For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?

மார்பக புற்றுநோய் என்பது உலகளவில் பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவான புற்றுநோயாகும்.

|

மார்பக புற்றுநோய் என்பது உலகளவில் பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். 184 நாடுகளில் 140 பெண்களில் இது பெரும்பாலும் கண்டறியப்பட்ட புற்றுநோயாகும். வயது, குடும்ப வரலாறு, பாலினம், மரபியல், புகைபிடித்தல், உடல் எடை மற்றும் உணவு போன்ற பல காரணிகள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. ஒரு ஆய்வின்படி, அனைத்து புற்றுநோய்களுக்கும் 35% காரணமாக இருப்பது உணவு முறையே. மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதிலும் குறைப்பதிலும் சத்தான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

breast-cancer-diet-foods-to-eat-and-avoid

அமெரிக்க புற்றுநோய் சங்கம் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் மற்றும் ஒமேகா 3 சாப்பிட பரிந்துரைக்கிறது. அதேபோல், ஆல்கஹால், சிவப்பு இறைச்சி, இனிப்பு பானங்களை அதிகம் உண்ணக்கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது. மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் அதன் வளர்ச்சிக்கு எந்தெந்த உணவுகள் வழிவகுக்கின்றன என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழங்கள்

பழங்கள்

பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள் மற்றும் கருப்பு ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் அதிக அளவு பாலிபீனால் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன. ஒரு ஆய்வின்படி, பெர்ரிகளில் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க தினமும் 1 கப் பெர்ரிகளை உட்கொள்ளுங்கள். மற்றொரு ஆய்வில், பிளம்ஸ் மற்றும் பீச் பழங்களில் இருக்கும் பாலிபினால்கள் மார்பக புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.

MOST READ:ஆண்களே! மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது...!

காய்கறிகள்

காய்கறிகள்

காலே, ப்ரோக்கோலி, கீரை, பீட் கீரைகள், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் மார்பக புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க உதவும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும், இந்த காய்கறிகளில் குளுக்கோசினோலேட்டுகள் உள்ளன. இது புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் ஒரு வகை இரசாயனமாகும். இவை புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.

ஆரஞ்சு நிற காய்கறிகள்

ஆரஞ்சு நிற காய்கறிகள்

கூடுதலாக, கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் கேண்டலூப்ஸ் போன்ற ஆரஞ்சு நிற காய்கறிகளில் கரோட்டினாய்டுகள் எனப்படும் சக்திவாய்ந்த கலவை உள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்த கரோட்டினாய்டுகள் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் .

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

பழுப்பு அரிசி, ஓட்மீல், சோளம், பார்லி மற்றும் முழு கோதுமை போன்ற முழு தானிய உணவுகளில் நல்ல அளவு பாலிபினால்கள் மற்றும் மெக்னீசியம், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மார்பக புற்றுநோய் அபாயத்தை நிர்வகிப்பதில் இவை அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

MOST READ:சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா?

கொழுப்பு அமிலங்கள்

கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அதிகமாக உட்கொள்வது கொழுப்பு அமிலங்களை குறைவாக உட்கொள்ளுபவர்களுடன் ஒப்பிடும்போது மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கோல்ட் வாட்டர் மீன், ஆலிவ் எண்ணெய், விதைகள், நட்ஸ் மற்றும் வெண்ணெய் பழங்களில் காணப்படுகின்றன.

மசால பொருட்கள்

மசால பொருட்கள்

மஞ்சள், புதிய மற்றும் சிவப்பு மிளகாய் போன்ற மசாலாப் பொருட்கள் மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மஞ்சள், குர்குமின் எனப்படும் சக்திவாய்ந்த கலவையைக் கொண்டுள்ளது, இது மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. ஒரு ஆய்வின்படி, மிளகாய் மற்றும் கேப்சிகம் வீரியம் மிக்க மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்கிறது.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலை மிதமாக உட்கொள்பவர்களுக்கு 30-50% மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மார்பக புற்றுநோய் குறித்து மேற்கொள்ளபட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு மூன்று மதுபானங்களை குடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 15% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ:டீ, காபி குடிப்பவரா நீங்கள்? அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க...!

டிரான்ஸ் கொழுப்புகள்

டிரான்ஸ் கொழுப்புகள்

டிரான்ஸ் கொழுப்புகள் என்பது வறுத்த உணவுகள், டோனட்ஸ், பேஸ்ட்ரிகள் மற்றும் கேக் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். ஒரு ஆய்வின்படி, டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் உருவாகலாம் என்று அறியப்பட்டுள்ளது.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி அதிகளவு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குறிப்பாக, மாதவிடாய் நின்ற பெண்கள் அதிக அளவில் சிவப்பு இறைச்சியை உட்கொண்டால் மார்பக புற்றுநோய் ஏற்படும் என ஒரு ஆய்வு கூறுகிறது. சிவப்பு இறைச்சிகளை அதிகளவு உட்கொள்ளாமல் இருந்தால், மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்.

இனிப்பு பானங்கள்

இனிப்பு பானங்கள்

சர்க்கரை பானங்கள் அதிகளவு அருந்துவது புற்றுநோயின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 100 மில்லி அளவு சர்க்கரை பானங்கள் குடிப்பதால் மார்பக புற்றுநோய் ஆபத்து 22% அதிகரிப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆதலால், இனிப்பு பானங்கள் அருந்துவதை குறைத்துக்கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

breast cancer diet foods to eat and avoid

Here we talking about the breast cancer diet foods to eat and avoid.
Story first published: Thursday, January 23, 2020, 15:37 [IST]
Desktop Bottom Promotion