப்பது ஆரோக்கியமான தேர்வு என்று அறிவியல் மற்றும் ஆயுர்வேதம் இரண்டிலும் கூறப்படுகிறது. கால்சியத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக பால் இருப்பதால், தயிர் மற்றும் பால் போன்ற பால் பொருட்கள் உங்கள் எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.

இருப்பினும், பால் பொருட்கள் சர்ச்சைக்கு புதியதல்ல. இதனால் பலர் இந்த முக்கியமான உணவுப் பொருளை தங்கள் உணவில் இருந்து முற்றிலும் விலக்கிக் கொள்கிறார்கள். மிகவும் பொதுவான ஒன்று, பால் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. இந்த கட்டுரையில், இந்த பொதுவான கருத்தின் பின்னணியில் உள்ள உண்மையை பற்றி பேசுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன வீக்கத்தை ஏற்படுத்துகிறது?

என்ன வீக்கத்தை ஏற்படுத்துகிறது?

பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நோய்க்கிருமிகளுக்கு உடலின் வெள்ளை இரத்த அணுக்களின் இயல்பான பதில்தான் அழற்சி. உங்கள் உடல் வைரஸ் மற்றும் பாக்டீரியா ஊடுருவலைக் கண்டறியும் போதெல்லாம், அது ஹிஸ்டமைன், புரோஸ்டாக்லாண்டின்கள் மற்றும் பிராடிகினின் போன்ற சிறப்பு இரசாயனத்தை வெளியிடுகிறது. இந்த இரசாயனங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நோய்க்கிருமிகளைத் தடுக்க செய்தியை தெரிவிக்கின்றன. மேலும் இது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.

இதை நீங்க தொடர்ந்து செய்து வந்தால் உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...!

அழற்சி

அழற்சி

அழற்சி கடுமையான அல்லது நாள்பட்டதாக இருக்கலாம். கடுமையான வீக்கம் என்பது வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் அல்லது காயத்தின் படையெடுப்பிற்கு பின் தரும் உடலின் முதல் பதிலாகும். சிகிச்சையளிக்கப்படாத காயம் அல்லது அடிப்படை சுகாதார நிலை காரணமாக நாள்பட்ட அழற்சி ஏற்படலாம்.

பால் மற்றும் அழற்சியின் தொடர்பு

பால் மற்றும் அழற்சியின் தொடர்பு

பால் பொருட்களில் புரதம், கால்சியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை தவிர, அவற்றில் அதிகளவு நிறைவுற்ற கொழுப்புகளும் உள்ளன. இது உடலில் ஏற்படும் அழற்சியுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. பால் பொருட்களில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு வீக்கத்தை மோசமாக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது என்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை.

சீக்கிரம் கர்ப்பமாக விரும்பும் தம்பதிகள் மாதத்திற்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும் தெரியுமா?

அறிவியல் என்ன சொல்கிறது?

அறிவியல் என்ன சொல்கிறது?

பால் மற்றும் வீக்கத்தைப் பொருத்தவரை முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. சில அவதானிப்பு ஆய்வுகள் பால் மற்றும் பால் பொருட்கள் முகப்பரு மற்றும் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றன. மற்றவர்களைப் பொறுத்தவரை பால் உண்மையில் வீக்கத்தை ஊக்குவிக்கிறதா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக பல ஆய்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வரை இந்த விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை. கோட்பாட்டை நிறுவ இந்த திசையில் இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவை.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

இருப்பினும், பால் உட்கொண்ட பிறகு நிறைய பேர் வீக்கம், தசைப்பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள். ஆனால் இது அரிதான சந்தர்ப்பங்களில் நிகழ்கிறது. ஆனால், உடலுக்கு தேவையான கால்சியத்தை வழங்குவதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. சில சுகாதார பிரச்சனைகளை கொண்ட நபர்கள் பால் பொருட்களை உட்கொள்வதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Does dairy products cause inflammation

Here are does dairy products cause inflammation.
Story first published: Monday, August 17, 2020, 17:00 [IST]