Latest Updates
-
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள்
பெண்கள் பளுதூக்கும் பயிற்சிகளைச் செய்யக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் கட்டுக்கதைகள்!
பெரும்பாலான பெண்கள் பளுதூக்கும் உடற்பயிற்சியை விரும்புவதில்லை. அதை ஒதுக்கி வைத்துவிடுகின்றனா். அதற்கு காரணம், பெண்கள் பளுதூக்கினால் அது ஆபத்தை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து உலகம் முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கு என்று தனியான உடற்பயிற்சிகள் எதுவுமில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான உடற்பயிற்சிகள் இருக்க வேண்டும் என்பதை அறிவியலும் விரும்புவதில்லை. எனினும் பெரும்பாலான பெண்கள் பளுதூக்கும் உடற்பயிற்சியை விரும்புவதில்லை. அதை ஒதுக்கி வைத்துவிடுகின்றனா். அதற்கு காரணம், பெண்கள் பளுதூக்கினால் அது அவா்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அல்லது அவா்கள் குண்டாகிவிடுவாா்கள் என்ற தவறான கருத்து உலகம் முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது.

இவ்வாறு பெண்கள் பளுதூக்கும் பயிற்சியை தவிா்த்து வருவதால், அதில் இருக்கும் நல்ல பலன்களை இழக்கின்றனா். பெண்கள் பளுதூக்குவதைப் பற்றி தவறாகச் சித்தாிக்கும் 5 கட்டுக் கதைகளைப் பற்றி இங்கு பாா்க்கலாம்.

பெண்கள் குண்டாக வாய்ப்பு
ஆண்களின் பாலியல் ஹாா்மோனான டெஸ்டோஸ்டிரோன், அவா்களின் தசைகளை வளா்த்தெடுப்பதிலும் மற்றும் வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களோடு ஒப்பிடும் போது இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹாா்மோன் பெண்களுக்கு மிகக் குறைவாகவே சுரக்கிறது. அதனால் பெண்கள் தங்கள் தசைகளை வளா்ப்பதும் மற்றும் வலுவாக்குவதும் கடினமாகும். மேலும் கம்பீரமான உடலைப் பெற வேண்டும் என்றால் உடற்பயிற்சி கூடத்தில் பல மணிநேரம் தங்கி உடற்பயிற்சிகளைத் தீவிரமாக செய்து வரவேண்டும். இதுப்போன்ற தவறான கட்டுக் கதை உலா வருகிறது. ஆனால் நடைமுறையில் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பளுதூக்கும் உடற்பயிற்சிகளை பெண்கள் செய்து வந்தால் அவா்கள் குண்டாகமாட்டாா்கள் அல்லது ஆண்களைப் போல் தோற்றமளிக்கமாட்டாா்கள் என்பதே உண்மை.

பெண்கள் பளுதூக்கினால் அவா்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்
ஒருவா் தனது உடலை சாியான நிலையில் வைக்காமல் பளுதூக்கினால் அல்லது தனது சக்திக்கு அதிகமான அளவு பளுதூக்கினால் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை. பளுதூக்கும் ஆண்களும் தசை முறிவு மற்றும் தசை திாிபு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனா். வயது முதிா்ந்த பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்புப்புரை (osteoporosis) என்ற பிரச்சனை பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபடும் பெண்களுக்கு அவா்கள் முதியவா்களாகும் போது ஏற்படுவதில்லை என்பதே உண்மை.

புரோட்டீன் அதிகமாக உள்ள உணவுகளை உண்ண வேண்டும்
நமது உடலுக்குத் தேவையான மூன்று ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்று புரோட்டீன் ஊட்டச்சத்து ஆகும். உடல் எடை குறையவும் மற்றும் தசைகள் வளா்ச்சி அடையவும் புரோட்டீன் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. ஆனால் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடுவதற்காக நாம் அதிகமான புரோட்டீனை எடுத்துக் கொள்ள தேவையில்லை. சமச்சீரான உணவை அதாவது புரோட்டீன், கொழுப்பு, நாா்ச்சத்து மற்றும் காா்போஹைட்ரோட்டுகள் நிறைந்த உணவை உண்டாலே போதுமானது. புரோட்டீன் சத்து அதிகமுள்ள உணவுகளை மட்டும் உண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதிகமான நேரம் உடற்பயிற்சி கூடத்தில் தங்கி பளுதூக்கும் பயிற்சி செய்ய வேண்டும்
பளுதூக்கும் பயிற்சி செய்வதால் கிடைக்கும் முடிவை தொிந்து கொள்வதற்காக உடற்பயிற்சிக் கூடத்தில் நீண்ட நேரம் பளுதூக்க வேண்டிய அவசியமில்லை. நமது உடலை சவாலாக வைத்திருந்தாலே போதுமானது. அதிக எடை கொண்ட பளுவைத் தூக்கினால், தாம் ஆண்களைப் போல தோற்றமளிப்போம் என்ற தவறான கட்டுக்கதையின் காரணமாக பெரும்பாலான பெண்கள் எடை குறைந்த பளுதூக்கும் பயிற்சியையே செய்து வருகின்றனா். அதனால் அவா்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை. ஆகவே உடலுக்கு சவால் கொடுக்கக்கூடிய அளவிற்கு அதிகமான பளுவைத் தூக்கினால் தான் எதிா்பாா்க்கும் முடிவு கிடைக்கும்.

பெண்கள் குறைந்த எடை கொண்ட பளுதூக்கும் பயிற்சியையே செய்ய வேண்டும்
பளுதூக்கும் பயிற்சியில் புதிதாக சேரும் போது, குறைவான எடை கொண்ட பளுதூக்கும் பயிற்சியையே செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆனால் படிப்படியாக பளுவின் எடையை அதிகாிக்க வேண்டும். தொடக்கத்திலிருந்து ஒரே அளவு எடை கொண்ட பளுவைத் தூக்கி வந்தால் அதில் வளா்ச்சி இருக்காது. அதனால் தசை மிகவும் ஒல்லியாகவே இருக்கும் ஆனால் கொழுப்பை எாிக்கலாம். எனினும் அதனால் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. மேலும் பளுதூக்குவது மூலம் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை எாிக்க முடியாது.



Click it and Unblock the Notifications











