For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகத்தை வெச்சே உங்களுக்கு கொரோனா வந்திருக்கா-ன்னு சொல்ல முடியும்.. எப்படி-ன்னு தெரியுமா?

கோவிட் நகங்கள் தீங்கு விளைவிக்காதவாறு காணப்படலாம். ஆனால் அது உங்கள் உடலில் கொரோனா வைரஸ் வந்து போயிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

|

தற்போதைய காலக்கட்டத்தில், கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள், மற்றும் அது மனித உடலை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். இருப்பினும், கோவிட்-19 பற்றி முழுமையாக யாருக்குமே தெரியாது. அதில் வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் அசாதாரண அறிகுறிகளும் அடங்கும். இந்த அறிகுறிகளுள் சில கொரோனாவில் இருந்து மீண்ட பின்னரும் நீடித்திருக்கும் மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாமலும் போகும். கோவிட்-19 இலிருந்து மீண்ட ஒருவருக்கு அறிகுறிகள் அவர்களின் விரல் நகங்களில் கூட வெளிப்படலாம் என்பது தெரியுமா?

இதயத்தில் பிரச்சினை... 1.5 வயது சிறுவன் தேவனேஷின் ஆபரேசனுக்கு உதவுங்கள் ப்ளீஸ்

Covid Nails: Your Fingernails Can Tell If You Have Had Coronavirus

இது ஒன்றும் முதன்மையானது அல்ல. கோவிட் கால்விரல், கோவிட் நாக்கு மற்றும் தலைமுடி உதிர்வு போன்ற பிற அறிகுறிகளையும் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் அனுபவிக்கக்கூடும். கோவிட் நகங்கள் தீங்கு விளைவிக்காதவாறு காணப்படலாம். ஆனால் அது உங்கள் உடலில் கொரோனா வைரஸ் வந்து போயிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். இப்போது இது குறித்து விரிவாக காண்போம்.

MOST READ: கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களைத் தாக்கும் டெல்டா வகை கொரோனா - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட் நகங்கள் என்றால் என்ன?

கோவிட் நகங்கள் என்றால் என்ன?

கோவிட்-19 இன் பொதுவான அறிகுறிகளுள் காய்ச்சல், இருமல், சுவை மற்றும் வாசனை இழப்பு ஆகியவை அடங்கும். சில நோயாளிகள் தங்கள் சருமத்தில் அறிகுறிகளை சந்திப்பார்கள். முன்பே குறிப்பிட்டுள்ள படி, விரல் நகங்களில் ஏற்படும் மாற்றமும் கொரோனாவின் தாக்கத்தால் ஏற்படுபவை தான். இந்த மாதிரியான பிரச்சனையை சிறிய எண்ணிக்கையான நோயாளிகள் பல வாரங்களுக்குப் பிறகு விரல் நகங்களில் நிற மாற்றம் அல்லது மோசமான தோற்றத்திலான நகங்களை அனுபவித்தனர். கோவிட் நோய்த்தொற்று மூலம் ஏற்படுவதால், இது கோவிட் நகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

MOST READ: இறப்பை ஏற்படுத்தும் அளவு உருமாற்றம் அடைந்துள்ள காமா வைரஸ் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

பியூவின் கோடுகள்

பியூவின் கோடுகள்

கொரோனா தொற்றின் பக்கவிளைவால் ஏற்படும் கோவிட் நகங்களை மருத்துவ ரீதியாக பியூவின் கோடுகள் என்று அழைப்பர். பியூவின் கோடுகளுக்கும் கோவிட்-19 க்கும் இடையிலான தொடர்பு இன்னும் தெளிவாக இல்லை என்றாலும், கடுமையான மன அழுத்தம் அல்லது நோய் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆகவே இது கோவிட் நகங்களுக்கு வழிவகுக்கிறது.

அவசர ஆபரேஷன்.. இதய பிரச்சனையால் போராடும் 2 வயது சிறுவன் தேவனேஷி.. சீக்கிரம் உதவுங்களேன்!

கோவிட் நகங்களின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

கோவிட் நகங்களின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

ஆய்வுகளின் படி, கோவிட் நகங்கள் கொரோனா வைரஸுடன் சண்டையிட்ட சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு தோன்றக்கூடும். இது கால்விரல் நகங்களிலும் தோன்றலாம். பொதுவாக நகத்தின் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் பிறை போன்று இருக்கும். சிலருக்கு விரல் நகங்களில் வித்தியாசமான நிறத்திலான கோடு தெரியலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தென்படலாம்.

கொரோனாவில் இருந்து மீண்ட பல நோயாளிகள் இந்த விசித்திரமான பக்கவிளைவைப் பற்றி புகாரளித்திருந்தாலும், இது ஒவ்வொரு கோவிட் நோயாளியையும் பாதிக்காது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். சில நோயாளிகளுக்கு, இம்மாதிரியான அறிகுறி கண்களுக்கு புலப்படாதவாறு கூட இருக்கலாம்.

MOST READ: மறந்தும் பாலுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...

இந்த அறிகுறி எதனால் ஏற்படுகிறது?

இந்த அறிகுறி எதனால் ஏற்படுகிறது?

அறிக்கைகளின் படி, உடலில் ஏற்படும் அழுத்தங்கள், தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு அல்லது ஹீமோதெரபி மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால் பியூவின் கோடுகள் ஏற்படக்கூடும். பியூவின் கோடுகள் முறையான நோய் அல்லது சில மருந்துகளால் அடிக்கடி ஏற்படுவதால், இதற்கான சிகிச்சையானது நோயிலிருந்து நீங்கள் மீள்வதைப் பொறுத்தது. இருந்தாலும், இந்த நிலைக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் தீர்வு காண்பது நல்லது.

MOST READ: வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கணுமா? அப்ப 'இத' காலையில வெறும் வயித்துல குடிங்க...

வேறு எந்த காரணங்களுக்கு நகங்களில் கோடுகள் வரும்?

வேறு எந்த காரணங்களுக்கு நகங்களில் கோடுகள் வரும்?

ஒருவரது நகங்களில் கோடுகள் தென்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அவை பின்வருமாறு:

* கடுமையான சிறுநீரக நோய்கள்

* தைராய்டு பிரச்சனைகள்

* மம்ப்ஸ் போன்ற வைரஸ் நோய்கள்

* சிபிலிஸ் போன்ற பாக்டீரியா நோய்கள்

* நிமோனியா

* ஜிங்க் குறைபாடு

MOST READ: மூன்றாம் அலையை ஏற்படுத்தப் போகும் 'டெல்டா பிளஸ்' வைரஸ்: அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

முடிவு

முடிவு

நகங்களில் ஏற்படும் இம்மாதிரியான மாற்றம் உடலானது நோயிலிருந்து மீண்டதற்கான ஒரே அறிகுறியாக இருப்பதால், இதுப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்தாலோ, இன்னும் சந்தேகம் இருந்தாலோ, உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Covid Nails: Your Fingernails Can Tell If You Have Had Coronavirus

At this point of the pandemic, we know about the common signs and symptoms of coronavirus. But there are some unusual symptoms of Covid-19 that might go unnoticed.
Desktop Bottom Promotion