For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு எடை குறைய வேண்டுமா? அப்ப இந்தப் பழம் சாப்பிடுங்க..!

|

செர்ரிப்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பழம் செர்ரி. சுவை அருமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இவை மிகச் சிறந்த ஊட்டச்சத்து மதிப்பையும் வழங்குகின்றன. ஒவ்வொரு செர்ரி மரமும் ஒவ்வொரு அறுவடை காலத்திலும் சுமார் 7000 செர்ரிகளை உற்பத்தி செய்கிறது. ஒரு செடியிலிருந்து வாரம் ஒரு முறை இரண்டு கூடைகள் பழம் கிடைக்கும். அவை மஞ்சள் முதல் கருப்பு வரை பல வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆனால் பெரும்பாலும் செர்ரிப்பழம் சிவப்பு நிறத்தில்தான் நமக்கு கிடைக்கும்.

இந்த செடியை விவசாயிகள் மட்டுமே வளர்க்க முடியும் என்றில்லை நாமும் நம் வீடுகளில் வளர்க்கலாம். ஜூஸ், சுவிட், கேக் போன்றவற்றில் செர்ரிப்பழங்களை பயன்படுத்துகின்றன. இந்த பழம் குளிர் பிரதேசங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது. செர்ரிப்பழங்களில் அதிகளவு வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகளை ஏற்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செர்ரியில் உள்ள சத்துக்கள்

செர்ரியில் உள்ள சத்துக்கள்

செர்ரிப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி, இ இருக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அவசியம். செர்ரிகளில் வைட்டமின்கள் ஏராளமாக இருப்பது அதிசயமான பழமாக மாறும்.

மேலும், கால்சியம், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும், கார்போ ஹைட்ரேட்டுக்கள், புரோடீன்கள், நார்ச்சத்துக்கள் போன்றவையும் செர்ரிப்பழத்தில் காணப்படுகின்றன.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

செர்ரி பழம் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைப்பதில் பேருதவி புரிகிறது. இந்த பழம் இயற்கையிலேயே ரத்த ஓட்டத்தை தூண்டும் ஒரு பழம் ஆகும்.

எனவே இதைத் தினமும் சாப்பிட்டுவந்தால் உடலின் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். செர்ரிப்பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது

செர்ர்ப்பழம் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் இதய ஆரோக்கியமாக இருக்கும். செர்ரி உடலில் உள்ள எந்தவொரு புற்றுநோய் உயிரணுக்களையும் சரிபார்க்கவும், கட்டுப்பாடில்லாமல் வளரவிடாமல் தடுக்கவும் உதவுகின்றது.

மேலும், முதுமை மற்றும் தலைவலி போன்றவற்றுக்கு எதிராக போராட உடலுக்கு உதவுகிறது. செர்ரி பழத்தில் வைட்டமின் "ஈ" சக்தி நிறைந்திருப்பதால், இது உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்தை பாதுகாக்கிறது.

MOST READ:தலைவலி வருவதற்கு முன்னாடியே அத நிறுத்தனுமா? இத பண்ணுங்க...!

தூக்கத்தை தூண்டும்

தூக்கத்தை தூண்டும்

செர்ரிகளில் மெலடோனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால், இது தூக்கத்தை தூண்டும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் தூக்கம் மிக முக்கியமானது. செர்ரிப்பழம் சாப்பிடுவதால் நல்ல தூக்கத்தை பெற முடியும். அதோடு சருமம் பளபளக்கும்.செர்ரிகளில் உள்ள மெலடோனின் வேதிப்பொருள், கருப்பட்டி, ஸ்ட்ராபெர்ரிகளை விட ஐந்து மடங்கு அதிகம் மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்த உதவுகிறது.

இந்த பழம் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தைத் தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தி வீரியமிக்க தாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியடையும்.

சரும பாதுகாப்பு

சரும பாதுகாப்பு

செர்ரிப்பழத்தை உண்பதால், உடலுக்கு தேவையான மல்டிவைட்டமின் அளவு சத்து கிடைக்கிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. செர்ரி சாறு கருமையான புள்ளிகளை அழித்துத் தோல் ஒளிர உதவுகிறது. புத்துணர்ச்சியடையச் செய்ய உதவுகிறது.

மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில், மிக உயர்ந்த அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செர்ரிப்பழத்தில் இருக்கிறது. இது உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் வயதாகும் செயல்முறையைக் குறைக்க உதவுகிறது. செர்ரி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பு தன்மை பெறும் மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

வைட்டமின் சி

வைட்டமின் சி

செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே, தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும். உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். உடலுக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும்.

முடி வளர்ச்சிக்கு உதவும்

முடி வளர்ச்சிக்கு உதவும்

செர்ரிப்பழங்களை சாப்பிடுவது உடல் மற்றும் சருமத்திற்கு மட்டும் நல்லது மட்டுமல்ல, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். செர்ரிகளில் உள்ள வைட்டமின்கள் முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும் திறன் கொண்டவை. செர்ரிகளில் உள்ள வெவ்வேறு வைட்டமின்கள் ஆரோக்கியமான முடியைப் பராமரிக்க உதவுகின்றன.

வைட்டமின் ஏ முடி மற்றும் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் பி உச்சந்தலையில் உட்பட உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வைட்டமின் சி முடிக்கு மிகவும் அவசியம். இது வேர்களிலிருந்து உடைவதைத் தடுத்து முடியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், முடி உதிர்தலையையும் தடுக்கிறது.

MOST READ:பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

செரிப்பழ உணவுகள்

செரிப்பழ உணவுகள்

செர்ரிப்பழத்தைக் கொண்டு ரசம், ஜாம், ஜெல்லி, ஜூஸ் ஆகியவை தயாரிக்க முடியும். மேலும் கேக்குகளிலும் செர்ப்பழம் பயன்படுத்தப்படுகிறது.

தேவையான அளவு பழங்களை எடுத்து, சிறிதளவு தண்ணீருடன் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். மெல்லிய துணிப்பையினால் அதை வடிகட்டி அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கவேண்டும். இப்போது சுவையான செர்ரிப்பழ ஜூஸ் ரெடி.

செர்ரிப் பழங்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கிவிட வேண்டும். சம அளவு சர்க்கரை சேர்த்து தேவையான விகிதத்தில் எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்கவிட வேண்டும். தகுந்த பதத்தில் அதை அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான செர்ரி ஜாம் ரெடி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Cherries For Skin, Hair And Health

Read to know the benefits of cherries for skin, hair And health.
Story first published: Friday, November 22, 2019, 17:23 [IST]
Desktop Bottom Promotion