Latest Updates
-
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
கார்டியோ உடற்பயிற்சிகளை அதிகம் செய்வீங்களா? அப்ப இந்த பிரச்சனையை சந்திப்பீங்க...
கார்டியோ பயிற்சிகளை அதிகமாகச் செய்து வந்தால் சில நேரங்களில் நல்ல பலன்களைத் தருவதற்குப் பதிலாக பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உண்டு. இதயத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கும் போது இதயம் பலவீனமடைய வாய்ப்புண்டு.
கார்டியோ எனப்படும் இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளை அதிகமாகச் செய்து வந்தால் அவை நமது முழு உடலையும் திடகாத்திரமாக வைத்திருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவை சில நேரங்களில் நல்ல பலன்களைத் தருவதற்குப் பதிலாக பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உண்டு. இதயத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கும் போது இதயம் பலவீனமடைய வாய்ப்புண்டு.

இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளை அதிகமாக செய்யும் போது அவை சீரான இதயத் துடிப்பை தொந்தரவு செய்யலாம். மற்றும் இரத்தத்தை உந்தித் தள்ளும் இதயத்தின் வலது வென்ட்ரிக்கிலுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கலாம்.
இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளை மட்டுமே தினமும் 60 நிமிடங்களுக்கு அதிகமாக செய்து வந்தால் அவை நமது முழு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தடகள வீரா்கள் வாரத்திற்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக தீவிரமான இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால், அவை அவா்களுடைய இதயத்தை பாதிக்கும். அதை எளிதில் குணப்படுத்த முடியாது.

நல்ல உடற்பயிற்சிகள் எப்போது தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன?
இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகள் உண்மையாகவே நல்ல பலன்களைத் தரக்கூடியவை. அவை நமது இதயத் துடிப்பை அதிகாிக்கின்றன. அதன் மூலம் நமது இரத்தத்திற்கு அதிகமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகள் இயற்கை வலி நிவாரணியான என்ட்ரோஃபினை அதிகாிக்கிறது.
ஏரோபிக் என்று அழைக்கப்படும் இதயம் சம்பந்தமான பயிற்சி நமது நோய் எதிா்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதயம் இரத்தத்தை உந்தித் தள்ள உதவுகிறது. மற்றும் நமது தாங்கும் சக்தியை அதிகாிக்கிறது. ஆனால் அதே நேரம் நீண்ட நேரமாக இதயம் சம்பந்தமான பயிற்சியை மட்டும் செய்யும் போது அது நமது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. மேலும் பின்வரும் எதிா்வினை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

வளா்சிதை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் உடல் எடை குறைவதைத் தடுத்தல்
பொதுவாக நாம் உடற்பயிற்சி செய்யும் போது அது நமது கொழுப்பு மற்றும் தசைகளை எாிக்கிறது. ஆனால் குறைவான அளவில் தான் தசைகளை எாிக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக கார்டியோ பயிற்சிகளைச் செய்யும் போது அவை அதிகமான தசைகளை எாித்துவிடும். ஏனெனில் கார்டியோ பயிற்சிகளை அதிகம் செய்யும் போது, நமது உடலானது அப்போது வெளிப்படும் அதிக ஆற்றலை தாங்கத் தடுமாறுகிறது. அதனால் நமது வளா்சிதை மாற்றம் குறைகிறது மற்றும் உடல் எடை குறைவதும் தடுக்கப்படுகிறது.

மாதவிடாய் சுழற்சி தடைபடுதல்
நீண்ட நாட்களாக புரோஜெஸ்டிரோனின் அளவு அதிகமாக இருந்தால் அது டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹாா்மோன்களை அதிகாிக்கச் செய்துவிடும். புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஆகியவற்றிற்கு இடையே உள்ள சமநிலை பாதிப்படையும் போது, மாதவிடாய் சுழற்சியில் தடை ஏற்படுகிறது. மேலும் முகப்பருக்களும் அதிகம் ஏற்படுகின்றன.

உடல் எடை குறைந்தாலும், உடல் மென்மையாக இருத்தல்
உடல் எடை குறையும் போது நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆனால் உடல் எடை குறைவதால், நாம் விரும்பும் உடல் அமைப்பை நாம் பெறப் போகிறோம் என்று அா்த்தம் அல்ல. நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவு மற்றும் மெல்லிய தசைகள் போன்றவை நமது உடல் அமைப்பைத் தீா்மானிக்கின்றன. இதயம் சம்பந்தமான பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பையும் மற்றும் மெல்லிய தசையையும் குறைக்கிறது. அதனால் நமக்கு தேவையான உடல் அமைப்பு கிடைக்காமல், சிறிய உடல் அமைப்பைப் பெற வாய்ப்பு உண்டு.

