For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகமா உடற்பயிற்சி செய்வீங்களா? அப்ப உங்க மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு பாருங்க..

உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என்று தெரியும். இதுவே நீங்கள் அதிக உடற்பயிற்சி செய்பவராக இருந்தா? உங்க மூளை நலன் பாதிக்கப்படுமாம்.

|

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பார்கள். இது உணவுக்கு மட்டுமல்ல மூளைக்கும் சேர்த்து தான் என்கிறார்கள் மருத்துவர்கள். உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என்று தெரியும். இதுவே நீங்கள் அதிக உடற்பயிற்சி செய்பவராக இருந்தா? உங்க மூளை நலன் பாதிக்கப்படுமாம்.

MOST READ: கீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

இது குறித்து தற்போது நடந்த ஆய்வின் படி உங்களுடைய சிந்தனைகள், புரிந்து கொள்ளும் திறன் பலவீனப்படுகிறது என்கிறார்கள். இதற்கு விஞ்ஞானிகள் 'ஓவர் ட்ரெய்னிங் சிண்ட்ரோம்' என்று பெயரிட்டுள்ளனர். அதிக உடற்பயிற்சி உடலை பாதிக்கிறதோ இல்லையோ உங்க மூளையை பாதிக்கிறது. இதனால் உங்க மூளை நரம்புகள் சோர்வாகக் கூடும். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக காணலாம்.

MOST READ: அடிக்கடி முதுகு வலிக்குதா? அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளை திறன் குறைதல்

மூளை திறன் குறைதல்

அதிக உடற்பயிற்சி செய்யும் போது ஒருவரின் சிந்தனையும் முடிவு எடுக்கும் திறனும் மங்கிப் போய்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதனால் மூளை திறன் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. எவ்வளவு குறைவு ஏற்படும் என்பதை முன்னரே கண்டறிய இயலாதாம்.

விளையாட்டு வீரர்களுடனான ஆய்வு

விளையாட்டு வீரர்களுடனான ஆய்வு

உயிரியல் பத்திரிக்கையில் வெளியிட்ட ஆராய்ச்சி படி, இந்த ஆராய்ச்சிக்காக 35 வயதை அடைந்த 37 ஆண் விளையாட்டு வீரர்களை பரிசோதித்தனர். அவர்களை வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் படி கூறினர். 3 வாரங்களுக்கு பிறகு அவர்களின் உடற்பயிற்சியை 40 % வரை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. பிறகு அவர்களிடம் எம். ஆர். ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. அப்பொழுது தான் அவர்களின் மூளையின் சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் குறைந்திருப்பது ஸ்கேனிங்கில் தெரிய வந்துள்ளது.

மூளையின் முக்கிய பாகங்கள் பாதிக்கப்படும்

மூளையின் முக்கிய பாகங்கள் பாதிக்கப்படும்

விளையாட்டு வீரர்களின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பார்க்கும்போது, ​​அதிக உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கு மூளையின் பின்பகுதி பாதிக்கப்படுகிறது. மூளையின் இந்த பகுதி தான் முடிவுகளை எடுப்பது, விஷயங்களுக்கு இடையில் சரியானது எது தவறு எது என்பதைத் தேர்ந்தெடுப்பது, நடத்தை கட்டுப்பாடு மற்றும் உந்துதல் ஆகியவற்றிற்கு பொறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த பகுதி சில வேலைகளையும் தூண்டி விடுகிறது. எனவே பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் பிற்காலத்தில் எரிச்சலாகவும் பொறுப்பற்றவர்களாகவும் மாறுகிறார்கள்.

தீமைகள்

தீமைகள்

நம் உடல் திறனை விட அதிகமாக உடற்பயிற்சி செய்தால் இன்னும் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். அவையாவன:

* முதுகு வலி மற்றும் அங்குள்ள தசைகள் கிழிய வாய்ப்புள்ளது.

* தோல் தளர்வு ஏற்படும்

* சரும வடுக்கள் மற்றும் சரும நோய்கள் தென்படும்

* மூட்டு வலி மற்றும் எலும்பு முறிவு பிரச்சனைகள்

* களைப்பாக சோர்வாக எல்லா நேரமும் இருப்பீர்கள்

எனவே உங்கள் உடல் திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்து மூளையைக் காப்பாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Overtraining Syndrome Affect Brain Development?

Scientists have said that if you exercise too much, then it affects your ability to think and understand.
Desktop Bottom Promotion