For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க குப்புற படுக்கும் பழக்கம் கொண்டவரா? அப்ப இத மிஸ் பண்ணாம படிங்க...

சிலரது தூங்கும் முறை சரியாக இருக்காது. அதுவும் குப்புற படுத்து பலர் தூங்க விரும்புவார்கள். இப்படி குப்புற படுப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் தெரியுமா?

|

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடிந்தால், அவர் மன அழுத்தம் போன்ற பிரச்சனையால் கஷ்டப்பட வேண்டியிருக்காது. மேலும் நல்ல ஆழ்ந்த தூக்கமானது, ஒருவருக்கு புத்துணர்ச்சியை அளித்து, நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உதவும். ஆனால் அனைவருக்குமே இம்மாதிரியான தூக்கம் கிடைப்பதில்லை. சிலரது தூங்கும் முறை சரியாக இருக்காது. அதுவும் குப்புற படுத்து பலர் தூங்க விரும்புவார்கள். இப்படி குப்புற படுப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் தெரியுமா?

Disadvantages Of Sleeping On Stomach In Tamil

குறிப்பாக பெண்கள் குப்புற தூங்கினால் பல கடுமையான உடல்நல பிரச்சனைகளால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இப்போது ஒருவர் குப்புற படுத்தால் எந்தமாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெஞ்சு வலி

நெஞ்சு வலி

பல பெண்களுக்கு குப்புற படுக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இப்படி தூங்குவது மார்பு வலியை ஏற்படுத்தும். குப்புற படுக்கும் போது, மார்பகத்தின் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் போது, அது வலியை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு மார்பகத்தில் வலி ஏற்பட்டால், முதலில் உடனே மருத்துவரை அணுகுங்கள். அதோடு இனிமேல் குப்புற படுக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

குப்புற படுத்து தூங்குவது முகத்தின் அழகை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, குப்புற படுத்து தூங்குவதால், முகச்சருமம் போதுமான ஆக்ஸிஜனை பெற முடியாமல் போய், சருமமானது சுருங்க தொடங்குகிறது. அதே வேளையில், படுக்கையில் உள்ள அழுக்குகள் முகத்தில் பட்டு, அதன் விளைவாக பருக்கள் அல்லது சரும சுருக்க பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

கர்ப்ப கால பிரச்சனை

கர்ப்ப கால பிரச்சனை

பெண்கள் கர்ப்ப காலத்தில் குப்புற படுத்து தூங்கக்கூடாது. அப்படி தூங்கினால், அது தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும். இதுமட்டுமின்றி, இக்காலத்தில் பெண்களால் சரியாக தூங்க முடியாது. ஆனால் கர்ப்பிணிகள் இம்மாதிரியான சூழ்நிலையில் வலது பக்கம் திரும்பி தூங்குவதை விட, இடது பக்கமாக திரும்பி தூங்குவதே நல்லது.

வயிற்று பிரச்சனைகள்

வயிற்று பிரச்சனைகள்

பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குப்புற படுத்து தூங்கக்கூடாது. இல்லாவிட்டால் வயிறு தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் செரிமான மண்டலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக அஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே உங்களின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென்றால், குப்புற படுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

முதுகு மற்றும் தண்டுவடத்திற்கு நல்லதல்ல

முதுகு மற்றும் தண்டுவடத்திற்கு நல்லதல்ல

நிபுணர்களின் கூற்றுப்படி, குப்புறப்படுத்து தூங்குவது நாள்பட்ட முதுகு வலியுடன் தொடர்புடையது. இந்நிலையில் படுக்கும் போது முதுகு மற்றும் தண்டுவடத்தில் இரவு முழுவதும் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனால் முதுகு வலியை அனுபவிக்கக்கூடும். ஆகவே உங்களுக்கு முதுகு வலி இருப்பின், குப்புற படுத்து தூங்குவதை தவிர்த்திடுங்கள்.

கழுத்து பிரச்சனைகளை உண்டாக்கும்

கழுத்து பிரச்சனைகளை உண்டாக்கும்

குப்புற படுத்து தூங்கும் போது, உங்கள் கழுத்தை ஒருபக்கமாக திரும்பாவிட்டால், சரியாக சுவாசிக்க முடியாது. இம்மாதிரியான நிலையில் தூங்கினால், அது ஹெர்னியேட்டட் டிஸ்க்குகள் போன்ற நாள்பட்ட கழுத்து பிரச்சனைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஏனெனில் இந்நிலையில் உங்கள் தலை மற்றும் முதுகெலும்பு சீரமைக்கப்படவில்லை மற்றும் உங்கள் கழுத்து முறுக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் விளைவாக கழுத்து வலி பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Disadvantages Of Sleeping On Stomach In Tamil

Here are some disadvantages of sleeping on stomach. Read on to know more...
Story first published: Wednesday, January 19, 2022, 13:06 [IST]
Desktop Bottom Promotion