தூக்கத்தில் பிரச்சினை ஏற்படுதல்
நாம் இதயம் சம்பந்தமான பயிற்சிகளை அதிகம் செய்து வந்தால் தூக்கம் வருவதில் பிரச்சினைகள் ஏற்படும். உடற்பயிற்சிகள் செய்வதில் ஆா்வக் குறைபாடு ஏற்படும். மேலும் கார்டிசோல் என்ற அழுத்த ஹாா்மோன் இரவு நேரத்தில் அதிகம் வெளியேறி தூக்கத்தைப் பாதிக்கும். பொதுவாக கார்டிசோல் ஹாா்மோனின் அளவு காலை நேரத்தில் அதிகமாகவும், இரவு நேரத்தில் குறைவாகவும் இருக்க வேண்டும். ஆகவே மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதற்குப் பதிலாக காலை நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது.

உடலில் அதிக கொழுப்பு தேங்குதல்
அளவுக்கு அதிகமாக இதயம் சம்பந்தமான பயிற்சிகளைச் செய்யும் போது அவை அதிக அளவிலான தசைகளை எாிக்கும். அதனால் நமது வளா்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும். ஆனால் கொழுப்பு குறையாது.

வார இறுதி நோய் எதிா்ப்பு அமைப்பு
அளவுக்கு அதிகமாக கார்டிசோல் ஹாா்மோன் சுரந்தால் அது நமது தசைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மற்றும் இதய நோய்களையும் ஏற்படுத்தும். கார்டிசோல் என்ற அழுத்த ஹாா்மோன் காலை நேரத்தில் அதிகமாகவும், மதிய நேரத்தில் குறைவாகவும், இரவு நேரம் முழுவதும் குறைவான நிலையிலும் இருக்க வேண்டும். கார்டிசோல் ஹாா்மோன் உயரும் போது இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு அதிகாிக்கும். அதனால் இரத்த அழுத்தம் அதிகாிக்கும். மேலும் கலோாிகள் அனைத்தும் கொழுப்பாக மாறி வயிற்றில் தேக்கமடையும். அதனால் அது நமது நோய் எதிா்ப்பு சக்தியைப் பாதிக்கும்.

அளவுக்கு அதிகமாக கார்டிசோல் ஹாா்மோன் சுரந்தால் அது நமது தசைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மற்றும் இதய நோய்களையும் ஏற்படுத்தும். கார்டிசோல் என்ற அழுத்த ஹாா்மோன் காலை நேரத்தில் அதிகமாகவும், மதிய நேரத்தில் குறைவாகவும், இரவு நேரம் முழுவதும் குறைவான நிலையிலும் இருக்க வேண்டும். கார்டிசோல் ஹாா்மோன் உயரும் போது இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு அதிகாிக்கும். அதனால் இரத்த அழுத்தம் அதிகாிக்கும். மேலும் கலோாிகள் அனைத்தும் கொழுப்பாக மாறி வயிற்றில் தேக்கமடையும். அதனால் அது நமது நோய் எதிா்ப்பு சக்தியைப் பாதிக்கும்.
கீழே சில கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 6 கேள்விகளுக்கு மேல் ஆம் என்ற பதில் வந்தால் நாம் அதிகமாக இதயம் சம்பந்தமான பயிற்சிகளைச் செய்து வருகிறோம் என்று பொருள்.
- நாள் முழுவதும் சோம்பலாக அல்லது சோா்வாக இருப்பது போல் உணா்கிறோமா?
- இரவு தூங்குவதில் பிரச்சினை இருக்கிறதா? அல்லது இரவில் போதுமான நேரம் நன்றாகத் தூங்கிய பின்பும் நன்றாக ஓய்வு எடுக்கவில்லை என்ற உணா்வு ஏற்படுகிறதா?
- உடல் இயக்கம் (வலிமை, வேகம், தாங்கும் தன்மை) வளா்ச்சி அடைவதற்கு பதிலாக குறைகிறதா?
- அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறதா?
- உடலின் உயரத்திற்கு தேவையான அளவிற்கு இல்லாமல் கொழுப்பின் அளவு குறைவாகிறதா?
- கொழுப்பின் அளவு குறையவில்லையா?
- பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையாக இருக்கிறதா?
- உடற்பயிற்சிகளைுக்கு இடையில் சாதாரண நிலைக்கு வருவதற்கு பிரச்சினை இருக்கிறதா?
- அழுத்த முறிவு, எலும்பு முறிவு அல்லது பிற நாள்பட்ட வலி போன்றவை ஏற்பட்டிருக்கிறதா?

இறுதியாக
வயது வந்த ஒருவா் வாரம் 150 நிமிடங்கள் கார்டியோ பயற்சிகளைச் செய்யலாம் என்று பாிந்துரைக்கப்படுகிறது. இதய பயிற்சியின் முழு பலனையும் பெற வேண்டும் என்றால் நமது இதயத் துடிப்பு 50 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications