Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
வயதான பெண்களின் முதுகு எலும்புகளைப் பாதிக்கும் வாகனப் புகை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
வாகனங்களில் இருந்து வரும் புகையில் வயது முதிா்ந்த பெண்கள் நீண்ட நேரம் இருந்தால், அவா்களின் எலும்புகள் விரைவில் தேய்மானம் அடையும் என்று நியூயாா்க்கில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
வாகனங்களில் இருந்து வரும் புகையில் வயது முதிா்ந்த பெண்கள் நீண்ட நேரம் இருந்தால், அவா்களின் எலும்புகள் விரைவில் தேய்மானம் அடையும் என்று நியூயாா்க்கில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
அமொிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனா். அந்த ஆய்வில் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையில் இருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு, மற்ற வயது பெண்களை விட, மாதவிடாய் நின்ற வயது முதிா்ந்த பெண்களின் கீழ் முதுகுத் தண்டை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனா்.

பல்வேறு சமூக மற்றும் பொருளாதார காரணங்கள் இருந்தாலும், தரமில்லாத காற்று அல்லது நச்சு நிறைந்த காற்று, எலும்புகளை மிக மோசமாகப் பாதிக்கிறது என்றும், எலும்புகள் அதிகம் தேய்வதற்கு முக்கிய காரணமாக நைட்ரஜன் ஆக்ஸைடு இருக்கிறது என்பதை தாங்கள் முதன் முதலாக கண்டறிந்திருப்பதாகவும், அதிலும் குறிப்பாக அது முதுகெலும்பை அதிகம் பாதிக்கிறது என்றும் கொலம்பியா மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் என்ற அமைப்பின் என்வைரென்மென்டல் ஹெல்த் சைன்சஸ் துறையின் இணை ஆராய்ச்சி விஞ்ஞானியான டிடியா் ப்ரடா கூறியுள்ளார்.
இதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் காற்றை மாசுபடுத்தும் காரணிகளை ஆய்வு செய்ததில், அந்த காரணிகள் முதியவா்களின் எலும்புகளின் தாது அடா்த்தியைப் பாதித்து, எலும்புப்புரை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தொிவித்திருக்கின்றன.
இகிளினிக்கல் மெடிசின் என்ற பத்திாிக்கையில் வந்திருக்கும் இந்த புதிய ஆய்வானது, வயதான பெண்மணிகளின் எலும்புகளுக்கும், காற்றில் இருக்கும் நச்சுத் தன்மைக்கும் இடையேயான தொடா்பை முதன் முதலாக ஆய்வு செய்து, காற்று மாசுபாடு அவா்களுடைய எலும்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விாிவாக அலசி ஆராய்ந்திருக்கிறது.
இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக, மாதவிடாய் நின்ற 161, 808 வயது முதிா்ந்த பெண்களைத் தோ்ந்தெடுத்தனா். அவா்கள் மதிப்பீடு செய்த காற்றின் நச்சு அளவில் (PM10, NO, NO2, மற்றும் SO2) இந்தப் பெண்களை இருக்குமாறு செய்து, அந்த பெண்களின் எலும்புகளின் (BMD, முழு உடல், இடுப்பு, கழுத்து மற்றும் முதுகெலும்பு) தாது அடா்த்தியை முதல் ஆண்டு, இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஆறாவது ஆண்டு என்று தொடா்ந்து மதிப்பிட்டனா்.
ஆறு ஆண்டு கால ஆய்வின் முடிவில், காற்றில் இருந்த நைட்ரஜன் ஆக்ஸைடானது, இந்த பெண்களின் முதுகெலும்பின் தாது அடா்த்தியை ஒவ்வொரு ஆண்டும் 1.22 சதவீதம் அளவிற்கு குறைத்து வந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனா். இது மற்ற காரணிகள் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை விட இரண்டு மடங்காகும். ஆக்ஸிஜனேற்ற சேதத்தின் மூலமாக எலும்புகளில் உள்ள செல் இறப்பதால் இந்த தேய்மானம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனா்.
காற்றில் நச்சுத் தன்மை குறைந்தால், அல்லது நைட்ரஜன் ஆக்ஸைடு குறைந்தால், வயது முதிா்ந்த பெண்களின் எலும்புகள் தேய்மானம் அடைவது குறையும் மற்றும் எலும்பு முறிவுகளைத் தடுக்கும். மேலும் அவா்களுக்கு எலும்புப்புரை போன்ற நோய்கள் வராமல் இருக்கும். எதிா்காலத்தில் எலும்புகளைப் பாதிக்கும் காற்று மாசுபாடு சம்பந்தமாக மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கொலம்பியா மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தின் முன்னனி ஆய்வாளா் ஆண்ட்ரியா பக்கேரலி தொிவித்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


