Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும்
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
தக்காளியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
தக்காளி உணவின் சுவையை அதிகரிக்கும் ஓர் அற்புதமான உணவுப் பொருள். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தக்காளியை நாம் தக்காளி சாஸ், தக்காளி சூப் அல்லது தக்காளி ஜூஸ் என பல வழிகளில் உட்கொள்ளலாம். அதோடு தக்காளி அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளும் கூட. தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கியமான சத்துக்கள் அதிகம் உள்ளன.

இத்தகைய தக்காளியை சரியான வழியில் ஒருவர் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும். பலரும் தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறுவார்கள். ஆனால் தக்காளியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இன்றைய காலகட்டத்தில் நோயெதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை நாம் அனைவருமே அறிவோம். ஆகவே பலரும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தக்காளி பெரிதும் உதவும். ஏனெனில் தக்காளி உடலில் உள்ள வைட்டமின் சி குறைபாட்டை பூர்த்தி செய்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடித்து, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துங்கள்.

கண் பார்வை மேம்படும்
கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பச்சை காய்கறிகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் கண் பார்வையை அதிகரிக்க தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி சாப்பிடுவதால், தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ பார்வை பிரச்சனையைப் போக்கி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உடல் எடையைக் குறைக்கும்
யாரெல்லாம் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறார்களோ, அவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடல் எடை வேகமாக குறைவதோடு, சில நாட்களிலேயே உடல் எடை குறைந்திருப்பதை நன்கு காணலாம். இது தவிர தக்காளி ஜூஸ் குடிப்பது சருமத்திற்கும் நல்லது. நிபுணர்களின் கூற்றுப்படி, தக்காளியில் தோலில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

வயிற்று சூடு
வயிற்றில் உஷ்ண பிரச்சனையை நீங்கள் சந்தித்தால், எதையும் சாப்பிட தோன்றாது. நீங்களும் இம்மாதிரியான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடியுங்கள். இதனால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும் மற்றும் நாள் முழுவதும் நன்றாக உணர்வீர்கள். அதோடு தக்காளியை சாப்பிட்டால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

சருமத்திற்கு நல்லது
தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதுவும் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸை ஒருவர் குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவோடும் பளிச்சென்றும் ஜொலிக்கும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்கும்
வயிற்றில் புழு பிரச்சனையால் ஒருவர் அவதிப்பட்டு வந்தால், ஒரு தக்காளியை வெட்டி, மிளகுத் தூள் சேர்த்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களில் வயிற்று புழு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இதயத்திற்கு நல்லது
தக்காளியை தினமும் சாப்பிடுவது இதயம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்க உதவும். அதுவும் தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் தடுக்கப்பட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் குறையும்.



Click it and Unblock the Notifications
