Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும் சில எளிய குறிப்புகள்!
மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்திடவும், சரியான நேரத்தில் நோயின் தாக்கத்தை கண்டறியவும் மக்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இதற்கு இதுக்குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க செய்ய வேண்டும்.
மார்பக புற்றுநோய் பிற புற்றுநோய் வகைகளை காட்டிலும் சற்று முன்னிலை வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, இந்திய பெண்களின் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மைக்கும் இது முக்கிய காரணமாக அமைகிறது. க்ளோபோகன் 2018 இல் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த தரவுகளின்படி, இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இரு பாலினங்களும் உட்பட 11,50,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மார்பக புற்றுநோய்க்கான 5 ஆண்டு பாதிப்பு விகிதமானது 4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. தாமத நிலை மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவக்கூடிய சில பயனுள்ள குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மார்பக புற்றுநோய் என்பது, பெரும்பாலும் வளர்ந்த பொருளாதாரங்களுடன் தொடர்புடையதாக கருதப்பட்டது. இருந்தாலும் கூட, விரைவான நகரமயமாக்கல் மற்றும் வாழ்க்கை முறையின் மாற்றங்கள் இந்த நோய் வேகமாக உயர காரணமாக அமைந்தன. மிக முக்கியமாக, நோயுடன் தொடர்புடைய கடுமையான சமூக கலாச்சார களங்கம் மற்றும் அதன் பரிசோதனை முறை காரணமாக, மார்பக புற்றுநோய் வழக்குகள் மிகவும் குறைவாகவும் அல்லது தாமதமாகவும் அறிவிக்கப்படுகின்றன.
எனவே, மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்திடவும், சரியான நேரத்தில் நோயின் தாக்கத்தை கண்டறியவும் மக்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இதற்கு ஒரே வழி, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க செய்ய வேண்டும். ஆரம்பகால நோயறிதலுக்கான சாத்தியத்தை அதிகரிப்பது மற்றும் முன்கூட்டியே மார்பக புற்றுநோயின் அபாயங்களைத் தடுப்பது ஆகியவற்றின் அடிப்படையில், பெண்கள் பின்வருவனவற்றை முறையாக பயிற்சி செய்ய வேண்டும்:

ஒவ்வொரு மாதமும் மார்பக சுய பரிசோதனை செய்யவும்
மாதவிடாய் நின்ற பெண்கள் சில நாட்களுக்குப் பிறகு தங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மாதவிடாய் ஏற்படாத பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தினத்தை குறித்து வைத்து, மார்பக சுய பரிசோதனை செய்ய வேண்டும். பெண்கள் தங்கள் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவை அறிந்து கொள்ள வேண்டும். அக்குள் பகுதிக்கு அருகில் இருந்து விலா எலும்பு கூண்டு பகுதி வரை, மற்றும் அவர்களின் மார்பகங்கள் பொதுவான தோற்றத்தை தெரிந்தும், புரிந்தும் வைத்துகொள்ள வேண்டும். அவர்களின் முலைக்காம்பு பகுதிகளிலும், அக்குள் அருகிலும் கட்டிகள் அல்லது வலி ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். சாதாரண தோற்றத்தில் இருந்து மாற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று உணர முயற்சிக்க வேண்டும்.

மேமோகிராஃபி செய்யவும்
40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பெரும்பாலும் ஆண்டுதோறும் மேமோகிராஃபி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இது மார்பக திசுக்களில் ஏற்படும் மாற்றங்களைக் காண உதவக்கூடிய, குறைந்த அளவிலான எக்ஸ் ரே கதிர்களைப் பயன்படுத்தும் ஒரு முறையாகும். எந்த சந்தர்ப்பங்களிலும், வலி அல்லது கட்டி ஏதேனும் உருவானால் பெண்கள் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.
மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க பெண்கள் எடுக்கக்கூடிய வேறு சில தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இப்போது பார்க்கலாம்...

குடும்ப வரலாற்றை சரிபார்க்கவும்
உங்கள் குடும்பத்தில் யாரேனும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மேலும், அத்தகைய குடும்ப வரலாற்றை கொண்ட பெண்கள் தொடக்கம் முதலே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும், சேதமடைந்த அல்லது பிறழ்ந்த BRCA1 மற்றும் BRCA2 மனித மரபணுக்கள் போன்றவற்றை மரபணு சோதனை மூலம் கண்டறிய முடியும் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆல்கஹால் உட்கொள்வதைக் குறைக்கவும்
மிகவும் சிறிய அளவில் தான் ஆல்கஹால் எடுத்துக் கொள்வேன் என்று சிலர் கூறலாம். ஆனால், அந்த சிறிய அளவு ஆல்கஹால் கூட நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவு மது அருந்துவது மட்டுமே அறிவுறுத்தப்பட்டாலும் கூட, மதுவை தொடாமல் இருப்பதே மிகவும் சிறந்தது என்று கூறலாம்.

புகைப்பிடிப்பது கூடாது
புகைப்பிடிப்பதற்கும் மார்பக புற்றுநோயுக்கும் இடையேயான தொடர்பை குறிப்பிடத்தக்க அறிவியல் சான்றுகள் தெளிவுப்படுத்துகின்றன. குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இது மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவே புகைப்பழக்கத்தை முற்றிலுமாக கைவிடுவது தான் நல்லது.

உடல் எடையில் கவனம் தேவை
பல வாழ்க்கை முறை நோய்களைப் போலவே, அதிக எடை அல்லது பருமனாக இருப்பது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, உடல் ரீதியாக எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது முக்கியம். மேலும், குறைந்தது 150 நிமிட ஏரோபிக் பயிற்சி அல்லது 75 நிமிட வீரியமான உடற்பயிற்சி பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு முறை எப்போதுமே ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கு உதவிடுகிறது.

தாய்ப்பால் கொடுப்பது ஆபத்தை குறைத்திடும்
உண்மையிலேயே, தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் பாதிக்காமல் தடுப்பதற்கு மிகச் சிறந்த வழி. மேலும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமே நல்லது என்று தெரிந்த நமக்கு, தாய்ப்பால் கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் அது நல்லது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இருக்கும் சூழலும் அவசியம்
பெண்கள் ஒவ்வொரும் தாங்கள் இருக்கும் சூழலையும் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு நிறைந்த பகுதிகளில் இருப்பதை தவிர்த்தே ஆக வேண்டும்.

குறிப்பு:
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நம் வாழ்க்கையும், ஆரோக்கியமும் நம் கையில் தான் உள்ளன. எனவே, மேற்கூறிய விஷயங்களை நினைவில் கொண்டு செயல்படுவதன் மூலம் புற்றுநோய் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்திடலாம். மேற்கூறிய அனைத்து உதவிக்குறிப்புகளையும் நீங்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வதோடு, சக பெண்களுக்கும் அறிவுறுத்த மறவாதீர்கள்.



Click it and Unblock the Notifications