For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிட்டப் பகுதியில் உள்ள வால் எலும்பில் திடீரென வலி ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

பொதுவாக நமது பிட்டப் பகுதியில் வால் போன்ற எலும்பு காணப்படும். இதை வால் எலும்பு அல்லது கோக்ஸிக்ஸ் என்று அழைக்கின்றனர். இது நமது முதுகெலும்பின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.

|

பொதுவாக நமது பிட்டப் பகுதியில் வால் போன்ற எலும்பு காணப்படும். இதை வால் எலும்பு அல்லது கோக்ஸிக்ஸ் என்று அழைக்கின்றனர். இது நமது முதுகெலும்பின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இது தான் நமது இடுப்பிற்கு சப்போர்ட் ஆக இருக்கும். இந்த எலும்பு சிறியதாக இருந்தாலும் உட்கார்ந்து இருக்கும் போது தோரணையை வெளிப்படுத்துவது இது தான். வால் எலும்பு உண்மையில் பல தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றிற்கான இணைப்பு புள்ளியாகும்.

Causes And Symptoms Of Tailbone Pain (Coccydynia)

இந்த சிறிய வால் எலும்பில் வலி ஏற்பட்டால் தாங்கவே முடியாது. முதுகெலும்பின் அடிப்பகுதியில் கடுமையான வலி உண்டாகும். மருத்துவ ரீதியாக இதை கோசினிடியா என்றும் அழைக்கின்றனர். வலி லேசாகவும் தீவிரமாகவும் ஏற்படலாம். நடைப்பயிற்சி, உட்கார்ந்தல், பின்னால் சாய்தல் போன்ற அசாதாரண பணிகளைச் செய்யும் போது இந்த வலி ஏற்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த வலி தொடர்ந்து இல்லாமல் சில வாரங்களில் அல்லது மாதங்களில் குறைந்து விடுகிறது. நீண்ட காலத்திற்கு இந்த வலி நீடித்தால் உங்கள் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் அவதி ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

* பிட்டத்திற்கு மேலே வலி ஏற்படுதல்

* உட்கார்ந்து பின்னால் சாய்ந்திருக்கும் போது மிகுந்த சிரமம் ஏற்படுதல்

* குடல் இயக்கத்தின் போது கூர்மையான வலி ஏற்படுதல்

* உடலுறவின் போது வலி மற்றும் அசெளகரியம்

வால் எலும்பு வலிக்கான காரணங்கள்:

வால் எலும்பு வலிக்கான காரணங்கள்:

அதிர்ச்சி

வால் எலும்பில் வலி ஏற்பட அதிர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. விழும் போது வீழ்ச்சியால் ஏற்படும் அதிர்ச்சி அந்தப் பகுதியில் தீவிர வலியை ஏற்படுத்தக் கூடும். அங்கு ஏற்படும் அடி அங்குள்ள தசைநார்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. வால் எலும்பில் காயம் அல்லது எலும்பு முறிவு மற்றும் சில சந்தர்ப்பங்களில் சாக்ரோகோசைஜியஸ் அதாவது மூட்டு இடம்பெயர்வு போன்றவை கூட வலி(கோசிடைனியா) ஏற்படுத்தும். அதே போல் சைக்கிள் ஓட்டுவது, குதிரை சவாரி போன்றவை வலியை தீவிரப்படுத்தி நிலைமையை மேலும் மோசமாக்கும். நீண்ட தூர விமானப் பயணம், ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருத்தல் போன்றவைகளும் வலிக்கு பங்களிக்கின்றன. இடுப்புத் தசைகளில் ஏற்படும் வீக்கத்தை ஏற்படுத்தும் அதிர்ச்சிகள் கோசிடைனியாவை ஏற்படுத்துகின்றன.

சீரழிவு மூட்டு நோய்

சீரழிவு மூட்டு நோய்

வயதாகும் போது மீண்டும் மீண்டும் மூட்டுகளுக்கு கொடுக்கும் இயக்கங்கள் மூட்டுகளில் உள்ள சவ்வை கிழித்து விடுகிறது. இது சீரழிவு மூட்டு நோயாகி கீழ்வாதம் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.

யோனி வழி பிரசவம்

யோனி வழி பிரசவம்

பிரசவத்தின் போது வால் எலும்பில் தீவிர வலி ஏற்படும். இது குழந்தை வெளிவர ஏற்படும் அழுத்தத்தால் உண்டாகிறது. குழந்தையின் தலை திரும்பி வால் எலும்பை அதிக அழுத்தத்தில் அழுத்துகிறது. சுகப் பிரசவத்தின் போது தசை நார்களில் கிழிவு அல்லது வால் எலும்பில் காயத்தை உண்டாக்கும். வால் எலும்பில் எலும்பு முறிவு கூட உண்டாகலாம்.

கோக்ஸிஸ் மார்ஃபாலாஜி

கோக்ஸிஸ் மார்ஃபாலாஜி

கோக்ஸிஜியல் எலும்புகளின் எண்ணிக்கை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுபடக் கூடும். எலும்புகள் எண்ணிக்கையில் அதிகரிக்கும் போது சிக்கல்களை உண்டாக்குகின்றன. சிலருக்கு ஸ்பிகுலே அதாவது வால் எலும்பில் வளர்ச்சி உண்டாதல். இதனால் ஒரு நபர் உட்காரும் போது இந்த ஸ்பிகுலே வளர்ச்சி அசெளகரியத்தையும் வலியையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் இது கொழுப்பு திசு மற்றும் தோலை இழுத்து பிடிப்பதால் வலி ஏற்படுகிறது.

இடுப்பு தசை பிடிப்பு

இடுப்பு தசை பிடிப்பு

வால் எலும்பு என்பது லெவேட்டர் அனி எனப்படும் இடுப்பு தசைகளுக்கான இணைப்பு தளமாக இருப்பதால் தசை பிடிப்பு அல்லது அந்த பகுதியில் இழுப்பது போன்ற உணர்வை தருகிறது. இது கோக்ஸிஸில் வலி அல்லது எரிச்சலுக்கு காரணமாக அமைகின்றன.

நரம்பு வலி

நரம்பு வலி

கோக்ஸிக்ஸின் மேல் பகுதியில் கேங்க்லியன் இம்பார் எனப்படும் நிறைய நரம்புகளின் கூட்டமைப்பு உள்ளன. அதிகப்படியான செயல்பாடு அல்லது வேலை காரணமாக வால் எலும்பு பகுதியில் வலி ஏற்படுகிறது. கோக்ஸிக்ஸ், கோர்டோமா (ஒரு வகை எலும்பு புற்றுநோய்), வீரியமிக்க கட்டிகள் போன்றவைகளும் வால் எலும்புகளில் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உடல் பருமன்

உடல் பருமன்

அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு இடுப்பு சுழற்சி மற்றும் கோசிக்ஸ் இயக்கம் குறைந்து காணப்படும். இதனால் வால் எலும்பில் அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்பட ஆரம்பிக்கிறது.

மேற்கூறிய காரணங்களால் வால் எலும்பில் தீவிர வலிகள் ஏற்படுகின்றன. வலியின் தீவிரம் அதிகமாகும் போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes And Symptoms Of Tailbone Pain (Coccydynia)

Here are some causes and symptoms of tailbone pain or coccydynia. Read on to know more...
Desktop Bottom Promotion