For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூளை சிறப்பாக செயல்பட காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்!

|

ஒரு தினத்தை எடுத்துக் கொண்டால், அதில் காலை உணவு மிகவும் முக்கியமானது. காலையில் நாம் சாப்பிடும் ஆரோக்கியமான உணவுகளின் மூலம், ஒரு நாளைக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடியும். அதிலும் காலையில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, காலையில் நாம் என்ன குடிக்கிறோம் என்பதே மிகவும் முக்கியம்.

அதிகாலையில் எழுந்ததும் ஆரோக்கியமான பானங்களைத் தேர்ந்தெடுத்து குடிப்பதன் மூலம் பல்வேறு நோய்கள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க முடியும். குறிப்பாக ஒருவரது கவனத்தை சிதறச் செய்யும் சிறு ஆரோக்கிய பிரச்சனைகளான தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

இந்த கட்டுரையில் நாம் இப்போது பார்க்கப் போவது, மூளை சிறப்பாக வேலை செய்வதற்கு காலையில் குடிக்க வேண்டிய சில ஆரோக்கியமான பானங்களைக் குறித்து தான். சரி, வாருங்கள் அது என்ன பானங்கள் என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் ஸ்மூத்தி

தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் ஸ்மூத்தி

தர்பூசணி மூளை மந்தமாக செயல்படுவதைக் குறைத்து, கவனம் மற்றும் செறிவை அதிகரிக்கும். தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஒருவரது உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் தான், மந்தத்தன்மை, மனக் குழப்பம் மற்றும் எதிலும் கவனத்தை செலுத்த முடியாத நிலை போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே தர்பூசணியுடன் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காயையும் சேர்த்து எடுத்தால், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைக்கும்.

தர்பூசணி, வெள்ளரிக்காய் ஸ்மூத்தி தயாரிப்பது எப்படி?

தர்பூசணி, வெள்ளரிக்காய் ஸ்மூத்தி தயாரிப்பது எப்படி?

* தர்பூசணி - 2 நீள துண்டுகள்

* வெள்ளரிக்காய் - பாதி

* ஐஸ் - 1 கப்

* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

* புதினா இலைகள் - 2

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து, உடனே பருக வேண்டும். வேண்டுமானால் இந்த பானத்தை மதிய வேளையிலும் பருகலாம்.

க்ரீன் ஜூஸ்

க்ரீன் ஜூஸ்

க்ரீன் ஜூஸ் மூளைக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. முக்கியமாக இந்த ஜூஸ் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் பணியை செய்யக்கூடியது. க்ரீன் ஜூஸில் ஏராளமான அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. முக்கியமாக இந்த ஜூஸ் ஒற்றைத் தலைவலியை விரைவில் சரிசெய்ய வல்லது.

ராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க...

க்ரீன் ஜூஸை தயாரிப்பது எப்படி?

க்ரீன் ஜூஸை தயாரிப்பது எப்படி?

* க்ரீன் ஆப்பிள் - 2

* செலரி - 6 துண்டுகள்

* கேல் கீரை - 8 இலைகள்

* எலுமிச்சை - 1/4

* இஞ்சி - ஒரு துண்டு

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து, பின் பருக வேண்டும். இந்த பானம் சற்று குடிப்பதற்கு கடினமாகத் தான் இருக்கும். ஆனால் இது மிகவும் ஆரோக்கியமான ஓர் காலை பானமாகும்.

தண்ணீர்

தண்ணீர்

ஆரோக்கியமான பானங்களின் பட்டியலில் தண்ணீர் இல்லாமல் இருக்காது. மனித உடலின் சீரான செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒருவரது உடலில் தண்ணீர் போதுமான அளவில் இருந்தாலே, உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பதுடன், மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒருவருக்கு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி வருவதற்கு முக்கிய காரணமே போதுமான நீர் உடலில் இல்லாமல் இருப்பதே ஆகும்.

லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தண்ணீர் அதிகம் குடிப்பதனால், பல வலிகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரைக் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, மூளையும் சிறப்பாக செயல்படும். முக்கியமாக தண்ணீர் உடல் எடையையும் குறைக்க உறுதுணையாக இருக்கும்.

வெதுவெதுப்பான மிளகு நீர்

வெதுவெதுப்பான மிளகு நீர்

பொதுவாக உடலில் வலியைத் தூண்டும் பி என்னும் வேதிப்பொருள் வெளியிடப்படுவதன் மூலம் தான் நாம் வலியை உணர்கிறோம். ஆனால், மிளகில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், நரம்புகளின் நுனிப் பகுதியை உணர்விழக்கச் செய்துவிடுவதால், மூளைக்கு அனுப்பப்படும் வலி செய்தியானது தடுக்கப்பட்டு, தலை வலி வருவது குறையும்.

மேலும் கேப்சைசின் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும் முக்கிய காரணியின் திறனைக் குறைக்கிறது. இதனால் ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் குறையும். எனவே உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமானால், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் சிறிது மிளகுத் தூளை சேர்த்து கலந்து குடியுங்கள்.

சோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா?

புதினா டீ

புதினா டீ

புதினா டீயில் காப்ஃபைன் என்பதே இல்லை. ஆகவே இது ஆரோக்கியமான பானங்களுள் ஒன்றாகும். மேலும் புதினா ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான பொருள். புதினா மற்றும் மூளை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்களுக்கு தினமும் புதினா எண்ணெய், புதினா டீ பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன் முடிவில் புதினா எண்ணெயை மற்றும் டீ பயன்படுத்தியவர்களுக்கு நினைவாற்றல் அதிகரித்திருப்பதும், அவர்கள் மூளை வேகமாக செயல்படுவதும் தெரிய வந்தது.

எனவே உங்கள் மூளை ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் செயல்பட நினைப்பவர்கள், புதினா டீயை தினமும் குடியுங்கள். அதிலும் காலையில் எழுந்ததும் ஒரு கப் புதினா டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

வெதுவெதுப்பான இஞ்சி கரோப் பானம்

வெதுவெதுப்பான இஞ்சி கரோப் பானம்

இஞ்சியின் மருத்துவ குணங்களால், அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் முதுமை காலத்தில் சந்திக்கும் மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பைத் தடுக்கும்.

இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நரம்பியக்கடத்தல் கோளாறுகள் மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்கும். இதற்கு இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

தினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா?

இஞ்சி கரோப் பானம் தயாரிப்பது எப்படி?

இஞ்சி கரோப் பானம் தயாரிப்பது எப்படி?

* இஞ்சி - 1 துண்டு

* கரோப் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்

* பால் அல்லது நீர் - 2 கப்

* தேன் - 4 டீஸ்பூன்

* பட்டைத் தூள் - 1 சிட்டிகை

* ஜாதிக்காய் - 1/2 சிட்டிகை

ஒரு பாத்திரத்தில் நீர் அல்லது பால் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, பின் அதில் இஞ்சி சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின் அதில் இதர பொருட்களை சேர்த்து கலந்து, பருக வேண்டும்.

குறிப்பு: கரோப் பவுடர் என்பது காப்ஃபைன் இல்லாத பவுடர் மற்றும் இது கொக்கோ டோஸ்ட்டில் இருக்கும். காப்ஃபைன் தவிர்க்க விரும்புவோர், இந்த பவுடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Brain-Healthy Beverages You Should Have For Breakfast

Here are some brain healthy beverages you should have for breakfast. Read on to know more...